நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 18, 2019

அவனன்றி...

நேற்று புரட்டாசி மாதத்தின் நிறைவையொட்டி வெளியிட்ட பதிவில்
ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் அவதாரத் திருக்காட்சியினைக் குறிக்கும் சிறு காணொளியை பதிவு செய்திருந்தேன்...

அந்தப் பதிவு கூட இரவு மூன்று மணிக்கு (இ.நே - 5:30)
எழுந்து செய்யப்பட்டதாகும்..

Fb ல் வெளியாகியிருந்த படம் 
காரணம் ஒரு மாதமாக 12 மணி நேர வேலை...

காலை ஐந்து மணிக்கு கம்பெனிப் பேருந்தில் புறப்பட்டால்
அறைக்குத் திரும்பி வர மாலை 5:30 மணி ஆகிவிடும்...

புரட்டாசி மாதம் ஆதலால் -
Salad மற்றும் ஆயத்த உணவுகள் தவிர்த்து


பொது சமையலறையில் சாப்பிடுவதில்லை...

மாலை அறைக்குத் திரும்பி கைகால் கழுவிக்கொண்டு
அறைக்குள்ளேயே சமைத்து ஒருவேளைக்கு சாப்பிடுவது வழக்கம்...

மாலை வேளைகளில் இணையம் இயங்குவதில்லை என்று முன்பே சொல்லியிருக்கின்றேன்...

இதனால் தான் இந்த மாதம் பதிவுகள் அதிகம் வெளிவரவில்லை...

நள்ளிரவுக்குப் பின் இணையம் கிடைக்கும் என்பதால்
அதிகாலை 2:45/3:00 என்று எழுந்து பதிவுகளைக் கவனிக்கிறேன்..

இப்படியான சூழ்நிலையில்
வழக்கம் போல அதிகாலை வெளியான எங்கள் பிளாக் பதிவினை வாசித்தபின் வேலைத்தளத்திற்குச் சென்று அங்கு அப்போதிருந்த வேலைகளை முடித்து விட்டு -

காலை ஆறு மணியளவில் இணையத்துள் நுழைந்து
Fb யைத் திறந்தால் அங்கே வெளியாகியிருந்த படம் தான்
இன்றையப் பதிவில் இருப்பது...

அருமையான திருப்பாசுரத்தை Fb யில்
பதிவு செய்த அன்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

இங்கிருக்கும் சூழலில் புரட்டாசி மாதம் முழுதும்
விரதத்தை செம்மையாகக் கடைபிடித்தோமா?.. - என்று
ஐயம் கொண்டிருந்த மனம் ஆனந்தத்தில் மூழ்கியது...

அவனருள் அனைவருக்கும் ஆகட்டும்..
ஆனந்தம் எங்கெங்கும் பொங்கியே பெருகட்டும்..

ஐயன் நம்மை நினைத்துக் கொண்டு தான்
இருக்கின்றான்..
ஐயமில்லை.. ஐயமேயில்லை..


ஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேசப்பெருமாள்
தஞ்சை 
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மாமலை மேய
கோணா கணையாய குறிக்கொள் எனைநீயே..(1042)
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

24 கருத்துகள்:

 1. பனிரெண்டு மணிநேர வேலையா?   என்ன இது...  எப்படி முடிகிறது?

  குட்மார்னிங்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...

   என்ன செய்யச் சொல்கிறீர்கள்?...
   நான் வாங்கி வந்த வரம் இதல்லவா!...

   நீக்கு
 2. மனதில் உறுதி இருந்தால் கட்டுப்பாடு கைவசம்.  உங்களிடம் அது இருக்கிறது.  வெற்றிகரமாய் முடித்திருக்கிறீர்கள்.  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்..
   தங்களது அன்பினுக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி... நன்றி...

   நீக்கு
 3. விரதம் பூர்த்தி ஆனதுக்கு வாழ்த்துகள். ஆண்டாள் தங்கக்குடத்து நீரோடு போயிருப்பாள். இரண்டு நாட்களாக அதே நினைவு. நெல்லைத்தமிழர் துலா மாசத்தில் அம்பேரிக்கா போயிருக்கீங்களேனு கேட்கிறார். அதுக்காக எப்போ வர முடியுதோ அப்போத் தானே வரமுடியும்! இங்கே இருந்தே நினைத்துக் கொண்டிருக்கிறோம். வேறே என்ன செய்ய முடியும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியக்கா...

   இப்படிப்பட்ட சூழ்நிலையிலும்
   இந்த அளவுக்கு இறை நினைவில் இருப்பது பெரிய விஷயம்...

   எல்லாம் அவனருள்... மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. நம்மாழ்வார் பாசுரமும், திருமங்கை ஆழ்வார் பாசுரமும் படங்களும் அருமை. இந்த நரசிம்மர் படம் எனக்கும் வந்தது. தஞ்சை பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை இன்னமும் பார்க்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா மா. ஸ்ரீரங்கத்திலியே மூழ்கி இருக்கிறீர்கள். இதுதான் பக்தி.
   அன்பு துரை, இத்தனை சிரமங்களுக்கு இடையஏ
   புரட்டாசி விரதம் கடை பிடித்தது மஹா பெருமை.
   திருமால் பெருமை எப்பொழுது யார் வழி கிடைக்கும் என்றே சொல்ல முடியாமல் அவ்ன் அருள் வரும்.
   எங்களுக்கு உங்கள் வழியே கிடைத்திருக்கிறது.
   நாம சொல்லி வணங்குகிறேன். நன்றி.

   நீக்கு
  2. அந்த சிங்கத்தின் படத்தைப் பகிர்ந்ததாக நினைவு...

   தஞ்சையில் ப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்கள் இரண்டு உள்ளன... நகரின் மத்தியில் ஒன்று.. சௌராஷ்டிர மக்கள் வாழும் மகர்நோன்புச் சாவடியில் மற்றொன்று...

   வல்லியம்மா அவர்களது வருகையும்
   கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

   நீக்கு
 5. வேலைப்பளு இருந்தும் அயராமல் பதிவு தரும் தங்களுக்கு இறையருள் கிட்டட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. வேலை நேர மாற்றங்களால் சிரமம் இருந்தாலும் திருமாலின் அருளால் விரதத்தை சிறப்பாக் கடைபிடித்தது அறிந்து மகிழ்ச்சி.
  பாசுர பகிர்வும், நரசிம்மர் படமும் அழகு.
  பகிர்வுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. வாழ்க வளமுடன், நலமுடன். எனக்கு எப்போதுமே விரதம் இருப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். நான் விரதம் என்று ஏதாவது ஒன்று இருந்து, இருபது வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க வளமும் நலமும்...

   விரதம் இருப்பது என்ன அவ்வளவு கடினமானதா!...

   வாழ்வே விரதம் என்கின்ற போது
   இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை...

   வாழ்க வளமுடன்..

   நீக்கு
 8. என் வீட்டுக் குழந்தைகளுக்கு நரசிம்ஹ அவ்தாரக்கதை கூற் இருக்கிறேன் கொஞ்சம்நாடக பாணியில் சுட்டி /https://gmbat1649.blogspot.com/2011/05/4.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..

   கூடுதல் செய்தியும் பதிவின் சுட்டியும் வழங்கி சிறப்பித்ததற்கு நன்றி...

   நீக்கு
 9. அண்ணா உங்களின் வேலைப் பளுவுக்கும் இடையில் பதிவுகள்!!!!!

  உங்கள் விரதம் நல்லபடியாக முடிந்தது உங்கள் மன உறுதிதான் அண்ணா...வாழ்த்துகள்! சர்க்கரைப் பொங்கலும் வைத்துச் சாப்பிட்டாச்சு!! நு எபியில சொல்லிருந்தீங்களே!!

  கீதா

  பதிலளிநீக்கு
 10. அவன் நம் எல்லோரையும் குறிக்கொள்வான்.

  பதிலளிநீக்கு
 11. இத்துணை வேலை பளுவுக்கு இடையேயும் பதிவு ...

  வாழ்த்துக்கள் அண்ணா ...

  என்றும் அவன் துணை இருக்கும் ..

  பதிலளிநீக்கு
 12. நரசிம்மர் எத்தனைக்கெத்தனை ருத்ர ரூபமாக காட்சி அளிக்கிறாரோ அத்தனைக்கத்தனை கருணா மூர்த்தி. அழகான அவர் வடிவத்தை பாசுரத்தோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் புரட்டாசி சனிக்கிழமை விரதம் நல்ல விதமாக பூர்த்தி ஆனதில் சந்தோஷம். 

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இத்தனை நேரம் வேலை பளு, செல்லும் தூரங்களின் பயண அலைச்சல்கள் என இருந்தும் தங்களின் இறைபக்திதான் அருகிலிருந்து தங்களின் அயர்வை நீக்குகிறது. நரசிம்மரின் படமும், பாசுரங்களும் தங்களை புத்துணர்ச்சி பெறச் செய்திருப்பது கண்டு மகிழ்ச்சி. பதிவு அருமை.. வாழ்க தங்களின் இறையுணர்வு.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..