நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 14, 2021

அம்மையே அப்பா!..

  

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நம சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...

சிவனடியார் தம் அகத்திலும் புறத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கும் மகத்தான மந்திரம் இதுவே..

இத்திருவாக்கினை சிவபுராணத்தின் வழியாக நமக்கு வழங்கியவர் -
ஸ்ரீ மாணிக்கவாசகர்..


திருவாதவூரர் என்றழைக்கப்பட்ட இப்பெருந்தகை பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சராகத் திகழ்ந்தவர்..

கீழைக் கடற்கரையில் வந்திறங்கும் அரபு நாட்டுக் குதிரைகளை விலை கொடுத்து வாங்குவதற்காகப் பெரும் பொருளுடன் வந்தவரை எம்பெருமான் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் கீழ் குருவாக அமர்ந்து தடுத்தாட் கொண்டான்...
திருவாதவூரர் மெய்ஞானம் பெற்று மாணிக்க வாசகர் என்றானார்..

அண்டத்தைப் பாடினார்..
அகிலத்தைப் பாடினார்..
அன்னையின் வயிற்றில் உயிர்க்கும் கருவின் நிலைகளைப் பாடினார்...
ஸ்வாமிகளின் வாக்கு திருவாசகம் என்று போற்றப்பட்டது...

மாணிக்கவாசகரின் பொருட்டே நரிகள் பரிகளாயின... வைகை பெருகி கரைகளைத் தகர்த்தது .. இறைவனும் வந்தியம்மைக்குப்  பணியாளனாக வந்து உதிர்ந்த பிட்டு வாங்கி உண்டு மண் சுமந்து பிரம்படி பட்டனன்...


ஸ்ரீ மாணிக்க வாசகப் பெருமான் தில்லைத் திருச்சிற்றம்பலத்தைத் தரிசித்த பின் ஆனி மாத மக நட்சத்திரத்தன்று ஆடும் பிரானின் சந்நிதியுள்  அவனது திருமேனியுடன் சுடராகக் கலந்து முக்தி நலம் எய்தினார்..

நேற்று ஸ்வாமிகளது
குருபூஜை நாள்..

இந்தப் பதிவினை நேற்று வெளியிடுவதற்கு இயலாமல் போனது..


உயர்ந்த பக்தி நெறியினை நமக்குக் காட்டியருளினார் - மாணிக்கவாசகர்..
அவ்வழியில் நாமும்
அம்மையே... அப்பா!.. என்று
உருகி நிற்போம்..
நளும் நாளும்
நலம் பெறுவோம்..
***

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே..

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ
பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே..

என் மைத்துனர் அனுப்பி வைத்த காணொளி இது..
தீப ஆராதனை தரிசனத்
திருக்காட்சியினை
வலையேற்றிய
நன்னெஞ்சங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..


மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி.. போற்றி..

தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

18 கருத்துகள்:

 1. தீபாராதனை கண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. திருவாதவூர் சென்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் அந்தப் பக்க்மெல்லாம் சென்றதில்லை.. செல்ல வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கின்றது...

   நீக்கு
 3. நேற்று எனக்கும் காணொளிகள் வந்தன.
  இன்று திருசூலநாதர் திருக்கோவில் காணொளியில் மாணிக்கவாசகருக்கு அபிசேகம் அலங்கார பூஜை பார்த்தேன்.
  உங்கள் தளத்தில் தீப ஆராதனை பார்த்து விட்டேன்.


  திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான்’ என்று எழுதி ஓலைகளைக் கீழ்வைத்து மறைந்தார்.//
  இறைவனே நேரில் வந்து அருளிய பெருமை உடையவர் மாணிக்கவாசகர்.
  அவர் திருவடிகளே போற்றி.

  தென்னாடுடைய சிவனே போற்றி'
  எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.

  ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி .

   நீக்கு
 4. தரிசனம் நன்று வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அருமை ஐயா...

  ஓம் நம சிவாய...

  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. ஓம் நமசிவாய.....

  மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று போல் என்றும் இனிதாக அமைந்திடட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...
   தங்களது வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நெஞ்சார்ந்த நன்றி..

   நீக்கு
 7. எனக்கும் காணொளிகள் வந்தன. சிதம்பரத்தில் பிரமாதமாக இருக்கும். அங்கே இருந்தும் நண்பர்களான தீக்ஷிதர்கள் வீடியோ காட்சிகள் சிலவற்றை அனுப்பினார்கள். செப்பறையில் நடந்தவையும் கிடைத்தன. இங்கேயும் பார்த்துக் கொண்டேன். எல்லாமும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அக்கா
   தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..
   அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றியக்கா..

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  இன்று தாமதமாக இப்போதுதான் வலைத்தளங்களுக்கு வருகை தருகிறேன்.

  பதிவு அருமை. சிறந்த சிவ பக்தரான மாணிக்கவாசகரின் திருவடிகளே போற்றி வணங்குகின்றேன்.இத்தலம் செல்லும் பாக்கியம் இன்னமும் கிடைக்கவில்லை. காணொளியில் தீபாராதனை காட்சியில் அடியார்தம் அற்புத தரிசனத்தைப் காணும் பேறு பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  தங்களுக்கு இன்று பிறந்த நாள் என்பதனை பதிவில் அறிந்து கொண்டேன். மனமார்ந்த வாழ்த்துகள். இனி வரும் எந்நாளும், உடல்/ மன ஆரோக்கியத்தோடு சிறப்பாக வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. பதிவில் கருத்துரையும் வாழ்த்துரையும் நெகிழ்ச்சியளிக்கின்றது..

   நெஞ்சார்ந்த நன்றி என்றும் உரியது..

   நீக்கு
 9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

   நீக்கு