நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி முதல் நாள்
வெள்ளிக்கிழமை
பொது
தனத்தத் தானத் ... தனதான
கருப்பற் றூறிப் ... பிறவாதே
கனக்கப் பாடுற் ... றுழலாதே
திருப்பொற் பாதத் ... தநுபூதி
சிறக்கப் பாலித் ... தருள்வாயே..
பரப்பற் றாருக் ... குரியோனே
பரத்தப் பாலுக் ... கணியோனே
திருக்கைச் சேவற் ... கொடியோனே
செகத்திற் சோதிப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
மீண்டும் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் நான் மீண்டும் கருவில் ஊறி - பிறக்காமலும்
மிகவும் கஷ்டங்களை அடைந்து அலைந்து திரியாமலும்
உன் அழகிய திருவடிகளாகிய முக்திப் பேற்றில்
நான் சிறக்கும்படி எனக்கு அருள்வாயாக..
ஆசைப் பெருக்கு
இல்லாதவர்களுக்கு உரிமையானவனே
மேலானதாய் யாவற்றையும்
கடந்து நிற்கின்ற பொருளுக்கு அருகில் உள்ளவனே
திருக்கரத்தில் சேவற்கொடியை
ஏந்தியவனே
இவ்வுலகில் ஜோதி வடிவமாக
விளங்குகின்ற பெருமாளே..
**
நன்றி
முருகன் அடியார்கள்
முருகா முருகா
முருகா முருகா
***


மீண்டும் பிறவா வரம் கேட்கவும் ஒரு ஞானம் வேண்டும். சேற்றில் உழலும் பன்றி போல மனிதனுக்கு தன் வாழ்க்கை பிடித்துப் போகிறது. முருகா நீ வரவேண்டும். எங்களுக்கு உன் அருள்மழையைத் தரவேண்டும்.
பதிலளிநீக்குமுருகா நீ வரவேண்டும். .
நீக்குமகிழ்ச்சி...
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குபதிவு அருமை. திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் நன்றாக உள்ளது.
/மீண்டும் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் நான் மீண்டும் கருவில் ஊறி - பிறக்காமலும்
மிகவும் கஷ்டங்களை அடைந்து அலைந்து திரியாமலும்
உன் அழகிய திருவடிகளாகிய முக்திப் பேற்றில்
நான் சிறக்கும்படி எனக்கு அருள்வாயாக../
முருகா..! வேறென்ன வேண்டும் இப்பிறவியில்.. "பிறவா வரமருளி என்னை பிரம்மமயமாக்கிடுவாய்" "பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு." முருகா... முருகா.. என மனமுருகி வேண்டுவோம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் விரிவான கருத்துரைக்கு மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா..
"திருப்பொற் பாதத் ... தநுபூதி
பதிலளிநீக்குசிறக்கப் பாலித் ... தருள்வாயே.."
அதற்கும் அவனருள் வேண்டும் வேண்டுவோம் அவன் பாதம் பணிந்து.
ஓம் முருகா சரணம்.
அவனருள் வேண்டும் வேண்டுவோம்...
நீக்குமகிழ்ச்சி...
நன்றியம்மா..
திருப்புகழ் பாடலும் விளக்கமும அருமை. பாடலை பாடி முருகனை வேண்டிக் கொண்டேன். என்றும் முருகனை மறவாமல் இருக்க அவன் வரம் தர வேண்டும்.
பதிலளிநீக்குமுருகனை மறவாமல் இருக்க அவன் வரம் தர வேண்டும்...
நீக்குமகிழ்ச்சி...
நன்றியம்மா..