நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 17, 2019

நமோ நாராயணாய 5

இன்றுடன் புரட்டாசி நிறைவு பெறுகின்றது..

நன்றி - ஸ்ரீ கேசவ் ஜி  
நாள் முழுதும் நம்பெருமாள் தன் நினைவுடன் இருந்ததாக ஒரு நினைப்பு..

நாம் அவன் நினைவில் இருக்கின்றோமோ.. இல்லையோ!..

அவன் மட்டும் நம் நினைவுடன் தான் இருக்கின்றான் என்பது உண்மை...

தொடரும் ஐப்பசியில் தீபாவளி, கேதார கௌரி வழிபாடு,
கந்த சஷ்டி சூர சங்காரம் என கொண்டாட்டங்கள்...

எல்லா வேளைகளிலும் அவனருள் துணை நிற்பதற்கு
மனதார வேண்டிக் கொள்வோம்..

இன்றைய பதிவில்
அற்புதமான ஒரு காட்சி -
பக்த ப்ரகலாதா என்னும் திரைப்படத்திலிருந்து...


ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

18 கருத்துகள்:

 1. புரட்டாசி நிறைவு...   எங்கள் ஊரில் நாளை "கொண்டாடி"த் தீர்த்துவிடுவார்கள்! காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 2. நம் நினைவில் அவர் இருப்பாரா....?

  ம்....ஹூம்...    இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றாகத்தான் இருக்கும்...

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஸ்ரீராம் இதென்ன இன்று நீங்க, இப்ப கில்லர்ஜி எல்லாரும் கமல் ஹாசர் பாஹையில வசனம்!!!!

   கீதா

   நீக்கு
 3. ரெங்காராவுக்குதான் என்ன ஒரு கம்பீரமான தோற்றம், தோற்றத்துக்கு ஏற்ற நடிப்பு...     தெலுங்கில் இருந்தாலும் தமிழில் பார்த்திருப்பதால் ரசிக்க முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் காட்சியை எத்தனை தடவை பார்த்தாலும் பரவசம் தான்...

   மொழி ஒரு பிரச்னையே இல்லை...

   அதிலும் ரோஜா ரமணி தான்!...

   நாராயண... நாராயண...

   நீக்கு
 4. ஆகா! என்ன ஆச்சரியம்! இன்று மாலை பிறந்ததில் இருந்தே என் மனம் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது. இன்னிக்கு ஆண்டாளம்மா அரங்கனுக்குத் துலா ஸ்நானத்துக்குக் காவிரி நீர் எடுக்க வருவாள். நாங்க காலையிலேயே போய் நின்று கொள்வோம். அந்தச் சங்கு சப்தம் கேட்டதும் ஆண்டாளம்மா நீர் எடுத்துக்கொண்டு வருகிறாள் என்பது புரியும். இந்த வருஷம் மானசிகமாகப் பார்த்துக்க வேண்டியது தான். நம்பெருமாளைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. பக்த பிரஹலாதாவும் ரோஜாரமணியும் மறக்க முடியுமா?

  பதிலளிநீக்கு
 6. கேஷவின் அழகான பொருள் பொதிந்த ஓவியம்!

  பதிலளிநீக்கு
 7. இந்தியாவில் காலை நேரம் ஆறரைமணிக்குள்ளாக இருக்கும். ஆண்டாளம்மா எங்க குடியிருப்பைத் தாண்டிச் செல்லுவாள்.

  பதிலளிநீக்கு
 8. //நாம் அவன் நினைவில் இருக்கின்றோமோ.. இல்லையோ//

  இருந்தால் அனைவரும் நலமே...

  பதிலளிநீக்கு
 9. ஐப்பசி கார்த்திகையில், அடை மழை பொழியட்டும்; நாம் அவியலுடன் ரசிப்போம்!

  பதிலளிநீக்கு
 10. என்னாதூ எம்பெருமான் எங்கட நினைவிலேயே இருக்கிறாரோ? அதுவும் நாள் முளுக்க? ஆஆஆஆஆஆ அதிராவை ஆரும் பேய்க்காட்டவே முடியாதாக்கும்:))..

  போஸ்ட் தமிழில்.. வீடியோ தெலுங்கிலோ? இது தமிழிலும் இருக்குதெல்லோ

  பதிலளிநீக்கு
 11. அருமையான பதிவு.புரட்டாசி மாதம் முடிந்து அடுத்து ஐப்பசி பண்டிகைகள், ஐப்பசி முழுவது துலாஸ்னானம் செய்வார்கள் மாயவரத்தில் கடைமுழுக்கு, முடவன் முழுக்கு விஷேசம். நினைவுகளில் இனி மாயவரம் தான்.

  நரசிம்ம அவதாரம் எத்தனை முறை பார்த்தாலும் மேனி சிலிர்க்கும், கண்களில் கண்ணீர் வரும். பி.சுசீலா, பலமுரளி கிருஷ்ணாவின் பாடல் மந்தில் ஒலிக்கும்.
  நடித்தவர்கள் அனைவரும் கண்களில் வருவார்கள். அருமையான படம் அருமையான காட்சி.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. புரட்டாசி சனி எங்கள் ஊரில் திருவிழா இருக்கும். இன்றோடு முடிவு..

  அண்ணா இறைவன் நாள் முழுக்க மனதில் இருக்கும் நிலை எல்லாம் எட்டவில்லையே...என்னைத்தான் சொல்லிக்கிறேன்...

  ரங்காராவ் தான் கம்பீரம்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 13. கேசவ் ஓவியத்துடன் அருமையான நிறைவு

  பதிலளிநீக்கு
 14. குழந்தையைக் காப்பாற்ற விரைந்தோடி வந்த நரசிம்மா
  இங்கே வியாழன் சாயந்திரம் ப்ரதோஷ வேளையில்
  திருமால் தரிசனம் அமிர்தம்.
  நாளை காலை ஐப்பசி பிறக்கிறது.
  எல்லோரும் நீர் வளமும் ,நில வளமும் ,மன ,உடல் ஆரோக்கியமும் பெற்று நலமுடன் வாழ பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..