நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 10, 2026

வெண்ணெய்த் தாழி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


கடந்த சனிக்கிழமை
தஞ்சை மாமணிக் கோயில் திவ்யதேசத்தை முதற்கொண்டு
 மாநகரின் ராஜ வீதிகளில் 27 கருட சேவை நடைபெற்றது.. 

மறுநாள் பதினேழு வெண்ணெய்த் தாழி வைபவமும் நடைபெற்றது..


திங்களன்று பதிவில் சொல்லியிருந்தேன்.

வயிற்றுக் கோளாறு காரணமாக எனக்கு நேரில் தரிசிக்கின்ற வாய்ப்பு வாய்க்கவில்லை..

ஊடகங்கள் வழியாகத் தான் நான் தரிசனம் செய்து கொண்டேன்...

அன்பின்  நெல்லை அவர்களது கருத்து - 

எல்லா பெருமாளும் சிறிய காணொளில வரலை. ஆனாலும் நல்ல காணொளி...  - என்று..

உண்மை தான்.. நேரில் சென்றிருந்தால் அதிக பட்சம் காட்சிப் பதிவுகளாவது கிடைத்திருக்கும்... 

எல்லாம் அவன் செயல்...
ஆயுள் ஆரோக்கியத்துடன்
 அடுத்த வருடம் பார்க்கலாம்..

முக்கியமான இடத்தில் நின்று கொண்டால், எல்லா கருடவாகனங்களும் நம்மைக் கடந்து செல்லுமோ?.. ஒவ்வொன்றையும் தரிசிக்க (அதாவது சடாரி வாங்கிக் கொள்ள) நேரம் கிடைக்குமா?..

என்பதுவும் நெல்லை அவர்களது கேள்வி...

முக்கியமான இடத்தில் நின்று கொண்டால், எல்லா கருட வாகனங்களும் நம்மைக் கடந்து செல்லும் . தரிசிக்கலாம்..

ஒவ்வொன்றையும் தரிசித்து  சடாரி வாங்கிக் கொள்ளலாம் நேரம் கிடைக்கும்.. சற்றே நெரிசல் இருக்கும்...

சாலையில் போக்குவரத்து ஒழுங்கு தான் பிரச்னை..

எல்லாம் வல்ல  கருட வாகனன் நல்வழி காட்டுவான்..

ஓம் ஹரி ஓம்
***

5 கருத்துகள்:

  1. தகவல்கள் சிறப்பு. எனக்கும் கருட சேவை காண ஆவல் உண்டு. அவன் அருள் இருந்தால் நிச்சயம் காண்பேன்..

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கருட வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பெருமாளை அருமையாக தரிசித்துக் கொண்டேன். பதினேழு வெண்ணெய் தாழி பெருமாளையும் காணொளியில் கண்டுகந்து, தரிசனம் பெற்றுக் கொண்டேன். அழகான காட்சி. நானும் மானசீகமாக இறைவனின் சடாரியை பெற்றுக் கொண்டேன்.

    அடுத்த வருடம் தாங்கள் நல்லபடியாக இந்த கருடசேவைக்கு நேரில் சென்று, பல தெய்வீக காட்சிகளை புகைப்படத்துடன் எங்களுக்குத் தருவீர்கள். நாங்களும் ஆனந்தமாக கண்டு களிப்போம் . அனைத்தும் நல்லபடியாக நடந்தருள இறைவனை பிரார்த்தித்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. க்ளோசப்பில் பெருமானை தரிசிக்க முடிந்தது. எவ்வளவு பேர்களுக்குத்தான் அந்த முறையற்ற கூட்டத்தில் சடாரி வைப்பார்கள். சிரமம்தான்.

    பதிலளிநீக்கு
  4. வெண்ணைத் தாழி வைபவம் கண்டு வணங்கினோம்.

    அற்புதமான காணொளி தரிசனம்.

    முகுந்தா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..