நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 25, 2019

மார்கழி தரிசனம் 09

தமிழமுதம்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்ற பிற.. (095)
***

அருளமுதம்

ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 09


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப்பெருந் துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!..
***
ஆழ்வார் அமுதம்


ஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் - திருக்கண்ணபுரம் 
பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண்தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு..(2148)
-: பொய்கையாழ்வார் :- 

இன்று ஸ்ரீ ஆஞ்சநேய ஜயந்தி



ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி 
தந்நோ மாருதி ப்ரசோதயாத்:

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
திருநாகை - நாகப்பட்டினம்

ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்பிகையுடன் எம்பெருமான் 
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்
பூணத்தான் அரவு ஆமை பொறுத்தவன்
காணத்தான் இனியான் கடல்நாகைக்கா
ரோணத்தான் என நம்வினை ஓயுமே..(5/83)
-: திருநாவுக்கரசர் :-
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த 
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 09


விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டார்
விழுப்பொருளே உனதொழுப்படி யோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும்படியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..
***

தேவி தரிசனம்
ஸ்ரீ அஞ்சுவட்டத்தம்மன்
கீழ்வேளூர் 
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணிஆரமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.. (34) 
- அபிராமிபட்டர் -



அன்பின் வழியது உயிர் நிலை

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
*** 

11 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு...
      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. சிறப்பு தரிசனம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பதிவு மிக அருமை.
    அனுமன் ஜெயந்தி, கிறிஸ்து பிறப்பு .
    அஞ்சுவட்டத்தம்மன் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அன்பு துரை,
    அருமையான தரிசனங்கள். அனைத்து
    தெய்வங்களையும்
    ஒரே பக்கத்தில் தோன்ற வைத்து விட்டீர்கள்.
    மனதுக்கு மிக இதமாக இருக்கிறது.
    உங்களைப் போல ,கீதாம்மாவைப் ஓல பக்தி நெறி பரப்புபவர்களின்
    சத்சங்கம் கிடைத்தது என் புண்ணிய பலன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  6. திருக்கண்ணபுரம் 96 ஆம் வருஷம் போனோம். தை அமாவாசை அன்று அங்கேயே குளத்தில் குளித்துப் பிரார்த்தனைகள் முடித்தோம். அங்கே உள்ள ராமரும் சிறப்பானவர். கோயிலின் மடப்பள்ளியில் தோசையும் புளிக்காய்ச்சலும் வாங்கிச் சாப்பிட்டோம். குளத்தைச் சுற்றிலும் உள்ள வீடுகளில் அப்போது பலரும் குடி இருந்தனர். இப்போது எப்படி இருக்கோ!

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான பதிவு. படங்களும்ம் மனதுக்கு மகிழ்ச்சி தந்தன ஜி.

    தொடரட்டும் மார்கழி சிறப்புப் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..