நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 23, 2019

உத்திர தரிசனம்..

சென்ற வாரத்தில் -
எங்களது அருஞ்சுனை காத்த ஐயனார் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் கொடியேற்றத்தைப் பற்றி எழுதியிருந்தேன்..

உத்திர நாளன்று திருக்கோயிலில் நிகழ்ந்த வைபவங்களுள்
சில திருக்காட்சிகள் இன்றைய பதிவில்...


கனவினிலும் நினைவினிலும் துணைபுரியும் சாமி..
கைதொழுத பேர்களுக்குக் கைகொடுக்கும் சாமி..
நீதி நெஞ்சில் நின்றிருக்க அருள் புரியும் சாமி..
வீதிவலம் வந்தருளி வரங்கொடுக்கும் சாமி...



வாழ்வில் நலம் எல்லாமும் தந்தருளும் சாமி..
வந்து வாசல் நின்றார்க்கு வழி அருளும் சாமி..
வாழ்க மனை என்று தினம் வாழ்த்துகின்ற சாமி..
வளர்சுனையைக் காத்தருளும் வள்ளல் எங்கசாமி..

ஸ்ரீ ஐயனார் வீதி உலா 


குற்றங்குறை நேராமல் பார்த்தருளும் சாமி
கும்பிடுவோர் குலங்காத்து விளக்கேற்றும் சாமி
குங்குமமும் சந்தனமும் தந்தருளும் சாமி
குற்றமில்லா நெஞ்சகத்தில் முகங்காட்டும் சாமி...





திருநீற்று மங்கலத்தில் திகழ்ந்திருக்கும் சாமி
தேவருக்கும் தேவனென நின்றருளும் சாமி...
அருஞ்சுனையின் கரைகாத்து அருளுகின்ற சாமி..
அடிமலர்கள் எந்நாளும் போற்றுகின்றோம் சாமி...

அருஞ்சுனை காத்த ஐயனே போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

26 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    அய்யன் தரிசனம் அதிகாலையில்...

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அழகு.

    அய்யன் ங்கள் குலதெய்வமும் கூட. தரிசனத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. காலையில் எங்கள் (இதம்பாடல்) குலதெய்வக் கோவிலில் இருந்து நல்ல காட்சிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி....

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. காலை வணக்கம் துரை அண்ணா. அழகான படங்கள்.

    பாடல்வரிகள் நீங்கள் எழுதியதுதானே! அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா ...
      தங்களுக்கு நல்வரவு...

      பாடல் வரிகள் எளியேனுடையது...
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. காணொளியும் கண்டேன்.

    பாடல் "தேடிவரும் கண்களுக்கு.....ஐயப்ப சாமி..." மெட்டில் பாடலாம் என்று தோன்றியது பாடிப் பார்த்த போது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      முதல் கண்ணியைத் தவிர மற்றவை - தேடி வரும் கண்களுக்குள் - மெட்டில் அமர்கின்றன....

      நேற்று முன் தினம் இரவில் கிடைத்த படங்களை விடியற் காலையில் பார்த்தபோது மனதில் எழுந்த வரிகள்....

      உடனே தட்டச்சு செய்தேன்...

      அப்போது அந்தப் பாடல் நினைவில் இல்லை....

      தானனன.. எனும் தத்தகாரம் அதில் வரும்...

      சனிக்கிழமை காலையில் ஐயனார் தரிசனம் என்று இன்று காலையில் வெளியிட்டேன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....

      நீக்கு
  7. பாடல்களை மிகவும் ரசித்தேன். அருமையாக இருந்தது. நீங்கள் எழுதியதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      பாடல் நான் எழுதியது தான்..

      நீக்கு
  8. இப்போதுதான் தில்லையகத்து கீதா ரங்கனுக்குக் கொடுத்த மறுமொழி படித்தேன். சில மாறுதல்கள் பாடல்களில் செய்தால் மிகச் சரியாக வந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு
  10. கனவினிலும் நனவினிலும் துணைபுரியும் சாமி (துணைக்குவரும் என்றும் போடலாம்)
    கைதொழுத பேர்களுக்குக் கைகொடுக்கும் சாமி... மற்றவரிகள் ஓகே.

    இருந்தாலும், இந்த மாதிரி சிந்து/துள்ளு கவிதையில், ஒரு வரியில் முதல் வார்த்தை, இரண்டாவது வரியில் முதல் வார்த்தை ஆகியவையோ (அல்லது 4 வரிகளிலும் முதல் வார்த்தையோ) ஒரே மாதிரி வருவது சிறப்பு.
    கனவினிலும் - கைதொழுத - ஓகே
    நீதி நெஞ்சில் - அடுத்தது 'பீதி', 'வீதி' என்பதுபோல அடுத்த வரில வரணும்.

    பாடல் மிக நன்றாக இருந்தது என்பதையும் சொல்லிக்கறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளிக் கிழமை காலையில் குளித்து விட்டு விளக்கேற்றிய பின் கணினியைத் திறந்தது படங்களைப் பார்த்ததும் மனதில் எழுந்த வரிகள் இவை... தத்தகாரம் கிடைத்ததும் வேக நடையாகவே (Fast Rhythm) கிடைத்தது...

      எந்த வரியையும் திட்டமிட்டு செதுக்க வில்லை.. கீதா அவர்கள் சொல்லிய பிறகே - தேடிவரும் கண்களுக்குள் - மெட்டுடன் பொருந்துவதைக் கண்டேன்.. அந்தப் பாடல் கொஞ்சம் Slow Track...

      கனவிலும் - கனவினிலும்

      Slow - Fast இரண்டுக்கும் இடையில் னி - அந்த எழுத்து மட்டுமே வேகத் தடை...

      இருந்தாலும் நேர் செய்து விடுகிறேன்..

      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. மிக இனிமையான கவிதை வரிகளுடன், ஐய்யன் தரிசனம் மிக மிக நன்று. நம்பிக்கையூட்டும் வரிகள் அமிர்தம். இடர் எல்லாம் நீக்கி
      அருள் மழை பெய்ய ஆள வாரும் ஐய்யா.
      நன்றி துரை மா.

      நீக்கு
    3. அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. அழகான பாடல், வரிகள் எல்லாம் மிக அருமை.பாடலுக்கு வாழ்த்துக்கள்.
    நேற்று நாங்களும் எங்கள் குலதெய்வத்தை தரிசனம் செய்து வந்தோம்.
    எங்கள் ஏரியிலும் இந்த முறை தண்ணீரைப் பார்க்க முடிந்தது இறைவனின் அருள்தான்.


    அழகான சுனை , மக்கள் குளித்து இறைவனை வணங்க அருமையான வற்றாத சுனை மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஐயனார் வீதி ஊர்வலம் மிக அழகு. மலர் அலங்காரம் மிக அழகு.
    தரிசனம் செய்து உங்கள் பாடலை பாடி மகிழ்ந்தேன்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துருரையும் மகிழ்ச்சி...

      ஆறுகளும், குளங்களும், சுனைகளும் காக்கப்படவேண்டும் என்பதே முன்னோர்களின் நோக்கம்..

      அதனால் தான் தெய்வங்களுடன் இணைத்துச் சொல்லப்பட்டது..

      தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. அருமையான ஐயன் தரிசனம், அழகிய பாடலுடன் கிடைக்கப் பெற்றது. காணொளியும் நன்றாக இருக்கிறது. மிக அழகான அலங்காரம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..