நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 30, 2022

ஓம் சக்தி 4

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஸ்ரீ வீரமாகாளியம்மன் வைகாசித்
திருவிழாவின் சிகரமாக நேற்று காலை 9:00 மணியளவில் பால்குடங்கள் புறப்பட்டு கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் எழுந்தருளி ஆராதனை உபசரிப்புகளை ஏற்றுக் கொண்டு மதியம் ஒரு மணியளவில் கோயிலை வந்தடைந்தன..

































வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் நூற்றுக் கணக்கான அன்பர்கள் பாலாபிஷேக தரிசனம் செய்தனர்.. மகா தீப ஆராதனைக்குப் பின் அம்பாள் பிரசாதமாக கஞ்சி வார்க்கப்பட்டது.. பொங்கலும் புளியோதரையும் நீர்மோரும் ஏக அமர்க்களம்..  இடையில் அனைவருக்கும் ரஸ்னா வழங்கப்பட்டது..




சீர்வரிசை
மாலை 6:30 மணியளவில் கிராம மக்கள் சீர் எடுத்து வந்தனர்..






மூலஸ்தானத்தில் அம்பாள் சந்தனக் காப்பில் திகழ்ந்திருந்தாள்..
உற்சவத் திருமேனியாள்
சீரும் சிறப்புமாக ஊஞ்சலில் கோலம் கொண்டு அருள் பாலித்தாள்...

காலையில் நான் கோயிலிலேயே இருக்க வேண்டியதாகி விட்டதால்  குளக்கரையில் இருந்து
பால்குடங்கள் புறப்பட்ட நேரத்தில் பதிவு செய்ய முடியவில்லை..

 ஊஞ்சல் வைபவம் நடந்த நேரத்தில் ஊஞ்சலுக்கு முன்பு அமர்ந்திருந்த பெண்களுக்கு ஊடாக நடந்து சென்று படம் எடுக்க இயலவில்லை..  

மற்றபடி திருநீறு கேட்போருக்கும் வாக்கு கேட்போருக்கும் நலம் கூறிக் கொண்டிருந்ததால் ஊஞ்சல் வைபவத்தையும் முழுமையாக பதிவு செய்ய இயலவில்லை..


இயன்றவரை காட்சிகளைப் பதிவில் வைத்துள்ளேன்..

இரவு 10:30 மணியளவில் ஆரத்தியுடன் வைபவத்தை இனிதே நிறைவேற்றிக் கொண்டாள் 
ஸ்ரீ வீரமாகாளியம்மன்..

வாழ்வும் அவளே
வழியும் அவளே..
அவளே நிதியாய்
அவளே கதியாய்!..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம்
***

12 கருத்துகள்:

  1. இப்போது ரஸ்னாவையும் அம்மன் பிரசாத லிஸ்ட்டில் சேர்த்து விட்டார்கள் போல!   நீர் மோர் பானகம் ஆகியவை திருவிழா ஸ்பெஷல்.  படங்கள் யாவும் சிறப்பு.   மக்களின் ஈடுபாடும், பங்குகொள்தலும் மகிழ வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன. (இப்போது கைப்பேசியில் நீண்ட நேரம் அமர்ந்திருக்க இயலவில்லை என்பதினால், பிறகு படங்களை ஒவ்வொன்றாக பெரிதாக்கி பார்க்கிறேன்.)

    அம்மன் அலங்காரப் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அன்னையின் தரிசனம் பெற்றுக் கொண்டேன். விழா சிறப்பாக நடந்து முடிந்தமைக்கு மிக்க சந்தோஷம். உங்கள் ஊர் கிராம மக்களின் அன்பும், இறை பக்தியும் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

    உங்கள் அனைவரின் உபசரிப்பில் மனங்குளிர்ந்த வீரமாகாளி அன்னை மக்கள் அனைவருக்கும் வாழ்வை நலமுடனும், வளமுடனும் அமைய செய்ய வேண்டுமென நானும் மனங்கனிந்து அன்னையிடம் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. தங்களுக்கு நல்வரவு..

    முடிந்தால்
    படங்களைப் பெரிதாக்கிப் பாருங்கள்..

    அன்பின் வருகையும் இனிய கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  4. இயன்றவரை என்று கூறியுள்ளீர்கள். இருந்தாலும் பெரும்பாலானவற்றைப் பதிவு செய்துள்ளீர்கள். அவள் அருளால் நாங்கள் காணும் வாய்ப்பினைப் பெற்றோம். மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. எல்லாமே நன்றாகப் பதிவாகியிருக்கிறது அண்ணா. ஒரு குறையுமில்லை.

    படங்கள் எல்லாமே அருமை குறிப்பாக அம்மனின் அலங்காரப் புடவை அழகாகக் கட்டப்பட்டிருக்கிறது.

    கடைசிப்படங்களில் ஊஞ்சல் அருகில் இருப்பவர் நீங்கள்தானோ?!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பதிவின் வழி தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான படங்கள்.
    அம்மன் சந்தனகாப்பில் மிக அருமை.
    நல்வாக்கு சொல்லி இருப்பீர்கள் எல்லோருக்கும் அன்னையின் அருளால்.நலமே விளையட்டும் அனைவருக்கும்.
    ஊரிலிருந்து வந்தது முதல் உங்கள் பொழுதுகள் இறை சிந்தனையில் போவது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  8. அம்மன் அலங்காரங்கள் சிறப்பு. விழா படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  9. அம்மன் படங்கள் அனைத்தும் அழகு. தகவல்களும் படங்களும் சிறப்பு. அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  10. இந்தப் பதிவுக்கு நான் இட்ட கமெண்ட் காணோம்! படங்கள் வழக்கம் போல சிறப்பு.

    பதிலளிநீக்கு
  11. அநேகமாக எல்லாமே பதிவாகி இருக்கிறது. படங்கள் அனைத்துமே அருமை. தங்கள் இறைத்தொண்டு மெய் சிலிர்க்க வைக்கிறது. வீரமாகாளி அனைவருக்கும் அருள் புரியப் பிரார்த்திக்கிறேன். (இந்தக் கருத்து போகுமா? போகாதா?) அவள் அருள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..