நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 07, 2017

விழிக்குத் துணை..

அருவமும் உருவம்ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள்ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..
-: கச்சியப்ப சிவாச்சார்யார் :-

இன்று வைகாசி விசாகம்.

எம்பெருமான் முருகன் சரவணத் திருப்பொய்கையில் 
திருஅவதாரம் செய்தருளிய திருநாள்..

கந்தனுக்கு உகந்த திருநாட்களுள் ஒன்று..
***

அருணகிரி நாதர் அருளிய கந்தர் அலங்கார
திருப்பாடல்களுடன் இன்றைய பதிவு..


தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டுஅன்று மூதண்ட கூடமுகடுமுட்டச் 
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே..(015)

மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போல்
கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே..(022)நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கேளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னேவந்து தோன்றிடினே..(38)

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும்அவன்
கால்பட் டழிந்தது இங்கென் தலைமேலயன் கையெழுத்தே..(040)ஆலுக்கு அணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணந்துழாய்மயி லேறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக்கு அணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே..(062)

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காஎனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே..(070) சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டுவெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்தோனை விளங்குவள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே..(072)


திருச்செந்தூர்த் திருப்புகழ்

தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த - தனதான

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து - வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் - வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப - மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து - குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த - மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த - அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் - களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த - பெருமாளே...

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம் சரணம்...
***

7 கருத்துகள்:

 1. வைகாசி விசாகம்.... அருமையான பாடல் ஒன்றை, பொருத்தமாய் இங்கே பகிர்ந்து கொண்டது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 2. வைகாசி விசாகம் குறித்த பாடல்கள் சிறப்பு ஜி
  வாழ்க நலம்

  பதிலளிநீக்கு
 3. வைகாசி விசாகத்திற்கு அருமையான பகிர்வு.
  கந்தனின் அலங்காரம் கந்த அலங்காரம் என்ற பாடல் நினைவுக்கு வருது.

  பதிலளிநீக்கு
 4. என் இஷ்ட தெய்வம்.

  முருகா...

  அருமை.

  பதிலளிநீக்கு
 5. வைகாசி விசாகம் குறித்து பாடல்களுடன் அருமை!!!

  எங்களுக்கு மிகவும் இஷ்ட தெய்வம் முருகன்!!!!!

  ---துளசி, கீதா

  பதிலளிநீக்கு
 6. 'நாடிவந்த கோளென் செய்யும்' - கேளென் செய்யும் என்று தவறுதலாக வந்துள்ளது.

  பதிலளிநீக்கு