நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 26, 2020

சிவமே சரணம் 4

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பிணியும் பகையும் நீங்கிட வேண்டும்..
***


நாளும் பாராயணம் செய்வோர் தம் வாழ்வில்
நலம் பல சேர்க்கும் அற்புதத் திருப்பதிகம்..

இன்றைய பதிவில்
திருநாவுக்கரசு ஸ்வாமிகள் 
அருளிச் செய்த

நம சிவாயத் திருப்பதிகம்..

தருமசேனராகிய மருள்நீக்கியார் 
சிவ சமயத்தைச் சார்ந்தார் என்பதற்காக
 முறையறியாத மகேந்திர பல்லவன் 
ஆணையிட்ட கொடுமைகள் அனைத்தும் 
தோல்வியில் முடியவே
இறுதியாக கல்லுடன் பிணைத்துக் கடலில் இட்டான்..அவ்வேளையில் ஸ்வாமிகள்
ஓதியருளிய திருப்பதிகம் இது..
***
சொற்றுணை வேதியன் சோதி வானவன் 
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நம சிவாயவே..1

பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரி
ஆவினுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நம சிவாயவே.. 2

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நம சிவாயவே.. 3

இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கின் பிரான் என்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளி நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நம சிவாயவே.. 4வெந்தநீ றருங்கலம் விரதிகட் கெல்லாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
 திங்களுக்கு அருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக்கு அருங்கலம் நம சிவாயவே.. 5

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அல்லால்
நலமிலன் நாடொறும் நல்கு வான் நலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நம சிவாயவே.. 6

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நம சிவாயவே.. 7இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே..8

முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே
அந்நெறியே சென்றங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன்னெறி ஆவது நம சிவாயவே.. 9

மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நம சிவாயப் பத்து
ஏத்த வல்லார் தமக்கு இடுக்கணில்லையே.. 10
-: திருச்சிற்றம்பலம்ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

9 கருத்துகள்:

 1. நலமே விளையட்டும். இந்தப் பேரிடரிலிருந்து விடுபட எம்பெருமான் ஈசன் வழி வகுக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வெங்கட்..

  இனியெங்கும் நலமே விளையட்டும்..
  மகிழ்ச்சி.. நன்றி...

  பதிலளிநீக்கு
 3. மக்கள் பிணியிலிருந்து விலகட்டும் இறையருளால்...

  பதிலளிநீக்கு
 4. இறையருளால் உலகமக்கள் அனைவரும் நலமாக இருகட்டும்.
  வாழ்க வையகம் வாழ்க வள்முடன்.

  பதிலளிநீக்கு
 5. இதுவும் கடந்து போகும் ஐயா
  எச்சரிக்கையாக இருங்கள்

  பதிலளிநீக்கு
 6. அகிலத்தை அந்த ஆண்டவன் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 7. இந்த மாபெரும் பேரிடரில் இருந்து ஈசன் அனைவரையும் காத்து அருளட்டும். அவன் தாள் பணிவோம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..