நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 30, 2025

ஸ்ரீமுஷ்ணம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
சனிக்கிழமை

கங்கை கொண்ட சோழபுரத்தை அடுத்து - ஸ்ரீ முஷ்ணம் தரிசனம் (உத்தேசமாக 25 கிமீ)..

ஸ்ரீ பூவராக ஸ்வாமி திருக்கோயிலுக்குப்  பயணம்..

மேற்கு நோக்கிய ஸ்வயம்வியக்த க்ஷேத்திரம்.. 

ஸ்ரீ மகாவிஷ்ணு, இத்தலத்தில் வராக மூர்த்தியாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் இரு திருக்கரங்களுடன்  திகழ்கின்றார்...
கைகளை இடுப்பில்
வைத்த திருக்கோலம்..

 நன்றி இணையம்

திரு மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருமேனி.. தெற்கு நோக்கிய திருமுக மண்டலம்..

தாயார் அம்புஜவல்லி.. கிழக்கு நோக்கியவாறு தனிச் சந்நிதி..

கருட மண்டபம் அற்புத கலா நிலையமாகப் பொலிகின்றது.. 

சிற்பங்களின் அழகினைக் காண்பதற்கு போதுமான வெளிச்சம் அமையாதது நமது துரதிர்ஷ்டம்..

இயன்ற வரை படம் பிடித்துள்ளேன்.. 




திருப்பதியில் இருக்கின்ற மாதிரி - சாலை நடுத்திட்டில் கருடன் சிற்பம்..

















திருக்கோயிலினுள் அமைந்திருக்கும் ஸ்ரீ சப்த கன்னியர் சந்நிதி..









திருக்கோயிலுக்கு எதிரில் கிழக்கு முகமாக ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் திருக்கோயில்..

சந்நிதி தரிசனம் மட்டுமே.. ராமர் கோயிலை வலம் வருவதற்கு இயலாதவாறு முட்புதர்கள்.. 

அவனருளாலே அவன் தாள் வணங்கிய பிறகு ஜெயங்கொண்டம் கீழப் பழுவூர் வழியே நல்லபடியாக தஞ்சை வந்து சேர்ந்தோம்..


ஓம் ஹரி ஓம்
**

8 கருத்துகள்:

  1. படங்களின் வழியே கோவிலின் அழகை ரசித்தோம்.  சிற்பங்களையும் ரசித்தேன்.  நடுவில் உடைந்திருக்கிறதா என்ன...  

    ராமர் கோவிலை கவனிப்பர் யாரும் இல்லையா..  நான் என் மச்சினர்களிடம் சொல்லிப் பார்க்கிறேன்.  அதேபோல் முகநூலில் ஸ்ரீவத்சன் என்று ஒருவர் இருக்கிறார்.  அவரும் தேடித்தேடி உழவாரப் பணிகள் செய்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்நியர் படையெடுப்பால் சிலைகள் சேதமடைந்துள்ளன

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பதிவு வழி நாங்களும் ஆலயம் கண்டோம். சிற்பங்கள் மனதைக் கவர்ந்து இழுக்கின்றன. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி

      நன்றி வெங்கட்..

      நீக்கு
  3. ஸ்ரீ பூவராக ஸ்வாமி திருக்கோவில் தரிசித்தோம்.

    கோபுரம் பெரிதாக உள்ளது .

    கற்சிப்பங்கள் அனைத்தும் கவர்கின்றன.

    குறிப்பாகஅ ந்தப் பெண்ணின் முடிப் பின்னலையும் மிக அழகாக செதுக்கி உள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கலை மண்டபம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி

      நன்றியம்மா

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஸ்ரீ முஷ்ணம் வராக மூர்த்தி கோவிலைப் பற்றிய பதிவும், படங்களும் மிக அருமையாக உள்ளது. கோவிலிலுள்ள சிற்பங்கள் அனைத்தையும் பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன்.கோவில் வாசலில் உள்ள கருடாழ்வார், பின்னல் அலங்கார சிற்பம் ஏனேய சிற்பங்கள் அனைத்தும் அழகாக உள்ளன.

    பட்டாபிராமர் கோவிலை சீர் செய்தால், அனைவரும் மகிழ்வுடன் தரிசனம் செய்வர். விரைவில் அக்காலம் கூடி வர இறைவன் அருள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி

    நன்றியம்மா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..