நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வெள்ளிக்கிழமை
திருஞானசம்பந்தர்
சைவத்தை மீட்டெடுக்க திருமறைக்காட்டில் இருந்து
மதுரையம்பதியை அடைந்தார்...
பாண்டிமாதேவியும்
அமைச்சர் குலச்சிறையாரும்
எதிர்கொண்டு அவரை வரவேற்றனர..
அப்போது
ஞானசம்பந்தப் பெருமான்
பாடியருளிய திருப்பதிகம்..
மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண் 120
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவது இதுவே.. 1
வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்
கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்
ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினி ல் இயற்கையை ஒழித்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே..2
செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்திரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவும்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே..3
நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத் தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே..6
பன்னலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுண் ஞான சம்பந்தன் செந்தமிழிவை
கொண்டு
இன்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்தவீற் றிருப்பவர் இனிதே..11
திருச்சிற்றம்பலம்
-: திருஞானசம்பந்தர் :-
நன்றி
பன்னிரு திருமுறை
திருப்பதிகத்தின் முதல் நடு ஈறு எனப் பாடல்களைக் கொள்வதும் பாராயணத்திற்கு ஒப்பானதே..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..