நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 05, 2019

நமோ நாராயணாய 3

புண்ணிய புரட்டாசி மாதத்தின்
மூன்றாவது சனிக்கிழமை இன்று..

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச் செய்த
திருப்பாசுரங்களுடன் திரு அரங்கனின் திவ்ய தரிசனம்


திருஅரங்கன்
திரு அரங்க நாயகி
தீர்த்தம் - கங்கையிற் புனிதமாய காவிரி
திருத்தல விருட்சம் - ஸ்ரீ வில்வம், புன்னை

ப்ரவணாக்ருதி விமானம்..
தெற்கு நோக்கிய திருமுக மண்டலம்..
அரவணையிற் கிடந்த திருக்கோலம்..

பதினோரு ஆழ்வார்களால்
மங்களாசாசனம் செய்விக்கப் பெற்ற திருத்தலம்..
நூற்றெட்டு திவ்ய தேசங்களுள் முதலாவதானது..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
மணக்கோலம் கொண்டு இங்கு தான்
அரங்கனுடன் கலந்தனள்...

உடையவராகிய ஸ்ரீராமானுஜர்
திருநாடு எய்தியதும் இங்குதான்..பச்சைமா மலைபோல்மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.. (873)

மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போல
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட் கொருவனென்று உணர்ந்த பின்னை
ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கமன்றே.. (886)


சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயற்கணென்னும் வலையுள் பட்டழுந்துவேனை
போதரேயென்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன்பால்
ஆதரம் பெருக வைத்த அழகனூர் அரங்கமன்றே..(887)


விரும்பி நின்றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன்றில்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறையிறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்குமாறே..(888)


இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே
தனிக் கிடந்தரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனியிருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனியரும்பு உதிருமாலோ என்செய்கேன் பாவியேனே.. (889)

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தைஅரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே.. (890)

ஸ்ரீரங்கநாயகித் தாயார் 
இன்று நவராத்திரியின் ஏழாம் நாள்..
ஸ்ரீ ரங்கநாயகியின் திருவடி சேவை நிகழும் நாள்...

ஸ்ரீரங்கநாச்சியார் - ஸ்ரீரங்கநாதன் 
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் - உறையூர் 
ஸ்ரீகமலவல்லி - ஸ்ரீநம்பெருமாள் 
கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே.. (894)
-: தொண்டரடிப் பொடியாழ்வார் :-

ஓம்
ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

12 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  அரங்கன் தரிசனம் ஆச்சு.   இனிய பாசுரங்களுடன்....

  பதிலளிநீக்கு
 2. இன்றைய அரங்கனின் தரிசனம் நன்று ஜி

  பதிலளிநீக்கு
 3. விரும்பி நின்று ஏத்தமாட்டேன்.... கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினைக் களிக்குமாறே. (கண்டுகொண்டேன் இல்லை)

  திருமாலைக்கு உருகார் ஒரு மாலைக்கும் உருகார்.

  படங்களும் இடுகையும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 4. அரங்க தரிசனம் அருமை. அரங்கனின் நாயகியுடன்
  அரங்கன் தரிசனமும் தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரங்களும் சேவிக்கும் பரிசு பெற்றேன். மிக நன்றி அன்பு துரை.

  பதிலளிநீக்கு
 5. இனிய காலையில் நம்பெருமாளின் திவ்ய தரிசனம். நேரில் பார்க்க முடியலையே என்னும் குறை தீர்ந்தது. ரொம்ப நன்றி துரை!

  பதிலளிநீக்கு
 6. புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசனம் ஆச்சு.
  இந்த நவராத்திரிக்கு ஒரு நாள் தான் கோவில் போக முடிந்தது.
  தொலைக்காட்சியிலும் உங்கள் பதிவிலும் இறைவனை தரிசனம் செய்து வருகிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அழகிய சுவாமி தரிசனம் கிடைச்சது.. மகிழ்ச்சி.
  இன்று மூன்றாவது சனியோஒடு, சரஸ்வதியின் நாளும் ஆரம்பம்.

  பதிலளிநீக்கு
 8. இனிய காலை வணக்கம் துரை அண்ணா...

  நல்ல தரிசனம்! மூன்றாவது சனிக்கிழமை! படங்களும் பாடல்களும் சிறப்பு . நான் நேற்று பார்த்தும் படங்கள் பாதியில் நின்று கொண்டிருந்தன...இதோ இப்ப முழுமையா பார்த்தாச்சு...

  கூடவே பூஜையின் தொடக்கும் இங்கு பங்களூரில் தொடங்கிவிட்டது. கோயில்கள் எல்லாம் கூட்டம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 9. இனிய பாசுரங்கள். அரங்கன் மற்றும் தாயாரின் திவ்ய தரிசனம்.

  இந்த முறை திருவரங்கம் கோவிலில் கொலு வைக்கவில்லை - சென்று பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

  படங்கள் அனைத்தும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ திருவரங்கத்தில் கொலு வைக்க வில்லையா இந்த வருடம் ..

   நீக்கு
 10. அரங்கன் திருவடிகளே சரணம் ..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..