நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 23, 2021

தேவி தரிசனம் 1

    

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி மாதத்தின்
முதல் வெள்ளிக்கிழமை
இன்று..

இன்றைய நாளில்
நிறை நிலாவும் இணைந்து
வருகின்றது..

ஆடி வெள்ளிக்கிழமைகள்
தெய்வ வழிபாட்டுக்கு மட்டும்
உரியன அல்ல..
பெண்மை சிறப்பிக்கப்படும்
நாட்களும் ஆகும்..

சிறப்புடைய இந்நாளில்
ஆதிபராசக்தி ஆகிய
அம்பிகையின்
திருக்கோலங்களை
சிந்தித்திருப்போம்...ஸரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே ஸதா..


நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸூர பூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..


சூலம்  கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலாம் கரமுள நாக பாசாங்குசம்
மால் அங்கு அயன் அறியாத வடிவுக்கு
மேலங்க மாய் நின்ற மெல்லியலாளே!..
-: திருமூலர் :-நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.. (50)
-:  ஸ்ரீ அபிராமி பட்டர் ;-
***
அம்பிகையைச் சரணடைந்தால்
அதிக வரம் பெறலாம்..
-: மகாகவி :-
***
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
***

8 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. ஆடி முதல் வெள்ளியில் அன்னையின் அழகிய திருவுருவங்களை தரிசித்துக் கொண்டேன். தலைசாய்த்து கருணை ததும்பும் விழியால் நம் கவலைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்யும் ஸ்ரீ வடபத்ர காளியம்மனை மனமாற வணங்கிக் கொண்டேன். அழகான படங்கள். ஸ்தோத்திரங்கள் என மனதுக்கு அமைதி தரும் பதிவு நன்றாக உள்ளது. அனைவருக்கும் அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைத்திட நானும் ஆதிபராசக்தியை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. ஆடிவெள்ளி சிறப்புப் பதிவு சிறப்பான பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ஆடிவெள்ளி சிறப்புப் படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 4. ஆடி வெள்ளி தரிசனம் செய்து கொண்டேன்.
  படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.
  அபிராமி அந்தாதி பாடல் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 5. ஓம் சக்தி ஓம் ! பராசக்தி ஓம் சக்தி ஓம் !

  பதிலளிநீக்கு
 6. நேற்று தரிசனம் கிடைக்கவில்லை. அதனால் என்ன? இன்று பார்த்துக் கொண்டேன். நல்ல அருமையான படங்கள். அபிராமி அந்தாதியும் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு