நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 31, 2019

மார்கழி தரிசனம் 15

தமிழமுதம்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை..(1031) 
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 15


எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீபோதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண் ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்

ஸ்ரீ சௌந்தரராஜப்பெருமாள்
நாகப்பட்டினம்  
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் எனப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொருநாள்
மாவாய்ப் பிளந்த மகன்..(2209)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
புள்ளிருக்கு வேளூர் - வைத்தீஸ்வரன்கோயில்

ஸ்ரீ ராமபிரான் வழிபட்ட திருத்தலம்..
ஜடாயு உய்வடைந்த திருத்தலம்.. 

ஸ்ரீ வைத்தீஸ்வர ஸ்வாமி 
ஸ்ரீ தையல் நாயகி அம்பிகை 
ஸ்ரீ செல்வ முத்துக்குமரன் 
பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாழ்நாளது உடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.. (2/43)
-: திருஞானசம்பந்தர் :-


பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப் 
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.. (6/54)
-: அப்பர் ஸ்வாமிகள் :-
***

திருவாசகத் தேன்


பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ..
***

தேவி தரிசனம்

ஸ்ரீ தையல் நாயகி 
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்அடியாரை ,மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சை உண்டு
கறுக்கும் மிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே!..(46) 
-: அபிராமிபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. காலை/இங்கே மாலை வேளையில் அருமையான தரிசனம். வைத்தீஸ்வரன் கோயிலில் குடி கொண்டிருக்கும் குடும்பத்தினரின் அருள் நண்பர்கள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா அவர்களுக்கு நல்வரவு...

      தங்கள் பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. ரசித்தேன்,  ருசித்தேன்,  தரிசித்தேன்.   ஆழ்வார் அமுதம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. புகைப்படத் தெரிவு, பாடல் அடிகளுக்கு பொருள் அமைத்தல், பல கோயில்களுக்கு பதிவுகள் மூலமாக அழைத்துச்செல்லல் என்பதில் உங்களின் பாணி மிகவும் அருமை. இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன்....

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் ஜி...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் அருமை.
    வைத்தீஸ்வரன், தையல் நாயகி தரிசனம் மகிழ்ச்சி தருகிறது.
    ஒவ்வொரு கிருத்திகைக்கும் செல்வமுத்துக்குமரனை தரிசனம் செய்து வருவோம்.
    நினைவுகள் அங்கே.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன்...

      நீக்கு
  7. படங்களும் பாடல்களும் மிக அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன்...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..