கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் அவர்களால் பாடப்பட்டதாகும்..
மாதாந்திர நடை திறப்பின் போது மழை பிடித்துக் கொண்டது.. இரவாகியும் விடவில்லை.. அப்போது கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் அவர்கள் ஐயப்பனை நினைந்து மனமுருகிப் பாடினார்...
சிறு பொழுதில் மழை நின்றது.. அன்றைய
சம்பிரதாயங்கள் தடையின்றி நிறைவேறின...
அதற்குப் பின் சந்நிதி நடை அடைக்கப்படுகின்ற போதெல்லாம் பாடப்படுவதாயிற்று..
ஸ்வாமி ஐயப்பன் என்ற திரைப் படத்தின் வாயிலாக தமிழ் நெஞ்சங்களிலும் இந்தக் கீர்த்தனம் இடம் பிடித்தது..
ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..
ஹரியாகிய திருமாலின் ஆசிகள் நிறைந்தவர், பேரண்டத்தை இயக்குபவர், ஹரியின் அருட்சாரமாக இருப்பவராகிய தங்களது பாதங்களை வணங்குகிறோம். தீய சிந்தனைகளை அழிப்பவரே, இந்த அண்டத்தை ஆள்பவரே, ஹரி ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்..
சரண கீர்த்தனம் பக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தனாலயம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..
சரணடைவோரின் பாடலை விரும்புபவர். பக்தர்களின் மனதில் நிறைந்தவர், பக்தர்களை ஆள்பவர், ஆடலை விரும்புபவர். உதிக்கும் சூரியனாக பிரகாசிப்பவர். உயிர்களின் நாயகராகிய ஹரி ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்..
பிரணயசத்யகம் பிராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
பிரணவமந்திரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..
உண்மையின் உணர்வாக இருப்பவர். எல்லா உள்ளங்களின் விருப்பமாக இருப்பவர். பேரண்டத்தைப் படைத்தவர். சுடரொளி வீசும் ஒளிவட்டமாய் திகழ்பவர். 'ஓம்' எனும் மந்திர வடிவானவர். பக்தர்களின் பாடல்களை விரும்புபவராகிய ஹரி ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்!..
துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் தேவவர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..
குதிரை வாகனம் உடையவர் அழகிய திருமேனி கொண்டவர் ஆசிர்வதிக்கப்பட்ட தண்டாயுதத்தை ஏந்துபவர். ஒய்யாரமானவர். எமது குரு ஆனவர். பக்தர்களின் பாடல்களை விரும்புபவராகிய ஹரி ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்!..
திரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்
திரிநயனம் பிரபும் திவ்யதேசிகம்
திரிதச பூஜிதம் சிந்திதப்பிரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..
மூவுலங்களாலும் வணங்கப்படுபவர், தேவர்களின் ஆன்மாவாகத் திகழ்பவர்.சிவனின் உருவமாக இருப்பவர். தேவர்களால் வணங்கப்படுபவர். தினந்தோறும் உங்களை
மூன்று முறை வணங்குகின்றோம். எங்கள் மனம் நிறைந்த ஹரி ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்!..
பவபயாபகம் பாவுகாவகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாகனம் திவ்ய வாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..
அச்சத்தை அழிப்பவர். செழிப்பைக் கொணர்பவர். இந்த அண்டத்தை ஆள்பவர். திருநீற்றை ஆபரணமாக அணிந்தவர். வெள்ளை யானையை வாகனமாகக் கொண்ட ஹரி ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்!..
களம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்
களபகோமளம் காத்ரமோகனம்
களபகேசரி வாஜிவாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..
இனிமையான, மிருதுவான புன்முறுவல் உடையவர். அழகிய திருமுகத்தை உடையவர். இளமையும், மென்மையும் உடையவர். சொக்க வைக்கும் பேரழகையும், யானை, சிங்கம், குதிரை - இவற்றை வாகனமாகவும் கொண்ட - ஹரி ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்!..
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..
பக்தர்களால் நேசிக்கப்படுபவர், பக்தர்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்பவர், வேதங்களால் துதிக்கப்படுபவர், ஞானியரை ஆசிர்வதிப்பவர். வேதங்களின் சாரம் ஆனவர். தெய்வீக இசையை விரும்புகின்ற ஹரி ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்!..