நேற்று தஞ்சை அரசூர் முருகன் கோயிலில் பாற்குட உற்சவம்.. ஒரு சில படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.. அவை இங்கே..
மரீஷி முனிவருக்கு மகனாகப் பிறந்தவர் காச்யபர்..
இவர் இறைவன் ஆணைப்படி தட்சப் பிரஜாபதியின் மகள்களான கத்ரு, விநதை என்பவர்களை மணந்து கொண்டார்..
கத்ருவுக்கு சக்தி வாய்ந்த நாகங்கள் ஆயிரம் தோன்றின..
அவற்றில் அநந்தனும், சங்கபாலனும் வெண்மை நிறம்.
வாசுகியும் பத்மனும் சிவப்பு நிறம். மஹாபத்மனும் தட்சகனும் மஞ்சள் நிறம்.கார்க்கோடகனும் குளிகனும் கறுப்பு நிறம்..
விநதைக்கு இரண்டு முட்டைகள் தோன்றின.. அவற்றில் ஒன்றை விநதை அவசரப்பட்டு உடைத்து விட்டதால் இடுப்புக்குக் கீழ் வளர்ச்சியற்ற அருணன் தோன்றினான்..
இவனே சூரியனின் தேர்ச்சாரதி.. இவனது வழித்தோன்றல்களே சம்பாதி, ஜடாயு..
முட்டையைத் தவறுதலாக உடைத்த விநதா அருணனின் சாபத்தினால் கத்ருவுக்கு அடிமையானாள்..
மீதமாக இருந்த முட்டையிலிருந்து
ஆவணி மாத வளர்பிறை (சுக்ல பட்சம்) பஞ்சமியன்று சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினான் கருடன்.
கருடன் தனது தாயின் விடுதலைக்காக தேவலோகத்தில் அமிர்தம் எடுக்கச் சென்றபோது அங்கே சண்டை மூண்டது..
தேவர்களுக்கு ஆதரவாக வந்த திருமாலையும் எதிர்த்தான். சண்டையிட்டான். பகவானை உணர்ந்து கொண்ட கருடன் அவருக்கே அன்பன் ஆனான்.. பெரிய திருவடி எனும் பட்டத்தையும் பெற்றான்..
தாயையும் அடிமைத் தளையில் இருந்து மீட்டெடுத்தான்.. பெரியன்னையிடம் இருந்து தோன்றிய நாக குமாரர்களில் தலை சிறந்து விளங்கிய எட்டு பேரையும் தன் வசப்படுத்தி தனது மேனியில் அணிந்து கொண்டான்..
,
1.சிரசில் சங்கபாலன்
2.வலக்காதில் பத்மன்
3.இடக்காதில் மகாபத்மன்
4.கழுத்தில் கார்க்கோடகன்
5.பூணூலாக வாசுகி
6.இடுப்பில் தட்சகன்
7.வலக்கையில் குளிகன்
8.இடக்கையில் சேஷன்
திருமலையின் ஏழு மலைகளில் கருடாத்ரி என, கருடன் பெயரில் ஒரு மலையும் உள்ளது.
ஆதி தஞ்சபுரியின் (தஞ்சை நகர்) அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவம்..
இதனால் தஞ்சை நகரில் விஷ தீண்டுதல் கிடையாது..
 |
| தஞ்சை கருட சேவை |
தஞ்சையில் இருபத்து நான்கு கருட சேவை
காஞ்சிபுரம் அருகே கூழமந்தலில் பதினைந்து கருட சேவை
கும்பகோணத்தில் அட்சய திருதியை அன்று பன்னிரண்டு கருட சேவை
சீர்காழிக்கு அருகில் திருநாங்கூரில் பதினொரு கருட சேவை
திருநெல்வேலி ஆழ்வார் திருநகரியில் ஒன்பது கருட சேவை
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐந்து கருட சேவை ஆகியன
கருடனின் பெருமைக்குச் சான்றாகும்.
திருநறையூர் எனும்
நாச்சியார்கோயிலில் கல் கருடன் - தானே மூலவராகவும், உற்சவராகவும், வாகனமாகவும் திகழ்கின்றார்..