நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி
வியாழக்கிழமை
தலம் கோடைநகர்
வல்லக்கோட்டை..
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ... தனதான
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
ஆகமல மாகி நின்று ... புவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி நின்று ... விளையாடிப்
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று ... பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு ... தருவாயே..
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன் ... மருகோனே.
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர மாவு நின்று
தேடஅரி தான வன்றன் ... முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த ... குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த ... பெருமாளே.
-: அருணகிரிநாதர் :-
நன்றி
கௌமாரம்
முருகா முருகா
***

பூவுலகின் வாழ்க்கை முறையில் சிக்காதார் யார்? அருணகிரிநாதர் பட்டுத் திருந்தியவர். அந்த ஞானம் எல்லோருக்கும் வாய்க்குமா? முருகா முருகா...
பதிலளிநீக்குமுருகா முருகா..
நீக்குஎன்ன ஒரு சந்த நயத்துடன் பாடல்கள் புனைந்திருக்கிறார்... நமக்கெல்லாம் இந்த கலிகாலத்தில் கடவுள் காட்சியளிப்பதுமில்லை, வரம் தருவதும் இல்லை. இப்போது இங்கு வர கடவுளுக்கே பயம் போலும்.
பதிலளிநீக்குபூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
நீக்குபூமிதனில் வேணு மென்று ... பொருள்தேடி....
தெய்வத் தமிழ்..
முருகா... முருகா
திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குமுருகா... முருகா...
நீக்கு