நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 02, 2019

தியாக தீபங்கள்

இன்று காந்தி ஜயந்தி!..




நான் பெறுவதற்கு விரும்பும் ஒரே நல்லொழுக்கம் 
உண்மையும் அஹிம்சையும் தான்..
: மகாத்மா :-
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படைவது, எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது.
         அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். - See more at: http://gandhiworld.in/tamil/quotessan.html#sthash.Us4mFTgr.dpuf
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படைவது, எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது.
         அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். - See more at: http://gandhiworld.in/tamil/quotessan.html#sthash.Us4mFTgr.dpuf
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படைவது, எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது.
         அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். - See more at: http://gandhiworld.in/tamil/quotessan.html#sthash.Us4mFTgr.dpuf



தன்னம்பிக்கையும் அடக்கமும் ஒருவனிடம் 
இருக்குமானால் அவன் வாழ்வு தித்திக்கும்..
-: மகாத்மா :-

காந்திஜி - நேதாஜி - வல்லபபாய் படேல்
எளிமையான வாழ்க்கை என்பதிலிருந்து
மாறுகின்ற மனிதனுக்கு
தேவைகள் அதிகரித்து விடும்


அன்பு எங்கே இருக்கின்றதோ - அங்கே கடவுள் இருக்கின்றார்.
அன்பு எப்போதும் எதையும் கேட்காது. கொடுக்கத்தான் செய்யும். 
அன்பு எப்போதும் வன்மம் கொள்ளாது பழி வாங்காது..
-: மகாத்மா :-
***

மாமனிதர் 
லால்பகதூர் சாஸ்திரி அவர்களின்
பிறந்த நாள் - இன்று..

(02.10.1904 - 11.01.1966)
மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்..
சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்..

ஓடக்காரனுக்குக் கொடுக்க காசில்லாததால் 
கங்கையை நீந்திக் கடக்கும் அளவுக்கு 
வாழ்வில் வறுமையைச் சந்தித்தவர்..

தாய் மாமன் அளித்த ஆதரவினால்
காசி வித்யாசாலாவில் கல்வி கற்று
சாஸ்திரி எனும் பட்டம் பெற்றவர்..

மகாத்மாவின் உரைகளினால் கவரப்பட்டு
சுதந்திர வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்டவர்..

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 
ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில்
1951ல் இரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.. 

1956 நவம்பர் 23 
அரியலூருக்கு அருகில் நிகழ்ந்த 
ரயில் விபத்துக்குத் தார்மீக பொறுப்பேற்று 
பதவியை விட்டு விலகிய வீரமகன்!..

படிக்காத மேதையும் பண்பின் சிகரமும்


நாட்டின் பிரதமராகப் பதவி வகித்து ரஷ்யாவில் 
அகால மரணம் அடைந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு 
ஒரு வீடு கூட  சொந்தமாகக் கிடையாது. 

காலம் முழுதும் வாடகை வீட்டிலேயே
வாழ்ந்து முடித்தவர்..

தன் வாரிசுகளுக்கு விட்டுச் சென்றதெல்லாம்
தவணை முறையில் வாங்கிய கார் ஒன்றின்  
கடன் தொகை மட்டுமே!..
***

தியாக தீபம்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்
நினைவு நாள் இன்று.. 

15 ஜூலை1903 .. 02 அக்டோபர் 1975



நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதும்
அதற்காகப் பாடுபடுவதும் தான்
நமது தலையாய கடமை..


அறியாமையும் வறுமையும் போனாலன்றி
நாடு முன்னேறியதாகச் சொல்லமுடியாது..
-: பெருந்தலைவர் :-


தமிழகத்தை முன்னேற்றிய சிறப்புறு முதல்வர்..
கல்விக்கண் கொடுத்த கர்மவீரர்..

அனைவரும் செயலாற்ற வேண்டும். எதிர்காலத்தை அறிவது நம் நோக்கமல்ல. நிகழ்காலத்தில் நாம் எப்படிச் செயலாற்றுகிறோம் என்பதுதான் முக்கியம். - See more at: http://gandhiworld.in/tamil/action_ta.php#sthash.J8IAM8Dc.dpuf
பெருந்தலைவர் காமராஜர்  மறைந்தபோது, 
அவரின் கை இருப்பாக  இருந்தது -
நூறு ரூபாயும் சில்லறைக் காசுகள் மட்டுமே!..

தாய் சிவகாமி அம்மாளுடன்
தாய்க்குத் தலை மகனாகப் பிறந்தும் தாய் முகத்தினைப் பாராமல் 
தாய் நாட்டின் நலனையே சிந்தித்த தங்க மகன்.

சிவகாமி அம்மையாருடன் லால்பகதூர் சாஸ்திரி
இந்திரா - டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன்
எளியவரிடம் இரங்கி குறை கேட்கும் ஏந்தல்
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. - காமராஜர்
மக்களுடன் மக்களாக விளங்கிய பெருந்தலைவர்
அரசியலில் அன்றிருந்தவர்கள் காமராஜரின் நிறம் குறித்து 
இகழ்வதில் - மகிழ்ந்தனர்.

காமராஜரின் மீது வாரி இறைக்கப்பட்ட 
அவதூறுகளுக்கு அளவில்லை. 
அதில் முக்கியமான கோஷம் -
 ஏழைப்பங்காளரின் ஏழடுக்கு மாளிகையைப் பாரீர்!..
என்பது தான்!..  

காமராஜர் வாழ்ந்த வாடகை வீடு
ஆனால் - அவர் வாடகை வீட்டில் வாழ்ந்தது பெரும்பான்மையான தமிழர்களுக்குத் தெரியாமல் போனது தான் கொடுமை!.. 


ஏழையாய்ப் பிறந்து ஏழையாய் வாழ்ந்து
ஏழையாகவே போய்ச்சேர்ந்தவர்..


ஏழையாய்ப் பிறந்து ஏழையாய் வாழ்ந்து - வளர்ந்து
நாட்டின் மிகப் பெரிய பொறுப்புகளில் அமர்ந்து
அரும்பணியாற்றி - இறுதி வரைக்கும் எளியவராகவே
வாழ்ந்து புகழுடம்பு எய்திய புண்ணியர்கள்!..

நல்லாரை நினைப்பதுவும் நன்றே.. 
***

15 கருத்துகள்:

  1. மிக உயர்ந்தவர்களை நினைப்பதும் அவர்களின் எளிமையும் உண்மையும் நிறைந்த வாழ்க்கையின் அர்த்தங்களை உள்வாங்கிக்கொள்வதும் என்றுமே நமக்கு உயர்வைத்தரும். மிக உயர்வான மனிதர்களைப்பற்றி எழுதியமைக்கு இனிய நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியோர்களைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் புண்ணியமே...

      தங்களது அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    அன்பு ஒன்றுதான், கொடுப்பதைவிட பல மடங்கு வட்டியோடு திரும்பக் கிடைக்கக்கூடியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க... வாங்க..

      நமக்கு வட்டி எல்லாம் வேணாங்க..
      அசல் மட்டும் வந்தால் போதும்...

      அதென்ன..
      நடுராத்திரிய உட்டுப் போட்டு
      உச்சி வேளையில ஜலங்கை கிளம்பி இருக்கு!?....

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இந்த ஜ.மோ:)) எப்போ கிளம்பும் என எனக்கே தெரியாது:))

      நீக்கு
  3. மூன்று ரத்தினங்கள்.   காலம் மீண்டும் உருவாக்க முடையாத ரத்தினங்கள்.  நினைவுகூர்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க....

      உண்மையில் இனிமேல் உருவாக்க முடியாத ரத்தினங்கள்...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இனிய காலை வணக்கம் துரை அண்ணா.

    அருமையான பதிவு. அருமையான மனிதர்கள் பற்றி. நினைவில் மட்டுமே!!! இப்படியான மனிதர்கள் இனி வருவார்களோ அண்ணா?

    அன்பு எங்கிருக்கிறதோ அங்கு இறைவன்!! நல்ல வரிகள் உண்மையான வரியும் கூட....மிகவும் ரசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நல்ல மாமனிதர்களை நினைவு கூரும் பதிவு. இன்று உங்கள் பதிவை எதிர்பார்த்தோம்.

    பொன்னான காலங்கள் அவை அன்று வாழ்ந்த மக்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தோன்றுவதுண்டு.

    அன்பு! அதுதான் நம் ஜீவாதாரம். அதுவும் எதிர்பாரா அன்பு!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. மிக நல்ல பதிவு.
    இந்த மா மனிதர்களைப்ப்ற்றி பேசுவது வணங்க்குவது நலம் தரும்.
    அன்பு அது தரும் தெம்பு.
    அன்பு செய்து வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான மனிதர்களைப் பற்றி நினைப்பதே
    அருமை. அவர்களைப் பற்றி நீங்கள் எழுதிப் படிப்பதும் இன்று கிடைத்ததும் புண்ணியம்.
    அவர்கள் வாழ்க்கையிலிருந்து எத்தனை பாடங்கள்
    கற்கலாம்.
    அதுவும் சாஸ்திரி அவர்கள் வாழ்க்கை கண்ணீரில் தோந்தது. மகா உத்தமர்.
    நம் காமராஜரைப் போல தெய்வம் வேறு பார்க்க முடியுமா. கருணை வள்ளல்.

    கண்ணில் ஒத்திக் கொள்ள வேண்டிய பதிவு. நன்றி துரை.

    பதிலளிநீக்கு
  8. மூன்று பேரன்புடையவர்களை குறித்த விடயங்கள் நன்று ஜி

    பதிலளிநீக்கு
  9. துரை அண்ணா ரொம்ப ரொம்ப ஸாரி.

    நீங்க எங்க தளத்துல என்னை விசாரிச்சது கூடப் பார்க்கலை அண்ணா. ஸாரி ஸாரி. தலம் பக்கமே போகலை இல்லையா....அதுவும் கமென்ட் மாடரேஷன் போட்டுருக்கறது கூட மறந்திட்டேன்.....மன்னிச்சுக்கோங்கண்ணா....

    மிக்க மிக்க நன்றி துரை அண்ணா விசாரிச்சமைக்கு. இங்க இப்ப வந்தாச்சே...கை நலம் ஓகே....மெதுவாகத்தான் அடிக்கிறேன்

    எங்கள் ப்ளாகில் போட்ட கதை ஒன்றை எங்கள் தளத்தில் ஷெட்யூல் செஞ்சது கூடத் தெரியலை...மறந்து போச்சு....வேறு என்ன பதிவுகள் வந்திருக்குனு எங்க தளத்துக்குள்ள போனப்பதான் அப்பு ஷெட்யூல் பண்ணி வைச்சிருந்தது தெரிஞ்சுச்சு...

    இப்பத்தான் பப்ளிஷ் செஞ்சு அங்கும் பதில் கொடுக்கறேன்...

    மன்னிச்சுக்கோங்கண்ணா பதில் சொல்லாம விட்டதுக்கு...

    மிக்க நன்றி அண்ணா உங்கள் அன்பிற்கும் விசாரிப்புக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சாஸ்திரி மட்டும் இறக்காமல் இருந்திருந்தால்! நம்மால் கற்பனைதான் காண முடியும். பகிர்வுக்கு நன்றி.படங்கள் எல்லாம் அருமை. காமராஜருக்குச் சக்கரவட்டமாகச் சுழற்றிச் சுழற்றிப் பேச வராது. வெட்டொன்று, துண்டொன்று எனப் பேசும் குணம். ஆனாலும் மக்கள் தலைவராக இருந்தார், இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  11. மூன்று பெரும் ஆளுமைகள்...

    பகிர்ந்து கொண்ட படங்களும் சிறப்பு. அன்றைய அரசியல்வாதிகள் பற்றிப் படிக்கும்போது இன்றைய அரசியல்வியாதிகள் நினைவுக்கு வந்து வருத்தம் உண்டாக்குகிறார்கள்!

    நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..