நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 23, 2020

ஸ்ரீ வேங்கடேச சரணம் 1

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பிணியும் பகையும் தொலைந்திட வேண்டும்..

ஆரணன் ஆதிகாரணன் புகழ்வான் பணிந்திடும் பரிபூரணன்
நாரணன் திருவடி பணிந்திடு நெஞ்சமே நலமெலாம் இங்கு நிறைவதற்கு..
***

இன்றைய பதிவில்
திருமங்கையாழ்வார் அருளிச் செய்த
பெரிய திருமொழி
முதற் பத்து - ஒன்பதாம் திருமொழி


தாயேதந்தை யென்றும் தாரமே கிளைமக்க ளென்றும்
நோயேபட் டொழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியா ளென்னைக் கொண்டருளே..{1028}

மானேய் கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..{1029}

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாமலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..{1030}

குலந்தான் எத்தனையும் பிறந்தே இறந்தெய்த் தொழிந்தேன்
நலந்தான் ஒன்றுமிலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலந்தோய் நீள்முகில்சேர் நெறியார்த் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..{1031}


எப்பாவம் பலவும் இவையே செய்திளைத் தொழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்தேத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண்வரைசூழ் திருவேங்கட மாமலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..{1032}

மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்தெய்த் தொழிந்தேன்
விண்ணார் நீள்சிகர விரையார்த் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..{1033}

தெரியேன் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர்ப் பூம்பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..{1034}

நோற்றேன் பல்பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேனிப் பிறப்பே இடருற்றனன் எம்பெருமான்
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ்வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..{1035}

பற்றேலொன்றும் இல்லேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேலொன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல்தேன் பாய்ந்தொழுகும் கமலச்சுனை வேங்கடவா
 அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..{1036}

கண்ணாய் ஏழுலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம்பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திருமங்கை யர்க்கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கில்லை பாவங்களே..{1037}
***
நன்றி - கேசவ் ஜி..
குறுகி வந்த கொடுங்கிருமியின் காரணத்தால்
திருமாமலையில் பக்தர்க்கு தரிசனம் நிறுத்தப்பட்டது
என்று அறிந்து நெஞ்சம் வருந்துகிறது..

ஆயிரமாயிரம் அன்பர்க்கு பசிப்பிணி தீர்த்த
அன்ன கூடமும் அடைக்கப்பட்டது தான் விதியோ!..

தாயினும் இனியாய் தலைவா இனிதாய் தயவுடையாய்
இன்னலும் தீராய் இமையவர் கோனே திருமாமலை தனை உடையவனே..

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
தஞ்சாவூர் 
வந்தார்க்கு வளந்தரு வளர்திரு வேங்கடம் உடையவனே
அடையா நடையும் அடைபட்டதே அலந்தார் மனமும் உடைபட்டதே
எந்தாய் இறைவா இடர் களைவாய் வரும்பிணி தன்னைத் தீர்த்தருள்வாய்
கொடையாய்க் குளிர்விழி திறந்தருள்வாய் திருமாமலையை உடையவனே!..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

16 கருத்துகள்:

 1. விரைவில் அனைத்தும் சரியாகப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   அனைத்தும் நலமாக வேண்டிக் கொள்வோம்.. நன்றியக்கா...

   நீக்கு
 2. தமிழ்நாட்டிலும் சிதம்பரம், திருவானைக்கா, மீனாக்ஷி கோயில் போன்றவை அடைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் சொல்கின்றன.திருச்செந்தூர்க் கோயிலும், பழநி கோயிலும் கூட அடைக்கப்பட்டதாகத் தகவல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தஞ்சை பெரிய கோயிலும் கூட கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக அடைக்கப்பட்டுள்ளது..

   அனைத்தும் நலமாக வேண்டிக் கொள்வோம்.. நன்றியக்கா...

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   அனைத்தும் நலமாக வேண்டிக் கொள்வோம்.. நன்றி...

   நீக்கு
 4. ஒன்பதாம் திருமொழி படித்தேன்.
  விரைவில் எல்லாம் இறையருளால் நலம் பெறும் என்று நம்புவோம்.
  வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்..
   அனைத்தும் நலமாக வேண்டிக் கொள்வோம்.. நன்றி...

   நீக்கு
 5. எல்லாம் நலமாகும் வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..
   அனைத்தும் நலமாக வேண்டிக் கொள்வோம்.. நன்றி...

   நீக்கு
 6. அனைத்தும் நலமாக வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
 7. நோய் நீங்கி, நோயால் வரும் துயர் நீங்கி அனைவரும் நிம்மதியான சூழலில் வாழ பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 8. நம்மக்களுக்கு கோவிலுக்குப் போனால்தான் தொழுதமாதிரி இருக்கும்

  பதிலளிநீக்கு
 9. எனக்கு மிகவும் பிடித்தமான, அடிக்கடி சொல்லும் 'தாயே தந்தையே' ப்ரபந்தம் வெளியிட்டது சிறப்பு.

  குளிர்காலத்தில் பெருமாளுக்கு வெந்நீர் அபிஷேகமும், சுக்கு மிளகு போட்ட பாலும் கண்டருளப்பண்ணுவார்கள். பெருமாளை (உற்சவர், மூலவர்) கடவுளாகவே நினைத்து குழந்தையைப் பார்த்துக்கொள்வது போலப் பார்த்துக்கொள்வார்கள்.

  அவனுக்கு ஏதும் கெடுதல் வந்துவிடக் கூடாது, அதைவிட அவன் அடியார்களுக்கு (நல்லடியார்களுக்கு) துன்பம் வரும் நிலை வரக்கூடாது என்றே பக்தர்களுக்கான நடை சார்த்தப்பட்டது என்று நினைத்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. எங்கும் இருப்பான் நம் வள்ளல் வெங்கடேசன்.
  நம் உள்ளமும் உடலும் என்றும் அவன் நினைவில். நின்று நின்று
  கால் கடுத்தான்.
  இன்று அவனுக்கும் ஓய்வு.
  நலம் பெற்றதும் நாமும் அவனைத் தொழலாம்.
  அத்துணை பாசுரங்களும் நன்று.

  பதிலளிநீக்கு
 11. நலமே விளைய வேண்டும். விரைவில் விளைந்திடட்டும்! பதட்டம் இல்லாத சூழல் உலகம் முழுவதிற்கும் அமைதி நல்கிட வேண்டும் துரை அண்ணா..

  கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..