நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 25, 2022

அன்னையின் தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று செவ்வாய்க்கிழமை..
அன்னை ஸ்ரீ குந்தாளம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா..


காலையில் யாக பூஜையும் பூர்ணாஹூதியும் நிறைவு பெற்று உச்சிப் பொழுதில் மகா அபிஷேகமும் நடை பெற்றது..



மாலை சிறப்பு அலங்காரம்..


நாங்கள் மாலைப் பொழுதில் தான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தோம்..


மண்டலாபிஷேக விழாவினை ஒட்டி காலை பத்து மணியளவில் தொடங்கப்பட்ட விருந்து உச்சரிப்பு இரவு ஒன்பது மணி வரை நடந்துள்ளது.. 

அன்னை அவளே முன்னின்று நிகழ்த்தியதாக உணர்வு..


அன்னையல்லவா!..
அவள் யாரையும் தவிக்க விட்டதில்லை..

மற்றபடி,
நாளையில் இருந்து கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோயில் திருவிழா.. பதிவுகள் தடைபடாது.. எனினும் அங்கு இணையம் எப்படி இருக்கின்றதோ தெரியவில்லை.. அவளருளால் திங்கட்
கிழமையில் இருந்து பதிவுகள் தொடரும்..

ஓம் குந்தளாம்பிகாயை நம:

ஓம்
சக்தி ஓம் சக்தி ஓம் 
சக்தி ஓம் சக்தி ஓம்
***

25 கருத்துகள்:

  1. அன்னை அனைவரையும் காக்கட்டும்.  கிராமத் திருவிழா சிறக்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. குந்தாளம்மன் கோயில் நான் அறிந்திராத கோயில். தஞ்சை மாவட்டத்தில் உள்ளதா? வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை நகரில் கரந்தையை அடுத்துள்ள கோடியம்மன் கோயிலுக்கு எதிரில் மேற்குப் புறமாக சோழன் நகருக்கு செல்லும் பாதை - பழைய திருவையாறு சாலையுடன் இணையும் இடத்தில் இருந்து சற்று தூரத்தில் வயல் வெளிக்குள் அமைந்துள்ளது இந்தக் கோயில்.. இந்தப் பகுதி பூக்குளம் வலம்புரி எனப்படுகின்றது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நீக்கு
  3. குந்தாளஅன்னை தரிசனம் அருமை, அண்ணா. அது போல உங்கள் கிராமத்து காளியம்மன் கோயில் சிறப்பாக நடைபெறும்.

    சூலம் படத்திற்கு மேலே உள்ள படம் என்ன என்பது புரியவில்லை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. குந்தாளம்மன் கோயில் தரிசனப் படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆமாம், சூலத்திற்கு மேல் படம் என்னவெனத் தெரியவில்லை! கேட்க நினைச்சேன். கேட்டு விட்டார்.

    பதிலளிநீக்கு
  5. இங்கே ஶ்ரீரங்கத்தில் மட்டும் எனக்குத் தெரிந்து நாலைந்து எல்லை அம்மன் திருவிழாக்கள் நடந்தன. அங்கேயும் கிராமத் திருவிழா சிறப்பாக நடைபெற அம்மன் அருள் புரிவாள்.

    பதிலளிநீக்கு
  6. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... சூலம் படத்துக்கு மேலே உள்ளது சிங்க வாகனமும் பலி பீடமும்... அது பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படம்.. சரியாக விளங்க வில்லையா..

    அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ சிங்க வாகனமா, டக்கென்று பிடிபடவில்லை அண்ணா. மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  7. அன்னையின் அலங்காரம் சிறப்பு. திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  8. அன்னையின் அலங்காரம் மிக அருமை. அருமையான தரிசனம். படங்களும் விவரமும் அனைத்தும் சிறப்பாக உள்ளன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    அழகான படங்கள். அத்தனையும் சிறப்பாக உள்ளது. அலங்காரத்துடன் அன்னையின் தரிசனம் மன நிறைவை தந்தது. அன்னையின் கருணை ததும்பும் அழகை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போன்ற நிறைவு. தாங்கள் தொடர்ந்து தரும் பதிவுகளையும் வாசிக்க காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. இன்று தாமதமாக பதிவுக்கு வந்து கருத்துரை தருவதற்கு வருந்துகிறேன். நன்றி .

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையே மகிழ்ச்சி..
      இதில் தாமதம் என்பதே இல்லை.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  10. //குந்தாளம்மன் கோயில் தரிசனப் படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆமாம், சூலத்திற்கு மேல் படம் என்னவெனத் தெரியவில்லை! கேட்க நினைச்சேன். கேட்டு விட்டார்.//என்னுடைய இந்தக் கருத்து இங்கே கொடுத்தது எனக்கு வந்திருக்கு, பின் தொடரும் கருத்துகளும் வந்துள்ளன. ஆனால் கருத்து இங்கே வரவில்லை. இந்தக் கருத்துப் பெட்டி மாறியதில் இப்படிப் பல கருத்துகள் காணாமல் போகின்றன. இது எனக்கு வந்த பின் தொடரும் கருத்துக்களில் மெயில் பாக்ஸில் கிடைத்தது. :( இதுவானும் போகுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      தாங்கள் சொல்வது சிக்கலாகத் தெரிகின்றது.. இதுவரைக்கும் ஏதொரு தடங்கலும் இங்கு வந்ததில்லை.. பார்ப்போம்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  11. இந்தக் கருத்துத் தெரியலையோ? !!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  12. அட! கருத்துத் தெரியலையானு கேட்ட கருத்து வரலை! :( ஏன் இப்படி?

    பதிலளிநீக்கு
  13. குந்தாளம்மன் கோயில் தரிசனம் கிடைத்தது , மகிழ்ச்சி.
    அடுத்து கிராம காளியம்மன் கோயில் தரிசனம் செய்ய வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. இங்கே கிராமத்தில் இணையம் வேகமில்லை என்றாலும் பதிவுகள் தொடரும் என நினைக்கின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..
      நலமே வாழ்க..

      நீக்கு
  14. அம்மனின் அலங்காரம் அருமை.

    பதிலளிநீக்கு
  15. மீள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

    நலமே வாழ்க..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..