நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 14, 2022

பொங்கலோ பொங்கல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு  பின் செல்பவர்.. 1033
*

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்..


அனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..
***
தற்போது சில மாதங்களாக கொரானாவை விடக் கொடிதான சில விஷக் கிருமிகள்..
பகையும் பிணியும் பரிவட்டம் கட்டிக் கொண்டு திரிகின்றன..

முன்னெப்போதும் இல்லாத அளவில்  நமக்கு எதிராக இயங்குகின்றன.. 

ஆலகால விஷம் போல நம்மை நெருக்கிக் கொண்டிருக்கின்றன..

இக்கொடுமைகளில் இருந்து  இறைவன் ஒருவனே நம்மைக் காத்தருள வல்லவன்..

நின்று முறையிட முடியாதபடிக்கு
ஆலயத்தின்
கதவுகள்
அடைக்கப்பட்டு
விட்டன..

ஆயினும்,
தலைவிரித்து ஆடுகின்ற
பகையும் பிணியும் விரைவில் அழிவதற்கு இந்த நல்ல நாளில்
வேண்டிக் கொள்வோம்..

மேலும் இவ்வருடம் 
தை முதல் நாள் என்று பொழுது விடிந்தாலும் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும்  சங்கராந்தி புண்ய காலம் 
மதியம் 2:43 ல் இருந்து மாலை 5:45 வரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

 உதயத்துக்குப் பிறகு சூர்யப் பொங்கலாக வைக்கும் பாரம்பரியத்தினை உடையோர் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்..
**

ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே..
-: ஞான சம்பந்தப் பெருமான் :-


இன்று தை மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமை..

அம்பிகையின் திருமுகத்தைக் கூட
காண்பதற்கில்லை..
அந்த அளவுக்கு
நாட்டு நடப்பு..

இருந்தாலும்,
அவளையே சரணடைவோம்..
அவள் நிச்சயமாக நன்மைகளை நடத்தித் தருவாள்.. 

பெரும் பகை ஒழிய
பொங்கட்டும் பொங்கல்..
பெரு நோய் அழிய
பொங்கட்டும் பொங்கல்!..

ஸ்ரீ வடபத்ரகாளி தஞ்சை

கூர்முனைச் சூலம்
கொடுமையைத் தீர்க்க..
குளிர்விழிக் கோலம்
குலத்தினைக் காக்க!..
மங்கல தீபம்
மனைதனைக் காக்க
குங்கும வயிரவி மாநிலம் காக்க..
வருக வருக எங்கள் தாயே..
தருக தருக துணை நீயே!..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
***

14 கருத்துகள்:

  1. முருகனுக்கே வெற்றிவேல் அளித்த அன்னை நம்மையும் சுற்றி நிற்கும் பகைவர் யாவரையும் வீழ்த்திக் காத்திடுவாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுடன் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். தீயதை அன்னை ஒழித்து நம் அனைவரையும் காக்க வேண்டும். அன்னை வடபத்ரகாளியம்மனை தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..

      இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுடன் நன்றி..

      நலமே வாழ்க..

      நீக்கு
  3. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

      வாழ்க நலம்.

      நீக்கு
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் நாள் வாழ்த்துகள்! துரை செல்வராஜு சார்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

      வாழ்க நலம்..

      நீக்கு
  5. துரை அண்ணா பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..

      தங்களுக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

      நலமே வாழ்க..

      நீக்கு
  6. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

      நலமே வாழ்க..

      நீக்கு
  7. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்.

      தங்களுக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

      நலமே வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..