நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
செவ்வாய்க்கிழமை
கோகுலாஷ்டமி பதிவில் அன்பின் நெல்லை அவர்கள் வழங்கியிருந்த கருத்துகள்..
1
இரண்டு படங்களும் மிக அழகு.
உங்களுக்குத் தெரியுமா? கோகுலத்தில், ஸ்ரீகிருஷ்ணன் வளர்ந்ததாக நம்பப்படும் நந்த பவனில் முக்கிய சன்னிதி சிவன் சன்னிதி. அங்குதான் பிரசாதங்களை வைத்து கண்டருளப் பண்ணுகிறார்கள்..
2
எதற்காக முந்தைய கருத்து என்றால், கிருஷ்ணனை மடியில் வைத்திருக்கும் யசோதை நெற்றியில் முழுமையாக விபூதி இருப்பதைப் பார்த்ததும் தோன்றியது..
அன்றைய பதிவில் இருந்த படங்களுள் ஒன்று தான் இங்கே..
திரு.நெல்லை அவர்களது கருத்திற்குப் பிறகே பதிவிட்டிருந்த படத்தைக் கவனித்தேன்... பரவசமானேன்...
ஸ்ரீ நாராயண மூர்த்தி சக்ராயுதத்தைப் பெறுவதற்காக (திருநீறு பூசி) சிவ வழிபாடு செய்ததாக அப்பர் ஸ்வாமிகள் குறிப்பிடுகின்றார்...
ஸ்ரீ நாராயண மூர்த்தி சிவ வழிபாடு செய்த தலங்கள் திருவீழிமிழலை, திருமாற்பேறு...
இத்தலங்களில் தலபுராணங்களும் ஒன்றே..
நாராயணர் திருநீறு பூசி சிவவழிபாடு செய்த புராணம் அறிந்து தான் யசோதையும் நெற்றியில் திருநீறு பூசிய வண்ணம் காட்சி தருகின்றனள் போலும்..
திருமலையில் பெருமான் சிவராத்திரி
மூன்றாம் காலத்தின் போது நெற்றியில் விபூதிப் பட்டையுடன் உள் வீதி வலம் வருகின்றார் என்று கேள்விப்பட்டுள்ளேன்...
நீற்றினை நிறையப் பூசி
நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று
குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி
அவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி
மிழலையுள் விகிர்தனாரே. 4/64/8
-: திருநாவுக்கரசர் :-
திருநீற்றை நிறையப் பூசி நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்த காலத்தில் ஒரு நாள் ஒரு மலர் குறையவே அப்பூவினுக்கு இணையாக தனது விழிகளில் ஒன்றினை தாமரை மலராகக் கொண்டு அர்ச்சித்த பக்தி உடைய திருமாலுக்குச் சக்கரத்தை வழங்கி - திருமால் விண்ணிலிருந்து கொணர்ந்து திருவீழிமிழலையில்
நிறுவிய விமானத்தின் கீழ் வீற்றிருந்து விகிர்தனார் அனைவருக்கும் அருள் செய்கிறார் ..
நன்றி
பன்னிரு திருமுறை
ஈசனிடம் திருமால் சக்ராயுதம் பெற்றததை ஞானசம்பந்தப் பெருமானும் குறித்திருக்கின்றார்..
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
**
விபூதி விவரங்கள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை.படமும் அதன் விளக்கங்களும் நன்றாக உள்ளது. சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களின் கருத்தும், , அதற்குரிய தங்களின் விளக்கமும் நன்று.
/ஸ்ரீ நாராயண மூர்த்தி சிவ வழிபாடு செய்த தலங்கள் திருவீழிமிழலை, திருமாற்பேறு...
இத்தலங்களில் தலபுராணங்களும் ஒன்றே../
பதிவின் மூலம் பல தகவல்கள் அறிந்து கொண்டேன். இறைவனுக்குள் என்றும் பேதமில்லை. இறைவனை வழிபடும் மனிதர்களுக்குள் எழும் மனபேதங்கள்தாம் குறைகளாகிப் போகின்றன.
"ஹரியும், சிவனும் ஒன்று.... என்ற சொல் வழக்கு என்றும் உண்மைதானே..! பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.