நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 12, 2019

நமோ நாராயணாய 4

புண்ணிய புரட்டாசி மாதத்தின்
நான்காவது சனிக்கிழமை இன்று..

 ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச் செய்த
திருப்பாசுரங்களுடன் திருமாலவனின் திவ்ய தரிசனம்

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
தஞ்சை 
ஸ்ரீப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் - தஞ்சை 
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று.. (2082)

ஸ்ரீ பார்த்தசாரதி - திரு அல்லிக்கேணி 
ஸ்ரீ செல்வநாராயணப் பெருமான்
மேல்கோட்டை 
வாயவனை அல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை அல்லது தாந்தொழா பேய்முலைநஞ்சு
ஊணாக உண்டான் உருவோடு பேரல்லால்
காணா கண்கேளா செவி.. (2092)

ஸ்ரீ அத்தி வரதராஜன் - திருக்காஞ்சி 
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசையளந்த செங்கண்மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி.. (2102)

ஸ்ரீ சௌந்தரராஜப்பெருமாள்
நாகப்பட்டினம் 
இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்
அறைபுனலும் செந்தீயும் ஆவான் பிறைமருப்பின்
பைங்கண் மால்யானை படுதுயரம் காத்தளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி.. (2110)

ஸ்ரீ அப்பக்குடத்தான் - கோயிலடி 
குன்றனைய குற்றஞ்செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலா என்னெஞ்சே என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு.. (2122)

ஸ்ரீராமஸ்வாமி - திருக்குடந்தை 
அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி
உயநின் திருவடியே சேர்வான் நயநின்ற
நன்மாலை கொண்டு நமோநாராயணா என்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது.. (2138)

ஸ்ரீகோதண்டராமன் - வடுவூர் 
ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் - தஞ்சை யாளி நகர் 
தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழுவாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்
அந்தரம் ஒன்றில்லை அடை.. (2139)


நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு.. (2169)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

17 கருத்துகள்:

 1. திருப்பாசுரங்களுடன், பெருமாள் தரிசனம் செய்துகொண்டேன்.  நன்றி.

  பதிலளிநீக்கு
 2. இரண்டு தரம் போயும் அப்பக்குடத்தான் முகத்தைக் காட்ட மாட்டேன்னு அடம்! :( எப்போக் கூப்பிடுவானோ தெரியலை. வடுவூர் ராமரின் அழகு அற்புதம். அங்கே போனப்புறமாத் தான் தெரிந்தது இந்த ராமர் வந்து ராஜகோபாலனின் பெருமையைக் குறைத்து விட்டான் என! பரமாசாரியார் எழுதி இருந்தார் ராமர் கிடைத்த விதம் பற்றி. இந்த மூன்று ராஜகோபலர்களில் மன்னார்குடி, வடுவூர் பார்த்தாச்சு. ஆறுபாதி என்னும் விளநகர் தான் பாக்கி. இத்தனைக்கும் உறவு நெருங்கிய சிநேகிதம்னு நிறைய இருக்காங்க. ஆனால் அந்த வழியாவே போய் வந்து கொண்டிருக்கோம். ஊருக்குள் நுழையவில்லை. நுழையும் இடத்தில் முன்னால் ஒரு தூக்கணாங்குருவிக்கூடு இருந்தது. இப்போ இருக்கோ என்னமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியக்கா...

   வடுவூர் ஸ்ரீ ராமனைப் பற்றி பல பதிவுகள் எழுதியிருக்கின்றேன்...

   ஊருக்குள் நுழையும் இடத்தில் தூக்கணாங்குருவிக் கூடா?...
   அது அங்கேயே இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
  2. கீசா மேடம்... இந்த முறை அப்பக்குடத்தான், முகம் மட்டும்தான் காட்டினான், நாங்கள் சென்றிருந்தபோது (ஜேஷ்டாபிஷேகம் காரணமாக). ஆனால் பிரசாதமாக அப்பம் கிடைத்தது.

   நீக்கு
 3. நாளைக்குத் தான் இங்கே சனிக்கிழமை என்றாலும் திவ்ய தரிசனத்துக்கு நேரமும், காலமும் எதுக்கு? எப்போ வேணாலும் தரிசிக்கலாம். அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.

  பதிலளிநீக்கு
 4. பெருமாளை தரிசித்தேன் நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  புரட்டாசி சனிக்கிழமை நாராயணனின் திவ்ய தரிசனங்கள் காணும் பேறு அடையப் பெற்றேன். நன்றி. அழகான கோவில்களில் எழுந்தருளியிருக்கும் பெருமாளின் அருள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டிக் கொண்டேன்.

  ஸ்ரீ பொய்கையாழ்வார் திருபாசுரங்களைப் பாடி மகிழ்ந்தேன். அவன் பாதங்களை விடாது கெட்டியாக பற்ற அவனருளால் முயற்சிக்கிறேன். இன்றைய பாத தரிசனமும் பார்த்தவுடன் மன அமைதியை தந்தது. அனைத்தையும் பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்.

  என் பதிவுக்கு வந்து என் எழுத்துக்களை ஊக்குவிப்பதற்கும் என் பணிவான நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வேண்டுதலே எனது வேண்டுதலும்.....

   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பாசுரங்களும் படமும் விளக்கமும் வழக்கம் போல அருமை அண்ணா.

  தரிசனம் கிட்டி!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. பதிவு அழகு.. இன்று கடைசிச் சனிக்கிழமை எல்லோ.. வரும் வெள்ளி ஐப்பசி வெள்ளியாகிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் பக்திமானுக்கு நல்வரவு...

   வரும் வெள்ளி ஐப்பசி வெள்ளி என்று
   நீங்களும் ஆன்மீக வியாபாரி மாதிரி களத்தில் இறங்கி விடாதீர்கள்..

   ஊர் உலகம் தாங்காது...

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. பெருமாள் படங்களும் பொருத்தமான ப்ரபந்தப் பாசுரங்களும் மனதில் நின்றன

  வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
  தாயவனை யல்லது தாந்தொழா - பேய்முலைநஞ்
  சூணாக வுண்டான் உருவோடு பேரல்லால்
  காணாகண் கேளா செவி.

  வாய் அவனை அல்லாது என்றுதானே வரணும் என்று யோசித்து ப்ரபந்தத்தைத் தேடிப்பார்த்து, அர்த்தத்தை மீண்டும் அறிந்தேன். பாடலுக்காக 'அல்லது' என்பது 'அல்லாது' என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. அத்தனை பாசுரங்களும்,
  திருமால் வடிவழகைக் காட்டும் படங்களும் மிக அருமை. சனிக்கிழமை கோவில் செல்லாமலே பெருமான் தரிசனம் அருளி விட்டான்.
  அன்பு துரைக்கு நன்றி.
  வடுவூர் ராமன் அழகோ அழகு.

  பதிலளிநீக்கு
 10. அற்புத தரிசனம் ...

  ஓம் நமோ நாராயணா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..