நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 23, 2021

அன்பினில்..

 நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***

எங்கள் Blog ன்
நேற்றைய
பதிவில் இடம்
பெற்றிருந்த படங்களுள்
குழந்தை ஒன்று
பசுங்கன்றினைக்
கும்பிடுகின்ற படம்
மனதைக் கவர்ந்தது..

வளரும்
பிள்ளைகளின் மனதில்
நம்முடன் வாழும்
சிற்றுயிர்களைப் பற்றி
இப்படியான அன்பினை
விதைத்து விட்டால்
வையகம் சொர்க்கமாகி
விடும்..

அன்பும் கனிவும்
ததும்புகின்ற
இந்தப் படத்தைக் கண்டதும்
என் மனதில் எழுந்தவை
இன்றைய
 பதிவில்...

அழகாக படம் பிடித்தவர்க்கும்
படத்தினைப் பதிவினில்
வைத்தவர்க்கும்
நெஞ்சார்ந்த நன்றி..
***

கன்றோடு கன்றென்று
கைகூப்பி நின்று
கனிகின்ற நல்மனம்
வாழ்கவே நின்று..

சேயோடு சேயாகும்
செந்தமிழ்க் கன்று..
செம்மையாய் வாழ்கவே
சீர் பல கொண்டு..


தாய்க்கும் ஒரு தாயாகும்
தாய்மையின் தெய்வம்..
தூய்மையின் தொல்புகழ்
தாய்த்தமிழர் செல்வம்..

நாடுடைய நலந்தனை
மாடென்பது தமிழ்
பீடுடைய கல்விதனை
மாடென்பது குறள்..


குங்குமம் தனைக் கூறும்
குடித் தமிழர் பண்பு..
மங்கலம் மனையறம்
மடிப் பசுவின் அன்பு..


கன்றினைக் கட்டிடும்
நடுதறியும் லிங்கம்
சைவத்தில் ஓங்கிடும்
சத்தியம் தாங்கிடும்..


கன்றதன் கால்வழி
கண்ணனின் குழல்வழி
கண்ணனின் சொல்வழி
நன்றெமக்கு அவ்வழி..

நன்றி எனச் சொல்வதற்கு
வகை ஒன்றும் இல்லை..
நயந்து உடன் வாழ்வதுவே
நலம் காட்டும் எல்லை..
***
வாழ்க வையகம்
வாழ்க மகிழ்வுடன்..
ஃஃஃ

9 கருத்துகள்:

  1. குழந்தைகளுக்கு நற்பண்புகளை சொல்லி வளர்க்கும் காலம் மலையேறி விட்டது.  பெற்றோர்களுக்கும் நேரம், மனம் இல்லை.  குழந்தைகளோ அலைபேசியிலும், தொலைக்காட்சியிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.  நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  2. படக்கவிதை மிக அருமை.
    செம்மையாய் வாழ்கவே சீர் பல கொண்டு.
    வாழ்க பல்லாண்டு.
    கவிதைக்கு தேர்வு செய்த படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  3. படங்களும் உங்கள் கவி வரிகளும் அருமை.

    குழ்னதைகளுக்கு நல்லொழுக்கக் கதைகள் என்பது இப்போதெல்லாம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

    அண்ணா சிற்றுயிர் என்று அவற்றின் அறிவைக் கொண்டு ஐந்தறிவு, மூன்றறிவு என்று சொன்னாலும் அவை நமக்குக் கற்றுத் தரும் பாடங்களை வைத்துப் பார்க்கும் போது அவை நமக்குக் குருவாக ஆறறிவை விட மேலானதாக பேரறிவாக இருக்கின்றன அல்லவா!!!

    படங்களையும் கவி வரிகளையும் ரொம்ப ரசித்தேன் துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. குழந்தைகளுக்கு இது போன்ற நல்ல விஷயங்களை இப்போதும் நாம் சொல்லித் தருகிறோம். ஆனால், அவைகளை ஆழ்ந்து சொல்லித் தருவதற்கு சிலவிடங்களில் பெரியவர்கள் இருப்பதில்லை. குழந்தைகளின் பெற்றோருக்கும் நேரங்கள் சரியாய் அமைவதில்லை. பணம், வாழ்க்கை வசதிகள் என அவர்களுக்கும் கடமைகளை கைகளை கட்டி இழுத்துச் செல்கிறது.

    நேற்று உங்கள் கவிதையை எ.பியில் படித்தேன். ஆழமான அந்த தமிழின் அன்பில் திளைத்து கருத்தும் சொன்னேன். (இன்று அதே தங்கள் பதிவில் தலைப்பானது கண்டு ஆச்சரியமும் அடைகிறேன்.) அது இன்று உங்கள் அழகு தமிழில் பன்மடங்காகப் பெருகி. உங்கள் தளத்தை அலங்கரிப்பதை கண்டு பெரு மகிழ்ச்சியடைந்தேன். கவிதையின் வரிகளும், அதற்கேற்ற படங்களும் அருமை.
    கண்ணனின் காலடியுடன், ஆவின் பல காலடிகளும் பக்தியுடன் இணைந்திருக்கும் படம் கண்டு பரவசமானேன். கவிதையை நானும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. கவிதை இங்கு விரிவாக்கம் செய்யப்பட்டு வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு இந்நாட்களில் நர்பண்புகளையோ, நம் கலாசாரங்களையோ, புராண,இதிகாச நாயகர்களையோ அறிமுகம் செய்வதற்கு யாரும் இல்லை. தாத்தா/பாட்டிகள் தனியாக இருக்கிறார்கள். குழந்தைகள் எங்கோ இருக்கிறார்கள். என்ன சொல்ல முடியும்? பள்ளிகளிலும் இவற்றைச் சொல்லித் தருவது நின்று போய் ஐம்பது வருஷங்களுக்கும் மேல் ஆகின்றன. :( இறைவன் மனம் வைத்தால் தான் உண்டு.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு. படங்களுக்கு ஏற்ற கவிதை மிகவும் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..