நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 18, 2024

ஐப்பசி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி முதல் நாள்
வெள்ளிக்கிழமை


ஐப்பசி

தமிழ்க் கணிப்பின்படி ஆண்டின் ஏழாவது மாதம்.. 

துலா மாதம் என்ற சிறப்புடன் சுப முகூர்த்தங்கள் நிறைந்த புண்ணிய மாதம்....

ஐப்பசியின் முதல் நாளில்
மயிலாடுதுறையின்  காவிரியில் கங்கை வந்து கலப்பதாக ஐதீகம்..

ஐப்பசி மாதத்தில் தான் இருள் எனும் தீமை அகன்று ஒளி எனும் நலம் பெருகுவதான  தீபாவளித் திருநாள்.. 

தீபாவளி - ஐப்பசி 14  வியாழக்கிழமை.. 
(31 அக்டோபர் 2024). 

தீபாவளி நாளில் தான் கேதார கௌரி பூஜை.. 


இந்நாளில் தான் ஈசன் எம்பெருமான் அம்பிகையை திருமேனியின் இடப் பாகத்தில் ஏற்றுக் கொண்டனன்..

தீபாவளியை அடுத்து  சஷ்டி விரதம் ஆரம்பம்..  


திருச்செந்தூரில் மஹா கந்த சஷ்டி சூர சங்காரம் ஐப்பசி 21 வியாழக்கிழமை.. 


ஐப்பசி 25 அன்று
மாமன்னர் ராஜ ராஜ சோழர் பிறந்த  
சதயத் திருநாள்..
(நவம்பர் 11 திங்கட் கிழமை)

மங்கலமிகும் ஐப்பசியை வரவேற்று மகிழ்வோம்..
**


திருப்புகழ்

 ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!..
-; அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

 முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. துலா மாதத்தை வரவேற்போம். இம்மாதத்தில் ஒரு நாள் காவிரியில் நீராடி விடுவார்கள் எங்கள் மாமாக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஐப்பசியில் அடைமழை என்பார்கள்.  இந்த முறை ஐப்பசி தொடங்கும் முன்னரே அடைமழை தொடங்கி விட்டது!

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு. திருப்புகழை படித்து முருகனை வணங்கி கொண்டேன்.
    ஐப்பசி வந்தால் மயிலாடுதுறை நினைவு வந்து விடும்.
    ஐப்பசி முழுக்கு திருவிழாவும், திருவிழா கடைகளும் , உறவுகள் வருகையும் என்று ஊரே விழா கோலம் கொண்டு இருக்கும்.

    கந்த ஷஷ்டி விரதம் , ராஜ ராஜசோழர் பிறந்த நாள் விழா மற்றும்
    சதயதிருநாள் மகனின் பிறந்த நாள் வரும்.
    ஐப்பசி சிறப்பான மாதம் மங்கலங்கள் தரட்டும் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    ஐப்பசி மாதப்பிறப்பு… தகவல் பகிர்வு சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..