நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 19, 2017

தஞ்சை நவநீத சேவை

தஞ்சை மாநகரில் - 
வைகாசி திருவோணத்தினை அனுசரித்து 

கடந்த வியாழக்கிழமை (ஜூன்/15) அன்று  
கருட சேவைப் பெருவிழா மங்கலகரமாக நடைபெற்றது..

மாநகரிலுள்ள பெருமாள் திருக்கோயில்களிலிருந்து
கருட வாகனங்கள் புறப்பாடு ஆகின..

எம்பெருமான் கருட வாகனத்தில் எழுந்தருளி
நான்கு ராஜ வீதிகளிலும் சேவை சாதித்தருளினன்..

ஆயிரமாயிரம் அன்பர்கள் தரிசித்து இன்புற்றனர்..

கருட சேவையைத் தொடர்ந்து மறுநாள் வெள்ளியன்று
வெண்ணெய்த் தாழி எனப்படும்
நவநீத சேவை சிறப்பாக நிகழ்ந்தது...

இன்றைய பதிவில் நவநீத சேவை படங்களுடன்
கருட சேவை படங்களும் இணைந்துள்ளன..

சிறப்பான படங்களை அனுதினம் தளத்தின் வழியாக வழங்கிய -
ஸ்ரீ சௌரிராஜன் ரகுநாதன், திரு.வரதன், திரு.ஞானசேகர் -
ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

வியாழன்று நடைபெற்ற
கருட சேவை.

அன்ன வாகனத்தில் திருமங்கையாழ்வார் 
வெள்ளியன்று நடைபெற்ற
நவநீத சேவை.இப்பெருவிழா சிறப்புடன் நிகழ்வதற்கு பலவகைகளிலும் உறுதுணையாய் விளங்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றிகளும்!..

இருப்பினும் - இந்த வைபவத்தில் கலந்து கொள்ள இயலாதவாறு மிகவும் நலிவடைந்த நிலையில் சில திருக்கோயில்களும் நகரில் உள்ளன.

எதிர் வரும் ஆண்டுகளில் அந்தத் திருக்கோயில்களில் இருந்தும் பெருமான் - திருவீதி எழுந்தருள வேண்டும் என்பது நமது பிரார்த்தனை. 


எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாம் சோலைமாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா எனும் நாமம்!..
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
*** 

10 கருத்துகள்:

 1. முதன்முதலாக தஞ்சாவூரில் நவநீத சேவையினை நேரில் கண்டோம். இதுவரை நான் அறிந்திருந்தது கருட சேவையே. தங்கள் பதிவு மூலமாக மறுபடியும் கண்டோம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. நவநீத சேவை தரிசனம் அருமை.

  படங்கள் எல்லாம் அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அன்பின் ஜி
  தரிசனம் காண வைத்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. நவநீத சேவை புதியதொரு சேவை!! இதுவரை கேட்டதில்லை பார்த்ததும் இல்லை. தங்கள் பதிவின் மூலமும் படங்களின் மூலமும் அறிந்து கொண்டோம் ஐயா. நல்ல தரிசனம் மிக்க நன்றி ஐயா!!

  துளசி, கீதா

  பதிலளிநீக்கு