நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 12, 2025

பேராயிரம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை



இன்று
புள்ளிருக்கு வேளூர்
(வைத்தீஸ்வரன் கோயில்)
 திருப்பதிகப் பாடல்
**

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-


ஆயிரம் திருப் பெயர்களைப் புகழ்ந்து தேவர்கள் துதிக்கின்ற பெருமானாகவும்

தன்னை விட்டு நீங்காத அடியவர்களுக்கு  வீடுபேறு எனும் செல்வத்தை வழங்குபவனாகவும்

மந்திரங்களும் அவற்றின்  முறைகளும் மருந்துகளும்  தானேயாகி - தீராத நோய்களைத் தீர்த்தருள வல்ல வைத்திய நாதனாகவும் 

திரிபுரங்கள் தீப்பற்றி எரிந்து சாம்பலாகுமாறு வலிமையான வில்லைக் கையில் கொண்டு போரிட முனைபவனாகவும் விளங்குகின்ற -

புள்ளிருக்கு வேளூர் பெருமானைப் போற்றி வணங்காமல்  நாள்களைப் போக்கி விட்டேனே!..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

2 கருத்துகள்:

  1. புள்ளிருக்கு வேளூர் பெருமானை நானும் வணங்கிப் போற்றுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..