நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 21, 2020

மார்கழி முத்துக்கள் 06

 தமிழமுதம்

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்..(019)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 06

ஸ்ரீ பார்த்தசாரதி
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ ஒப்பிலியப்பன்
இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்
அறைபுனலும் செந்தீயும் ஆவான் - பிறைமருப்பின்
பைங்கண்மால் யானைபடு துயரம் காத்தளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி..(2110)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருகோடிகா

இறைவன் - ஸ்ரீ கோடீஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ திரிபுரசுந்தரி


தல விருட்சம் -
தீர்த்தம் - சிருங்க தீர்த்தம்

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

ஸ்ரீ திரிபுரசுந்தரி - திருக்கோடிகா
வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைகள் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருஆரூர்த் திருமூலத் தானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே!..(6/81)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 06


பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தணை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்துஎம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!..

திரு ஆதிரையைப்
பத்தாம் நாளாகக் கொண்டு
இன்று முதல்
திருவெம்பாவை திருப்பாடல்கள்..


ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதியை
யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டதுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டும் இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
இதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.. 1

பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசிமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க் கன்பர்யாம் ஆரேலோர் எம்பாவாய்.. 2
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

5 கருத்துகள்:

  1. இந்த பதினெட்டு, இருபது தேதிகளில் நான் ஒப்பிலியப்பனைத் தரிசித்திருக்க வேண்டியது.  தள்ளிப்போகிறது.

    தரிசனத்தை இங்கு செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. கோயில்களுக்குப் போயே ஒரு வருஷம் ஆகி விட்டது. இனியாவது போகும்படி நேரவேண்டும். அருமையான தரிசனம் இங்கே கிடைத்தது. தலைப்பில் உள்ள குறளின் பொருள் இப்போ மழையைத் திட்டுபவர்களுக்குப் புரியணும்! எங்கே! இங்கே மழை நின்றிருக்கிறது. நேற்றிலிருந்து சூரியன் தலைகாட்ட ஆரம்பிச்சாச்சு.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இறைவனார்கள் ஸ்ரீ பார்த்தசாரதி ஒப்பிலியப்பன்,ஸ்ரீ கோடீஸ்வரர்,
    அம்பிகை ஸ்ரீ திரிபுரசுந்தரி அனைவரையும் பணிவன்புடன் கண் குளிர தரிசித்துக் கொண்டேன். பாசுரமும், பதிகமும், தேவாரமும் கண்களை மட்டுமின்றி மனதையும் மகிழ்வித்தது. திருவெம்பாவை பாடல்களை பாடி மகிழ்ந்தேன். பதிவு அருமை. இந்த மார்கழி நன்னாளில் உங்கள் பகிர்வுகள் மனதுக்கு இதம் தருபவையாக உள்ளது. மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. மிக இனிய தரிசனம் ...

    பார்த்த சாரதி பெருமானையும் ஒப்பிலியப்பனையும் மற்றும் புதிதாக திரு கோடீஸ்வர நாதரையும் கண்டு தரிசித்துக் கொண்டேன் ...

    வண்டாடு பாடல் சிறப்பு ..

    பதிலளிநீக்கு
  5. இனியதான தரிசனம். தில்லியில் இருந்தபடியே தரிசனம் கிடைத்தது! நன்றி.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..