நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 11, 2025

சிறுவாபுரி

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை


தந்ததன தனதான தந்ததன தனதான 
தந்ததன தனதான ... தனதான

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற ... வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனு முமையாளு ... மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
     மஞ்சினனு மயனாரு ... மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
     மைந்துமயி லுடனாடி ... வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
     புந்திநிறை யறிவாள ... வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு ... வடிவேலா

தண்தரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
     தண்டமிழின் மிகுநேய ... முருகேசா

சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

இத்திருப்புகழ் பாராயணத்தினால் 
நல்ல மனை, சொந்த வீடு அமையும் என்பது அன்பர்களின் நம்பிக்கை..

முழுக்க முழுக்க
ஆனந்தச் சந்தங்கள்
நிறைந்த திருப்புகழ் இது..

முருகா முருகா
சிவாய நம ஓம்
**

2 கருத்துகள்:

  1. மனதுக்குள்ளே குடியேற, மயில்மேல் அமர்ந்தோனே உன்னை இறைஞ்சுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருவான் வடிவேலன்

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..