நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 03, 2014

ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி

அன்பின் நல் வாழ்த்துக்கள்!..

மங்கலகரமாகிய நவராத்திரி வைபவத்தில் -
வீரத்துக்கு அதிபதியான ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும்
செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ ஆனந்த லக்ஷ்மியையும்
கல்விக்கு அதிபதியான ஸ்ரீ ஞான சரஸ்வதியையும்
- உள்ளன்புடன் வணங்கி வழிபாடுகள் செய்து மகிழ்ந்தோம்.

இன்று பத்தாம் நாள் விஜயதசமி.

அநீதியை எதிர்த்து  ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி - மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்தாள். ஒன்பதாம் நாளன்று மகிஷன் வீழ்ந்தான்.

அத்துடன் ஆணவமும் அகந்தையும் அடியோடு அழிந்தன. 

மறுநாள் தேவர்களும் முனிவர்களும் சகல உயிர்களும் அன்னை ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

 

அன்னை போர்க்கோலத்தில் இருந்து மீண்டு சாந்த ஸ்வரூபிணியாக மங்களம் விளங்க திருக்கோலம் கொண்டருளினாள்.

ஸ்ரீதுர்கா தேவியை - மோடி - என,   அப்பர் ஸ்வாமிகள் குறித்து அருள்கின்றார்.

விரதம் இருந்து மகிஷனை வென்ற மகேஸ்வரி - எம்பெருமானின் மார்பில் சாய்ந்து பேருவகை கொண்ட நாள் - விஜயதசமி!..

ஊர்க்கும் உண்டு உடையானின் சிறப்பு என்பது சிவநெறி. அதுபோல ஆயுதங்களுக்கும் உண்டு அன்னையின் சிறப்பு !..

 

எனவே,  ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும் அவள் தாங்கி நின்ற ஆயுதங்களையும் வணங்கி மகிழ்ந்தனர்.

விமலையின் வெற்றியைக் கொண்டாடியபடியால் - விஜய தசமி.

இந்நாள் - நல்லனவற்றை மேற்கொள்ளவும் புதிய வணிகம் ஆரம்பிக்கவும் உகந்த நாளாக விளங்குகின்றது. 

ஸ்ரீராமன்  - ராவணனை வெற்றி கண்ட நாள் - விஜய தசமி - என்றும்,

பஞ்சபாண்டவர்கள் தங்களது அஞ்ஞாத வாசம் முடிந்தபின், வன்னி மரத்தில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்களை மீண்டும் எடுத்துக் கொண்டு, ஸ்ரீதுர்க்கையை வழிபட்ட  நாள்  - விஜய தசமி என்றும் வழங்குவர்.


விஜய தசமி - குழந்தைகளின் கல்வி தொடக்கத்துக்கு சிறப்பான நாள் என குறிக்கப்படுகின்றது.

சிவபெருமான் - அகத்திய மகரிஷிக்கு  தமிழ் இலக்கணத்தை உபதேசித்த தலம்  - கும்பகோணத்தை அடுத்துள்ள இன்னம்பூர்.

இங்கே எம்பெருமான் ஸ்ரீ நித்யகல்யாணி அம்பிகையுடன் ஸ்ரீ எழுத்தறிவித்த நாதராக வீற்றிருக்கின்றார்.   இத்திருக்கோயிலிலும் -
திருஆரூர்- பூந்தோட்டத்தை அடுத்துள்ள கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதிதேவி திருக்கோயிலிலும் அட்சராப்பியாச வழிபாடுகள் சிறப்பாக நிகழ்கின்றன.


நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் 
நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்!.. 

கர்மங்களைக் குறைத்துக் கொள்ள வழி - அதை தைரியமாக அனுபவிப்பதே.. என்மேல் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியைக் கொடுக்கின்றேன். அது துன்பம் - எனும் எண்ணம் உங்களில் ஏற்படாமல் செய்கின்றேன்!..

- எனும் அருள்மொழிகளால் மக்களிடையே நல்லுறவை வளர்த்தவர் மகான் ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

அவதார புருஷராகிய ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா மகாசமாதி அடைந்த நாள் விஜயதசமி (15 அக்டோபர் 1918) நாளாகும்.

மேலும்,

ஜீவசமாதியிலிருந்து வெளிப்பட்டு அன்பர்களின் இடர் தீர்த்தருள்பவர்  -
ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்.

மதுரைக்கு அருகில் சமயநல்லூரில் - ஸ்ரீ மீனாட்சி அன்னையின் அருளால், சங்கு சக்கர ரேகையுடன் பிறந்தவர்.

நேர்ந்து கொண்டபடி பெற்றோரால் - மீனாட்சியம்மன் திருக்கோயிலில் கோயில் பிள்ளையாக விடப்பட்டார்.

ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் சித்தி ஆனதும் (1932) விஜய தசமி நாளில் தான்!.. 


ஆதியில் ஸ்ரீகுழந்தையானந்த ஸ்வாமிகள்,  (1627) சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் அவதரித்தார். அந்த பிறவி ஈடேறிய பின், மீண்டும் மூன்று முறை அவதரித்ததாகவும் அவற்றை எல்லாம் தன் அன்பர்களுக்குக் காட்டி அருளியதாகவும் திருக்குறிப்புகள் உள்ளன. 

ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் ஜீவசமாதி கோயில் மதுரை அரசரடியில் உள்ளது.

ஆக, உத்தம புருஷர்களை சிந்திக்கவும் வந்திக்கவும் உகந்த நாள்.

எல்லாவற்றையும் விட இன்னொரு சிறப்பு!..
ஒன்பது நாட்களும் ஒருமித்த சிந்தையுடன் - அன்புடனும் பக்தியுடனும் தன்னை வழிபட்டவர்களின் இல்லம் தேடி, பத்தாம் நாளன்று அன்னை பராசக்தி வருகின்றாள்.  வளமும் வாழ்வும் அருள்கின்றாள்!..

அம்பிகை நம்மைத் தேடி வருகின்றாள் என்பது எத்தனை மகத்தானது!.. 

அவளை மகிழ்வுடன் நாம் வரவேற்போம்!.. 
அவள் திருவடிகளைப் போற்றி வணங்குவோம்!.. 


அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே.. {1}


ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி  திதிஸுத ரோஷிணி துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {2}

அயி ஜகதம்ப மதம்ப கதம்ப வனப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {3}

அயி சதகண்ட விகண்டித ருண்ட விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட பராக்ரம சுண்ட  ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட விபாதித முண்ட படாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {4}
 
அயிரண துர்மத சத்ரு வதோதித துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி தானவ தூத க்ருதாந் தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {5}


அயி சரணாகத வைரிவ தூவர வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத மஹோ முகரீ க்ருத திங்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {6} 

அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத தூம்ர விலோசன தூம்ரசதே
ஸமரவிசோஷித சோணிதபீஜ ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ தர்ப்பித பூத பிசாச ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {7}
 

தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க கடத் பஹுரங்க ரடத் படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {8}

ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த பரஸ்துதி தத்பர விஸ்வ நுதே
ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {9} 

அயி ஸுமன: ஸுமன: ஸுமன: ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {10}


ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக மல்லி தரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லி கமல்லிக ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லிஸ முல்லஸி தாருண தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {11}
 

அவிரலகண்ட கலன்மத மேதுர மத்த மதங்கஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூதகலாநிதி ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {12}

கமல தலாமல கோமல காந்தி கலா கலிதாமல பாலலதே
ஸகல விலாஸ கலாநிலய க்ரம கேலிச லத்கல ஹம்ச குலே
அலிகுல சங்குல குவலய மண்டல மௌலிமிலத் பகுலா லிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {13}

கர முரலீரவ வீஜித கூஜித லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே
மிலித புலிண்த மனோஹர குஞ்ஜித ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண
ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {14}
 

கடிதடபீத துகூல விசித்ர மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர தம்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {15}


விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர கரைகநுதே
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {16}

பதகமலம் கருணா நிலயே வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே
அயி கமலே கமலா நிலயே கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித் யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {17}
 

கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி நதாமர வாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {18}

தவ விமலேந்து குலம் வதனேந்துமலம் ஸகலம் நனு கூலயதே
கிமு புரஹூத புரீந்துமுகீ ஸுமுகீ பிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே பவதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {19}

அயி மயி தீனதயாளு தயா க்ருபயைவ த்வயா பவித்வயமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி யதாஸி ததாஸனு மிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ குருதா துருதா பமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
.. {20}  

எல்லையற்ற கருணை கொண்டவளே!..  உமையே!.. ஜனனீ!.. ஜகத் ரட்க்ஷகி!.. அனைத்தும் அறிந்தவளே!.. சரியானது எது என்று தெரிந்து செய்பவளே!.. என் கவலைகள் நீங்கி மனம் மகிழும்படி நல்லருள் புரிவாயாக!..  

உனக்கே வெற்றி!.. உன்னையே போற்றுகின்றேன்!..
மஹிஷாசுரனை வென்றவளே!.. ஏலவார்குழலி!.. 
அழகு மிகும் குழற்கற்றைகளை உடையவளே!..  
மலைமகளே!..சரணம்!.. சரணம்!..


விஜய தசமி எனும் நன்நாள்
பொலிவு கொண்ட பெண்மை போரிட்டு வென்ற நாள்!..
பேர் கொண்ட பெண்மை பெருமை கொண்ட நாள்!..

காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத்:

ஓம் சக்தி!.. ஓம் சக்தி!..
ஓம் சக்தி!..
 * * *

14 கருத்துகள்:

 1. விஜய தசமி வாழ்த்துக்கள். இந்த நாளில் பிறந்தவரும் இறந்தவரும் நினைவு கூரத் தகுதி பெறுகின்றனர். ஆயுத பூஜையை வடக்கில் விசுவ கர்மா பூஜை என்று வேறு ஒரு நாளில் செய்கிறார்கள். கூத்தனூர் ஸரஸ்வதி கோவிலுக்கு ஒரு முறை சென்றதுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 2. விஜயதசமி வாழ்த்துக்கள்! ஐயா! அயிகிரி நந்தினி நந்தித மேதினி..பார்த்ததும் மிகவும் ஆனந்தமாக இருந்தது ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..
   விஜயதசமி நல்வாழ்த்துக்கள்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 3. விஜய தசமி நல் வாழ்த்துக்கள் ஐயா!

  அறிவுக்கு விருந்தாக அற்புதமான விடயங்கள்!
  அழகிய படங்கள்!

  மகிஷாசுர மர்த்தனி பதிகம் அருமை!
  இறைவியின் இன்னருள் எல்லோருக்கும் கிட்டட்டும்!

  நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   விஜயதசமி நல்வாழ்த்துக்கள்..
   தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அழகிய படங்களும் அருமையான பாடலுமாய் பதிவு சிறப்பாய்.....
  விஜயதசமி வாழ்த்துக்கள் ஐயா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   விஜயதசமி நல்வாழ்த்துக்கள்..
   தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. விஜயதசமி வாழ்த்துக்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்..
   வாழ்க நலம்..

   நீக்கு
 6. மிக அருமையான அபூர்வ படங்கள்.
  ஸ்ரீ குழந்தையானந்த சாமி மடத்திற்கு சென்று இருக்கிறேன் மதுரையில்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 7. ஐயா ..என்னுடைய பொண்ணு பேரு மஹிஷா..இந்த பேரு நல்ல பேரு தான ஐயா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்...
   தங்களுக்கு நல்வரவு..

   மகிஷன் என்பவன் எருமைத் தலையுடன் காட்டப்படுபவன்..
   மகிஷ முகம் உடைய அரக்கனை வீழ்த்தியவள் - மகிஷாசுரமர்த்தனி..

   மஹிஷா என்றால் மஹிஷாசுரமர்த்தனியாகிய ஸ்ரீ துர்காவைக் குறிக்காது...

   எனவே,
   தாங்கள் குடும்பத்தின் பெரியோர்களைக் கலந்து ஆலோசிக்கவும்..

   என்றென்றும் வாழ்க நலம்..
   தளத்திற்கு வருகையளித்தமைக்கு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..