நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 09, 2021

வராஹி வருக..

 

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***

ஸ்ரீ வராஹி அம்மனுக்கான
நவராத்திரி விழா
தொடங்க இருக்கின்ற இவ்வேளையில்
அம்மனிடம்
இன்றொரு
பிரார்த்தனை..
***


சூலம் எடுத்துச் சுழற்றிட வேணும் தாயே..
சூழும் வினைகளைத் தகர்த்திட நீயும்
சூலம் எடுத்துச் சுழற்றிட வேணும் தாயே..
சூழ்கலி தீரச் சிறையினில் தோன்றிய மாயே!..

தீயவர் கொடுமை தீர்த்திட நீயும்
தீ வண்ணம் ஆகுக காளி..
மாயவன் சோதரி மாண்புடன் வருக
நீர் வண்ணச் சூலி திரிசூலி..

கோரங்கொள் காளி கொடியவர் தீர
வாள் கொண்டு வருவாய் வருவாயே
ஆரங்கொள் காபாலம் கலகலக்க
கனலாய் வருவாய் வருவாயே..


சங்கொடு சக்கரம் தாங்கிய துர்கா
தூர்த்தரைத் தொலைத்திட வருவாயே..
மங்கிடக் கொடியவர் கூட்டம் அழிந்திட
அதிர நடந்தே வருவாயே..

கயவர்க்கு கசடர்க்கு கதையுடன் வருவாய் வராஹியே..
முரடர்க்கு மூர்க்கர்க்கு மழுவுடன்
வருவாய் வராஹியே..

சொல் பிறழ்ந்தாரை நில் என நிறுத்தி
நெடுங்கணை கொண்டு துளைப்பாயே..
இல் பிறழ்ந்தாரை இரு என இருத்தி
கூர்வேல் கொண்டு பிளப்பாயே...


ஊர்ப் பணம் தின்று உதிரம் வளர்க்கும்
உளுத்தர்கள் வாழ்வும் எத்தனை நாள்?..
நிருதர்கள் நெஞ்சினைப் பிளந்தவளே
நீசரை அழித்திடு பெருந்திரு நாள்!..

எளியவர் ஏழையர் இன்னல் தகர்ந்திட
புன்னகை விழியால் அருள்வாயே..
வலுத்தவர் கொழுத்தவர் வாழ்வு அழிந்திட
வாராஹி வருவாய் வருவாயே...

மரங்கள் அதற்கும் மனந்தனை வைத்தனை..
மடிப்பிள்ளை தனக்கும்
வீரம் விதைத்தனை..
மனிதரெனக் கொடு அரக்கர் வந்தார்
குறையிடும் முறையொலி கேட்கலையோ!..

ல்

துன்பமும் துயரமும் நிலை பெறுமானால்
தூயவளே நின் துணை இல்லையா..
நன்மையும் உண்மையும்  நல்கிட வேணும்
நலிந்தவர் தமக்கு நீ தாய் அல்லவா!..
***
சில தினங்களுக்கு முன்
தினமலர் இணைய தளத்தில்
வெளியிடப்பட்டிருக்கும்
செய்திகளின்
படக் குறிப்புகள்
இன்றைய பதிவில்..

தினமலர் நாளிதழுக்கு நன்றி..
***


எத்தனைக் காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!..


சொந்தச் சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி!..
-: மகாகவி பாரதியார் :-
***
வன்மை அழிந்திட வருக வராஹி
வாழ்வு செழித்திட வருக..
நன்மை நிலைத்திட வருக வராஹி
நல்லவர் வாழ்ந்திட வருக...

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
***

6 கருத்துகள்:

 1. சூழும் வினைகளைத் தகர்த்திட வருவாய் வராஹி தாயே!

  அம்மன் மேல் பாமலை அற்புதம்.
  வராஹி அனைவர் துயரையும் தீர்க்க வேண்டும்.
  நாடும் வீடும் நலம்பெற வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. அழகான, அற்புதமான கவிதை வேண்டுகோள்.  வராஹி அம்மன் வரங்களை வாரி வழங்கிடல் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. கவிதை வரிகளில் சிறப்பான வேண்டுகோள். வராஹி அம்மனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும். எனது பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. ஆகா... உங்கள் கவிதை மிக அருமையாக உள்ளது. வாராஹி அம்மனை வேண்டி பாடிய இந்தப் பாமாலை அற்புதமாக உள்ளது.

  /துன்பமும் துயரமும் நிலை பெறுமானால்
  தூயவளே நின் துணை இல்லையா..
  நன்மையும் உண்மையும் நல்கிட வேணும்
  நலிந்தவர் தமக்கு நீ தாய் அல்லவா!../

  அருமையான எண்ணங்களுடன் அன்னையின் அருள் சுரக்க வேண்டும் வரிகள். உலக மாந்தர்கள் அனைவருக்கும் தாயானவளாகிய அன்னை வாராஹி அம்மன் பிரார்த்தனை கவிதையில், வேண்டும் வரங்களை தந்திட வேண்டுமென நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. வாராஹி அம்மன் பாமாலை அருமை. துன்பங்களையும், சங்கடங்களையும் வாராஹி அம்மன் அருளால் பொடிப்பொடியாக ஆகவேண்டும். பலருக்கும் குலதெய்வமாகவும் விளங்குகிறாள் வாராஹி. அனைவர் வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கிட வாராஹி அருள் புரிய வேண்டும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு