நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 23, 2026

போற்றி... போற்றி..

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி ஹஸ்தம்
செவ்வாய்க்கிழமை
 

கைத்தலபேசியின்  திறன் குறைவினால்
மாணிக்கவாசகர் குருபூஜையாகிய ஆனி மகத்தன்று 
பதிவு வெளியிட முடியவில்லை..

ஆனி ஹஸ்தமாகிய இன்று பணிந்து கொள்கின்றேன்..


இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110

கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றம் முரண் உறு நரகிடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி 120 
மாணிக்கவாசகர்

ஓம் நம சிவாய
***

8 கருத்துகள்:

  1. மாணிக்கவாசகர் தாள் பணிந்து சிவபெருமானைத் தொழுவோம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மாணிக்கவாசகர் அருளிய பாடலைப் பாடி ஆனந்தமடைந்தேன்..ஆண்டவனின் அடியவரையும், ஆண்டவனையும் தொழுது பணிந்தேன். ஓம் நமசிவாய போற்றி.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.,
      நன்றியம்மா

      நீக்கு
  3. ஆனிஹஸ்தம் நாளில் மாணிக்கவாசகர் தினத்தை நினைவு கொண்டோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.,
      நன்றியம்மா

      நீக்கு
  4. போற்றித் திருநாமங்கள் படித்து மகிழ்ச்சியுற்றேன்.

    தொடர்ந்து பதிவிடுவதற்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.,
      நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..