நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
திங்கட்கிழமை
இன்று
கந்தசஷ்டி
மதிகெட் டறவாடி மயங்கி அறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுகாதிப அத்
திதி புத்திரர் வீறடு சேவகனே.. 50
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. 51
கந்தரனுபூதி
நன்றி கௌமாரம்
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டிதஸாமீ நமோநம ...
வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ... அருள்தாராய்..
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...
வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...
பெருமாளே..
வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும் வெகுளுறு பசாச கணமும்
வெங்கழு குடன்கொடி பருந்து செம் புவனத்தில் வெம்பசி ஒழிக்க வந்தே
ஆதார கமடமும் கணபண வியாளமும் அடக்கிய தடக்கிரி எலாம்
அலைய நடமிடு நெடுந் தானவர் நிணத் தசை அருந்திப் புரந்த வைவேல்..
தாதார் மலர்ச் சுனை பழநி மலை சோலை மலை தனிப் பரங்குன்றே ரகம்
தணிகை செந்தூர் இடைக்
கழி ஆவினன்குடி தடங்கடல் இலங்கை அதனில்
போதார் பொழிற் கதிர் காமத் தலத்தினைப் புகழும் அவரவர் நாவினிற்
புந்தியில மர்ந்தவன் கந்தன் முருகன் குகன் புங்கவன் செங்கை வேலே...
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
*
ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்..
-: கந்தபுராணம் :-
அனைவருக்கும் நன்றி
ஓம் சிவ சுப்ரமண்யாய
**




வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. கந்தசஷ்டி திருநாள் பதிவு அழகான படங்களுடன், இனிமையான பாடல்களுடன் நன்றாக உள்ளது. தெரிந்த பாடல்களை பாடி மகிழ்ந்தேன். ஸ்ரீ முருகப் பெருமானை வள்ளி, தெய்வானையுடன் தம்பதி சமேதராக தரிசித்துக் கொண்டேன். அனைவருக்கும் உடல்நல பிணிகளையகற்றி, ஆரோக்கியமாக வைத்திருந்து மற்றும் அனேக நலன்களை தந்தருள வேண்டுமாய் பிரார்த்தித்து கொண்டேன்.
முருகா சரணம். 🙏.
முத்துக்குமரா சரணம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குவேண்டுதலும் மகிழ்ச்சி
நன்றியம்மா
முருகா சரணம்
வாழ்க.. வாழ்க... வாழ்க முருகன் திருநாமம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
முருகா சரணம்