நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 04, 2022

மங்கல மார்கழி 20

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.. 151
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..
திருப்பாடல் - 20


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-


அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்
அமுதன்று கொண்டுகந்தான் என்றும் அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட,
நன்மாலை ஏத்தி நவின்று.. 2266
-: ஸ்ரீ பூதத்தாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம்
திரு அண்ணாமலை


இறைவன்
ஸ்ரீ அண்ணாமலையார்
ஸ்ரீ அருணாசலேஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ உண்ணாமுலையாள்


தீர்த்தம்
சிவகங்கை, பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் - மகிழ மரம்


இத்திருத் தலத்தினை
நினைக்க முக்தி..
பஞ்சபூதத் தலங்களுள் அக்னியின் பகுப்பு..


ஈசன் தன்னைத்
தேடி நின்ற
ஸ்ரீ ஹரி பரந்தாமனுக்கும்
ஸ்ரீ நான்முகனுக்கும்  அடி முடி அறியவொண்ணா அக்கினிப் பிழம்பாகக் காட்சியருளிய திருத்தலம்..


பூவார்மலர் கொண்டு
அடியார் தொழுவார்
புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார்
தூமாமழை நின்று அதிர வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம்பிணை வந்து அணையும் சாரல்
அண்ணா மலையாரே..1/69
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருப்பொன்னூசல்
திருப்பாடல் எண் - 3


முன்ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்நீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன் மாளிகை பாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
நெஞ்சை நெகிழ்விக்கும் காணொளி ஒன்று
ஸ்வாமியே
சரணம் ஐயப்பா!..


ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. அகிலத்தை உண்ணாமலை உடனிரு அண்ணாமலை காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய திருப்பாவை பாடல் அருமை.பாடி மகிழ்ந்தேன். ஸ்ரீ பரந்தாமன் தரிசனமும், அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார், தாயார் ஸ்ரீ உண்ணமுலை தேவியின் தரிசனமும் கண்டு மிக்க மகிழ்வடைந்தேன்.

    காணொளி கண்களை கசியச் செய்தது. தூய பக்தியுடன் இறைவனின் துணையிருந்தால் யாவும் நலமாகும். இறையருளே என்றும் துணை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      ஸ்ரீ ஐயப்பன் சன்னிதானத்தில் எல்லாருக்கும் அருள் கொடை கிடைப்பது கண்கூடு..

      நீக்கு
  3. அருமையான தரிசனங்கள். அர்த்தமுள்ள பாசுரம், பதிகம். அண்ணாமலையானின் தரிசனம் காணக் கிடைத்தமைக்கு நன்றி. உண்ணாமுலையம்மன் சின்னஞ்சிறு பெண்ணாகக் கருவறையில் பார்த்த நினைவுகள்! எப்போவோ ஒரு முறை பார்த்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் கூடுதல் செய்தியும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  4. பாசுரங்கள் தரிசனம் அருமை.

    காணொளி கண்ணில் நீர் துளிர்க்க வைத்தது. சேவகர்கள் உதவுவதும், பக்தர் ஏறுவதும் அதற்கு ஏற்ற பாடலும் நெகிழ வைத்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. எம் அம்மையும் அப்பனும்! கண்ணாரக் கண்டேன்.

    கணொளியும் கண்டேன். மலைக்குச் சென்ற நினைவும் கூடவே எழுந்தது. இப்படி வருபவர்கள் அப்போதும் உண்டு. ஆனால் அப்போது காணொளி எடுக்கும் வாய்ப்பு கிடையாது. அவர்களின் மன உறுதி வியக்க வைக்கும். அதுவும் வசதி குறைவான வருடங்கள் அப்போதெல்லாம். இப்போது காணொளி எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. மட்டுமல்ல எப்படிக் கோயிலில் எடுக்க அனுமதி கிடைத்தது தெரியவில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      சென்ற வருடம் சந்நிதானத்தில் கெடுபிடிகள் இருந்த சமயம் - சந்நிதானம் நடை திறக்கப்படுவதும் கருவறையில் மூல விக்ரஹ தரிசனமும் Fb ல் வந்தது.. குழந்தைகள் படியேறுகின்ற காட்சிகளும் படிபூஜை நிகழ்வுகளும் கூட வருகின்றன..

      நாளைக்குக் கூட சந்நிதான காணொளி ஒன்று நமது பதிவில் வருகின்றது..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. எனக்கு மிகவும் பிடித்த கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை. அண்ணாமலை சிவனை இங்கே காணத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நானும் அண்ணாமலையாரை தரிசித்திருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..