நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 02, 2021

நலமே வருக

 

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
இன்று
எவராலும் தவிர்க்க முடியாத
ஒன்றாகியிருப்பது
முக கவசம்..


Face Mask
என்பதற்குச் சரியான
பொருள் அதுதானா!..
தெரியாது..
ஆனாலும் அனைவருக்கும்
இன்றியமையாத
பொருளாகி விட்டது..இன்றைய நாளில்
எல்லா இடங்களிலும்
பலதரப்பட்ட முக கவசங்கள்
கிடைக்கின்றன..

அதிலும் மாறுபட்டதாக
நவீன தொழில் நுட்பத்துடன்
வடிவமைக்கப்பட்டுள்ள
முக கவசத்தைப் பற்றிய செய்தி..

( இந்த நவீன முக கவசம்
எப்போது பயன்பாட்டிற்கு
வரும் என்பது தெரியவில்லை)

இது தினமலர் நாளிதழின்
இணையப் பதிப்பில்
வெளியானதாகும்..

தினமலருக்கு நன்றி..


காற்றில் மிதக்கும் கொரோனா நுண்துகள்களைக் கண்டறியும் மாஸ்க்..

 பாரிஸ்: நேச்சர் பயோடெக்னாலஜி என்கிற பிரபல விஞ்ஞான இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை தற்போது வைரலாகி வருகிறது.

பிரெஞ்சு விஞ்ஞானிகள் வித்தியாசமான தொழில் நுட்ப அம்சங்கள் நிறைந்த அதிநவீன முகக் கவசம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அனைவரும் முகக்கவசம் அணிகின்றனர். துணியால் ஆன முகக் கவசங்கள் முதல் பிளாஸ்டிக் ஷீல்டு வரை பலவகையான முகக் கவசங்கள் தற்போது கிடைக்கின்றன.


வைபை, ப்ளூடூத், ஸ்மார்ட்போன் ஆகியவற்றை இணைக்கும்படியான தொழில் நுட்பத்துடன் கூடிய முகக் கவசங்களும் ஜப்பான் முதலான ஆசிய நாடுகளில் விற்பனையாகின்றன.

தற்போது பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஒருபடி மேலே போய்  நோய்களைக் கண்டறியும் அதிநவீன கவசங்களை உருவாக்கியுள்ளனர். காற்றில் கொரோனா வைரஸ் உட்பட வேறு ஏதாவது வைரஸ் இருந்தால் அதனை இந்த முகக் கவசத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் கண்டறிந்து உடனடியாக முகக் கவசத்தை அணிந்து இருப்பவருக்கு தகவல் அளிக்கின்றன..

இதனால் அவர்கள் அந்த இடத்தை விட்டு விரைவில் நகர்ந்து தப்பித்துக் கொள்ளலாம் என, - விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..

பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்றில் பலவித வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளன.
நமது நாசி துவாரத்தில் உள்ள மியூகோஸ் மற்றும் ரோமங்கள் ஆகியன மூக்கின் வழியாக இக்கிருமிகள்
நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன.

கொரோனா நுண்துகள்கள்  வேகமாகப் பரவும் என்பதால் மக்கள் அணியும் முகக்கவசத்தில் சென்சார் பொருத்த பிரெஞ்சு விஞ்ஞானிகள் திட்டமிட்டு இதனை உருவாக்கியுள்ளனர்.

காற்றில் மிதக்கும் வைரஸ் துகள்கள் சென்சாரில் பட்டதுமே சென்சார் அந்த வைரஸ்களின் தன்மையை கண்டறிந்து விடும். இதற்கு பேட்டரி தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஏதாவதொன்று நமது சருமத்தின் மீது பட்டால் உடனே அந்த இடத்தில் எரிச்சல் , அரிப்பு ஏற்படுவதைப் போல இந்த சென்சார்கள் வேலை செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..


நவீன முக கவசம்
விரைவிலேயே மக்களின்
பயன்பாட்டுக்கு உள்ளாகட்டும்..
புதிய உருவாக்கத்தினை
வாழ்த்தி வரவேற்போம்..


தயங்காமல் 
தடுப்பு ஊசி எடுத்துக்
கொள்வதுடன்
இனி வரும் நாட்களிலும்
சமூக இடைவெளியுடன்
சுகாதார வழிமுறைகளைப் பேணி
இப்பூவுலகம் மீண்டும் தழைப்பதற்கு உறுதுணையாய்
இருப்போம்...
***

வையகம் வாழ்க
வாழ்க நலமுடன்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

 1. எப்படியோ எல்லாமே வியாபாரம் என்ற நோக்கிலே செல்கிறது.

  தீநுண்மி விலகட்டும் உலகில் நிம்மதி பரவட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. மக்கள் தினமும் தவறாது பயன்படுத்தும் முக கவசத்தை பற்றிய பயனுள்ள தகவலாக தந்துள்ளீர்கள். எந்த ஒரு பயனுள்ள பொருட்களாக இருந்தாலும் அதில் ஒவ்வொரு நாடும் தொழில் நுட்ப வசதிகளை மேம்படுத்த போட்டியிடுகின்றன. இதுவும் உலகம் இப்போதுள்ள கடுமையான சூழ்நிலைகளில் விரைவில் பயன்பாட்டுக்கு வந்தால் நலமே. இந்த தொற்று முழுவதுமாக விலகி எல்லா நாடுகளும் நிம்மதியாக இருக்கும் சூழ்நிலையையும் ஆண்டவன் விரைவில் தர வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்வோம்.

  பழைய காலங்கள் பொற்காலங்கள் என சரித்திரத்தில் படித்துள்ளோம். இப்போது இரண்டு வருடங்களுக்கு முன்பு நாம் வாழந்த காலங்கள் பொற்காலமாக தெரிகிறது. அந்த காலங்கள் திரும்பி வந்தாலே போதுமெனவும் தோன்றுகிறது. இதற்கு கடவுள்தான் மனது வைக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   விரைவில் எங்கும் நிம்மதி நிலவட்டும்..
   இறிவன் துணை..
   நன்றி..

   நீக்கு
 3. முககவசம் அணிவது அவசியம் ஆகி விட்டது. புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. தினமலர் செய்தி அருமை. வரட்டும் ,நோய் கிருமியை கண்டு பிடித்து ஒதுங்கி நடக்க வசதி என்பது நல்ல செய்தி.

  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   விரைவில் தீ நுண்மி அழிந்து வையகம் நலம் பெறட்டும்..

   நன்றி..

   நீக்கு
 4. தப்பிப்பதற்கு உதவுவதை விட பாதிக்கப்பட்ட நபர் உடனே மருத்துவமனைக்கு செல்ல வழிவகுப்பதே நல்லது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. நல்லதொரு பகிர்வு. புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

  நோய் கிருமி பரவலைத் தடுக்க/அழிக்க வழி கிடைத்தால் நல்லதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி. மேலை நாடுகளில் தொற்று அதிகரித்து வரும் இவ்வேளையில் இம்மாதிரிக் கண்டுபிடிப்புக்களால் பலன் ஏற்பட்டால் நன்மைதானே! விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு இந்த முகக்கவசம் வரவேண்டும் என எதிர்பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 7. விதம் விதமாக வியாபாரத்துக்கு வழி செய்து கொள்கிறாரகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   வியாபாரம் தான் என்றாலும் ஊரும் உலகும் நலம் பெறட்டும்..

   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. வரும் டிசம்பர் முதலான காலகட்டங்களில் இந்தியாவிலும் முகக்கவசம் போடவேண்டாம் என்கிற நிலைமை வரும் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   விரைவில் நாடு நலம் பெறட்டும்..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு