நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 30, 2020

சிவமே சரணம் 6


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பிணியும் பகையும் நீங்கிட வேண்டும்..
***
நாளும் பாராயணம் செய்வோர் தம் வாழ்வில்
நலம் பல சேர்க்கும் அற்புதத் திருப்பதிகம்..

ஸ்ரீ கமலாம்பிகை உடனாகிய ஸ்ரீ தியாகேசர்
திரு ஆரூர் 

இன்றைய பதிவில்
ஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த
அஞ்செழுத்துத் திருப்பதிகம்..


திருக்கடவூர் வீரட்டம் 
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்திலும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்று அடிவாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.. 1

மந்திர நான்மறை ஆகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.. 2

ஸ்ரீ கற்பகவல்லி உடனாகிய ஸ்ரீ கபாலீஸ்வரர்
திரு மயிலை  
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே.. 3

நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.. 4

கொங்கலர் வன்மதன் வாளிஐந் தகத்து
அங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கரவின் படம் அஞ்சும் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே.. 5


ஸ்ரீ மனோன்மணி அம்பிகை உடனாகிய ஸ்ரீ சந்த்ரசேகரர்
உவரி 
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்தெய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே.. 6

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செழுத்துமே.. 7

வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.. 8

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனாகிய ஸ்ரீ பூவணநாதர்
கோயில்பட்டி  
கார்வணன் நான்முகன் காணுதற் கொணா
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செழுத்துமே.. 9

புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்
சித்தத்த வர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே.. 10

நற்றமிழ் ஞான சம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே..11


திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

8 கருத்துகள்:

 1. அன்பின் நல்வரவு..
  அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 2. நாடு நலம் பெறட்டும்.  நன்மை எல்லாம் விளையட்டும்.

  பதிலளிநீக்கு
 3. இன்று உலக மருத்துவர்கள் தினம் அவர்களை வணங்கி தொழுவோம்.

  பதிலளிநீக்கு
 4. நலமே விளையட்டும்.

  இந்தப் பேரிடர் காலத்தில் மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 5. அன்பே சிவம்...

  அனைவரும் வாழ்க வளத்துடன்...

  பதிலளிநீக்கு
 6. ஐயா வணக்கம்
  நலமதானே
  கவனமாக இருங்கள்

  பதிலளிநீக்கு
 7. உலக மருத்துவர் தினம் மருத்துவர்களை வாழ்த்துவோம்.
  மருத்துவராக இறைவன் விரைவில் வந்து எல்லோருக்கும் நலம் அளிக்க வேண்டும் .

  பதிகம் பாடி தரிசனம் செய்தேன்.

  பதிலளிநீக்கு
 8. நாடும், வீடும் செழிக்கட்டும். அனைவருக்கும் உடல் நலம் நல்லபடியாக இருக்கட்டும். பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு