நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 15, 2022

திருக்கண்டியூர்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருத்தலம்
திருக்கண்டியூர்
வீரட்டம்


இறைவன்
ஸ்ரீ பிரம்ம சிரக்கண்டீசர்
அம்பிகை
மங்கலநாயகி

தீர்த்தம்
நந்தி தீர்த்தம்
தலவிருட்சம் வில்வம்
மேற்கு நோக்கிய திருக்கோயில்..

நன்றி கூகிள்

இன்றைய பதிவில் வீரட்டானத் தலங்களில் முதலாவதாகிய திருக் கண்டியூர்..

தகாத சொல் உரைத்ததற்காக 
பிரம்மா  - இறைவனால்
தண்டிக்கப்பட்ட தலம் திருக்கண்டியூர்..


ஐந்தாவதாக இருந்த முகம் ஸ்ரீ வயிரவக் கோலம் கொண்ட இ
றைவனால்
அழிக்கப்பட்டது.. அதனாலேயே நான்முகன்..

ஞானதேவியாகிய சரஸ்வதி உடனிருந்தும்
உண்மையை உணராமல் தகுதிக்கு ஒவ்வாத செயலை பிரம்மன் செய்ததால்
படைப்புத் தொழிலும்
சந்நிதி வழிபாடும் அற்றுப் போயின..

தன் பிழைக்கு வருந்திய நான்முகன்
சிவ வழிபாடு செய்து
மீண்டும் உயிர்களைப் படைக்கும் தன்மையைப் பெற்றார்..

நன்றி Fb
ஸ்ரீ பிரம்மன் வழிபாடு செய்த தலங்கள் பற்பல.. எனினும் கலைமகளோடு சந்நிதி கொண்டு விளங்குவது இங்கு மட்டுமே..


பிரம்மன் குடிகொண்டிருக்கும் சந்நிதிக்குப் பக்க வாட்டில் சிறிய சாளரம் ஒன்று உள்ளது.. அதன் வழியே பிரம்மனின் நான்காவது முகத்தையும் தரிசிக்கலாம்..


பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் தலம்... செய்த பிழைக்கு தண்டனை பெற்றவர்கள் இங்கு வந்து வழிபட்டு பாவம் தீர்த்துக் கொள்கின்றனர்.. விதி மாறி புது வாழ்வு கிடைப்பதால் வியாழக் கிழமைகளில் பக்தர்கள் அதிகம்.. பிரம்மன் தண்டிக்கப்பட்ட ஸ்தலத்தில் முருகப் பெருமான் ஞானஸ்கந்த மூர்த்தியாக வீற்றிருக்கின்றார்..


அம்பாள் சந்நிதி


அம்பாள் தனிக் கோயில் கொண்டிருக்கின்றாள்.. கோட்டத்தில் உள்ள விநாயகர் துர்கையின் நிலையை படங்களில் காண்க..





சதாதப முனிவர் காளத்தி திருக்கோலம் கண்டு வணங்கிய திருத்தலம்.. இவர் பொருட்டு கயிலை மாமலையில் இருந்து வில்வம் இங்கே எழுந்தருளியதாக ஐதீகம்.. 


ஸ்ரீ பிக்ஷாடனர்



உயர்ந்த நடை மேடையுடன் சுற்றுப் பிரகாரம்.. பிரகாரத்தில் அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் திருமேனி வெகு அழகானது..  வெளிப்பிரகாரத்தில் பொற்காளியம்மன் சந்நிதி.. 

சப்த ஸ்தான விழாவில் ஐந்தாவது திருத்தலம் கண்டியூர்.. புதுமணத் தம்பதியராகிய நந்தியம்பெருமானும் சுயம் பிரகாஷிணி தேவியும் ஐயாறப்பருடன் வந்து விட்டுப் புறப்படும் போது அவர்களுக்கு கட்டமுது கொடுத்தனுப்புவது இத்தலத்தின் சிறப்பு..










சென்ற பிரதோஷ நாளன்று எடுக்கப்பட்ட படங்கள் இவை..
***

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச்
செற்ற அநங்கைக்
காய்ந்த பிரான் கண்டி யூர் எம்பிரான் அங்கம்
ஆறினையும்
ஆய்ந்த பிரானல்லனோ அடியேனையாட்
கொண்டவனே..
4.094.9
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. இன்றைய தரிசனம் நன்று வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  2. சுவாரஸ்யமான விவரங்களுடன் அழகிய படங்கள்.  பிரம்மன் செய்த தவறு என்ன?  சரஸ்வதி உடனிருந்தும் அவருக்கே அந்த கதி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்.. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. பிரம்மனுக்கு ஏன் இந்த நிலை?.. அடுத்த சில நாட்களில் காண்போம்... மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. படைக்கும் கடவுள் பிரம்மா என்று சொல்லப்படுபவருக்கே தோஷம், தண்டனையா! என்ன தவறுக்காகத் தண்டனை கிடைத்தது?

    உயரமான நடைமேடையுடன் சுற்றுப் பிராகாரம் - அந்தப் படம் அதுதானோ? அழகா இருக்கு என்று சொல்ல வந்தேன் இதைப்பார்த்ததும் சந்தேகம் வந்தது. அதுதான் பிராகாரம் என்று தெரிகிறது.

    படங்கள் அருமை தகவல்களும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிருஷ்டித்தல் எனும் முதற் பதவியினால் எழுந்த அகந்தை.. அதுவே விளைவுகளுக்குக் காரணம்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோதரி..

      நீக்கு
    2. ஓ புரிந்தது, காரணம். மிக்க நன்றி துரை அண்ணா.

      நீக்கு
  4. என்னோட கருத்துகள் எங்கேனு தெரியலையே! ஆனால் பின் தொடரும் கருத்துகள் அனைத்தும் வந்திருக்கின்றன. என்ன சொன்னேன் என்பது நினைவில் இல்லை. பிரம்மாவின் தலையைத் துண்டித்தது பற்றிச் சொல்லி இருந்த நினைவு. இதாவது போகிறதா பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான படங்களும் தகவல்களும். கோயில் உலா தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான படங்களும் தகவல்களும். கோயில் உலா தொடரட்டும். - இந்தக் கருத்து முன்பு அனுப்பியது - மின்னஞ்சலில் வந்தது - இங்கே வரவில்லை! மீள் முயற்சி.

    பதிலளிநீக்கு
  7. சரஸ்வதியும் ,பிரம்மாவும் ஒரே சன்னதியில் இருக்கு படம்
    அருமை .
    பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்று கொய்யப்பட்டதற்கு எத்தனை எத்தனை காரணங்கள் உள்ளன!
    படங்கள் எல்லாம் மிக ழகாய் இருக்கிறது
    பிரதோஷ படங்களும் நன்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரம்மன் சிரம் கொய்யப் பட்டதற்கு நாமறிந்த காரணம் ஈசன் சிரத்தைக் கண்டு விட்டேன் என்று பொய் உரைத்ததாகும்.. ஆனால் அப்பர் ஸ்வாமிகள் சொல்வது வேறு..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றிய..

      நீக்கு
  8. இக்கோயில் சென்ற நினைவிருக்கிறது பல வருடங்களுக்கு முன். படங்கள் எல்லாம் மிக அழகு. தரிசனமும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..