நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி
வெள்ளிக்கிழமை
இன்று
ஞானசம்பந்தப் பெருமான்
அருளிச்செய்த
திருக்கடைக்காப்பு
தலம் திரு அண்ணாமலை
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்
தழைத்த சடையார் விடையொன்றேறித் தரியார் புரமெய்தார்
பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்தங் குறங்கும் சாரல் அண்ணா மலையாரே.. 1/69/4
இறைவன் இழை போன்ற இடையினை உடைய உமையம்மையை
தன் மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர்.
அடர்ந்து வளர்ந்த சடையினை உடையவர்.. விடையின் மீது சென்று தகுதியில்லாதவரின் முப்புரங்களையும் எரித்து சாம்பலாக்கியவர் அண்ணாமலை தலத்தில் உறைகின்றார்...
அந்த அண்ணாமலை யாதெனில் -
தன்னுடன் மேய்ந்திருந்து
வழி மறந்த துணையைக் கண்டறிய இயலாமல்
பெரிய கையை உடையதும் மதம் பொருந்தியதுமான களிறு , குரல் கொடுத்தபடி அங்குமிங்கும் அலைந்து திரிந்து களைப்பினால் உறங்குகின்ற பசுஞ்சாரலை உடைய பெருமையைக் கொண்டது...
(பிடி - பெண் யானை.,
களிறு - ஆண் யானை)...
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் நம சிவாய
***

அண்ணாமலையானே சரணம். ஓம் நமச்சிவாய.
பதிலளிநீக்குஅண்ணாமலையாரே சரணம்..
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்..