நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 13
ஞாயிற்றுக்கிழமை
நிகழும் ஆவணி மாதத்தின் இரண்டாம் செவ்வாய் ( 25/ ஆகஸ்ட் ) அன்று -
திருச்செந்தூரில் இருந்து நாற்பது கிமீ தொலைவில் அமைந்துள்ள உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில் எங்கள் குல தெய்வத்தின் வருடாந்திரக் கொடை விழா நடைபெற உள்ளது...
இறையருள் துணை கொண்டு இன்று காலை நாங்கள் உவரிக்குச் செல்கின்றோம்...
இவ்வேளையில் பதிவுலகத்தில் -
அன்பின் ஜீவி அண்ணா, ஸ்ரீராம், நெல்லைத் தமிழன், கௌதம் ஜி, வெங்கட் நாகராஜ், சந்திரசேகர், ஏகாந்தன், வல்லியம்மா, கீதாக்கா, கீதாரங்கன், கோமதி அரசு. பானுமதி வெங்கடேஸ்வரன், கமலா ஹரிஹரன், மாதேவி -
ஆகிய அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்...
திருவிழா நேரம்... மின்சக்தி கொள்கலன் எதையும் உடன் எடுத்துச் செல்லவில்லை...
ஒளிப்படங்கள் எடுப்பதற்கு கைத்தலப்பேசி எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ பார்ப்போம்...
நலம் வாழ்க
***

நல்லபடியாக சென்று வாருங்கள். நல்லபடி தரிசனம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
எங்களையும் பிரார்த்தனையில் இணைந்திருப்பது நெகிழ்ச்சியைத் தருகிறது. இன்றைய சூழ்நிலையில் எங்களுக்கு அது மிகவும் தேவைதான். முக்கியமாக முடிவெடுக்கும் மனத்திறனை கடவுள் வழங்க வேண்டும். ஒரு நல்ல வழியை அவரே காட்ட வேண்டும்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
பத்திரமாகச் சென்று வருக. குல தெய்வக் கோயில் தரிசனம் நன்று. தெய்வ அருளே பெரிது
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி நெல்லை
அனைவருக்கும் பிரார்த்தனை செய்து வருவது நல்ல செயல்.
பதிலளிநீக்குஉங்களின் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்களும் உவரி சுயம்புலிங்க ஸ்வாமியை வேண்டிக் கொள்கிறோம்.
நம் அனைவருக்கும் வேண்டிக் கொள்கிறேன்.
ஸ்ரீராமுக்கும் இறைவன் நல்ல வழி காட்டுவார்.
மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. உங்கள் குலதெய்வ வழிபாடு பயணம் நல்லபடியாக அமைந்திருக்குமென நினைக்கிறேன். இறைவன் அனைவரையும் நலமாக வைத்திருக்கும்படி நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏 உங்கள் பிரார்த்தனைகளும் நல்லபடியாக நிறைவேறும். எங்களுக்காகவும் நீங்கள் பிரார்த்தனைகள் செய்து கொள்வதற்கும் மிக்க மகிழ்வுடனான நன்றி. 🙏 நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
உவரி கொடைவிழா சிறப்பாக நிறைவேறும். எங்கள் நலனுக்காகவும் பிரார்த்திக்கும் உங்களுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குசுயம்புலிங்க சுவாமி சகல நலனையும் உங்களுக்கு அருள வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சிவாய நமக.
மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா