நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 22, 2020

சிவமே சரணம் 1

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

நாளும் பாராயணம் செய்வோர் தம் வாழ்வில்
நலம் பல சேர்க்கும் அற்புதத் திருப்பதிகம்
இன்றைய பதிவில்..


ஆலவாய் அண்ணலே 
அஞ்சலென்றருள் செய் எமை!..

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த
திருக்கடைக்காப்பு

இரண்டாம் திருமுறை
எண்பத்தைந்தாவது திருப்பதிகம்

ஸ்ரீ மறைக்காட்டு மணாளன்
திருமறைக்காடு 
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே...

என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடொன்றொடேழு பதினெட்டொடாறும்
உடனாய நாட்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே..

ஸ்ரீ மட்டுவார்குழலி உடனாகிய ஸ்ரீ தாயுமான ஸ்வாமி
திருச்சிராப்பள்ளி 
உருவளர் பவளமேனி ஒளிநீறணிந்து உமையோடும்
வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல்அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை
தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே..

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறை
யோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு
நோய்களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே..

ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர்
திரு ஐயாறு 
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே..

வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே..

ஸ்ரீ மங்களாம்பிகை உடனாகிய ஸ்ரீ கும்பேஸ்வரர்
கும்பகோணம்
செப்பிள முலைநன் மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிளமதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதமிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாவர்க்கு மிகவே..

வேள்பட விழிசெய்தன்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே..


ஸ்ரீ காத்யாயனி உடனாகிய ஸ்ரீ கல்யாணசுந்தரர்
திருவீழிமிழலை 

பலபல வேடமாகும் பரன் நாரிபாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்
வருகாலமான பலவும்
அலைகடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே..

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியுநாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே..

ஸ்ரீ அல்லியங்கோதை உடனாகிய ஸ்ரீ தியாகேசர்
தஞ்சாவூர் 
தேனமர் பொழில் கொளாலை விளைசெந் நெல்துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறை ஞான 
ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத
வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே..

திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

20 கருத்துகள்:

 1. ஸ்ரீ காத்யாயனி உடனாகிய ஸ்ரீ கல்யாணசுந்தரர் தரிசனம் கிடைத்தது நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. நலமே விளையட்டும். இறையருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
   வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்..
   நன்றியக்கா...

   நீக்கு
 3. திருவீழிமிழலை அழகனையும், அழகியையும் எத்தனை ரசித்தாலும் ஆவல் தீராது.

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   நலமே விளையட்டும்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. இனிய காலை வணக்கம் துரை அண்ணா.

  நல்ல தரிசனம். உலகமெங்கும் எல்லோரும் நலமுடன் வாழ்ந்திடட்டும்

  அண்ணா உங்கள் கதைகள் அனைத்தும் வாசித்தேன். தென்றல் புயலானது உட்பட !!! அனைத்தும் அருமை அண்ணா.

  கீதா  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோ..

   எனது கதைகளை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்...

   வாழ்க வளமுடன் வாழ்க வையகம்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 6. அற்புத திருப்பதிகம் தொடர வாழ்த்துக்கள்.

  இப்போது ஏற்பட்டு இருக்கும் காலநிலை துன்பங்கள் தீர நல்ல பாடல்.

  தெய்வ தரிசனங்கள் மிக அருமை.
  நலமே விளைக! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
   வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   வாழ்க வையகம்.. வாழ்க நலமுடன்..

   நீக்கு
 7. நலமே விளையட்டும்.  இறையருள் அனைவருக்கும் வாய்க்கட்டும்.  தரிசனம் கிடைக்கச் செய்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 8. கொத்தலர் குழலி - கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கும் (அலர்) பூக்களை உடைய தலைமுடியைக் கொண்டவர்.. அல்லது கொத்துக்கொத்தான தாமரை மலர்களைத் தன் குழலில் சூடிக்கொண்டிருப்பவர்.

  இடுகையை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..

   கொத்தலர் குழலி - விளக்கம் நன்று..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 9. இறையருள் இருக்க எல்லாம் நலமாகும்.
  வேயுறு தோளி பங்கன்,
  பதிகம் என்னாளும் நலமே பயக்கும். பயமின்றி இருக்கலாம்.
  இறை தரிசனங்களுக்கு மிக நன்றி துரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

   வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

   நீக்கு
 10. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   ஓம் சிவாய நம..
   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..