நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 08, 2024

தமிழமுதம் 23

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 23
திங்கட்கிழமை

 குறளமுதம்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.. 108
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்  சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி  மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா  உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்..
**

மழைக் காலத்தில், குகைக்குள் உறங்கிக் கிடக்கின்ற ஆண் சிங்கம், தூக்கம் தெளிந்து - 
தீப்பொறி பறக்கும்படி கண்களை விழித்து பிடரி மயிர் நாற்பக்கமும் படர உடம்பை சிலிர்த்தபடி குகையிலிருந்து  வருவதைப் போல நீயும்  இங்கு எழுந்தருளி  அரியணையில் அமர்ந்து, 

நாங்கள் வந்த காரியங்களை கேட்டறிந்து அருள் புரிவாயாக!..
**

சிவதரிசனம்
தேவாரம்
திருப்பாட்டு


ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பாரவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 7/61/1
-: சுந்தரர் :-
**

தரிசனத்
திருத்தாண்டகம்
(திருமறைக்காடு - வேதாரண்யம்)


கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்
மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பைகிளரும் நாகம் அசைத்தான் கண்டாய்
பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய்
வைகிளரும் கூர்வாட் படையான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 2
-: திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்
 அருட்பத்து


நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட்டு அலறி
உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே..2
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

3 கருத்துகள்:

 1. நன்றல்லதை அன்றே அல்ல, என்றுமே மறக்க முடியாதது மனித பலவீனம்!

  தமிழ் அமுதோடு படங்களையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. பாடல்களை பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது திருப்பாவை, திருவாசகம் பாடல்களை பாடி ஸ்ரீ மன்நாராயணரையும், எம்பெருமான் சிவனாரையும், அன்னை உமா மகேஸ்வரியையும் தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..