நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 07, 2021

என்றும் அன்புடன்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..

இன்று அன்புக்குரிய எங்கள் Blog ல் எனது கதை வெளியாகியுள்ளது.. பொதுவெளியில் இது ஐம்பதாவது படைப்பு என்பதில்  மகிழ்ச்சியும் வியப்பும் மேலிடுகின்றது.. நானும் இத்தனை எழுதிவிட்டேனா!.. - என்று ஆச்சர்யம் தான்.. 

ஆயினும்   பதினைந்து மாதங்கள் ஆகின்றன - நான் கணினியில் இருந்து எனது படைப்புகளைச் செய்து.. 

தற்போதைய பதிவுகள் எல்லாம் கைப்பேசியின் வழியாகத் தான் செய்து கொண்டிருக்கின்றேன்.. பல்வேறு சமயங்களில் அயர்ச்சி தான் மேலிடுகின்றது..

இந்தக் கதையை சென்ற அக்டோபர் முதல் வாரத்தில் எழுதினேன்.. அதற்குப் பிறகு அக்டோபர் 15 ல் மற்றொன்று.. அந்தக் கதையை எபிக்கு அனுப்பி வைக்கவேயில்லை.. அதற்குப் பிறகு எந்தக் கதையும் எழுதவில்லை.. 

எனது படைப்பு என்று இனி வெளியிடுவதற்கு எபியின் வசம் எந்த ஒன்றும் இல்லை.. இங்குள்ள சூழலில் மீண்டும் எப்போது எழுதுவேன் என்பதும் எப்போது எபிக்கு அனுப்பி வைப்பேன் என்பதும் எனக்குத் தெரியவில்லை..

இது வரையிலும் என்னிடம் அன்பு காட்டி எனக்கு ஊக்கம் அளித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

கதையுடன் அழகான படங்களை இணைத்து அழகு செய்த திரு கௌதம் அவர்களுக்கும் 

இதுநாள் வரையிலும் எனது கதைகளை வாசித்து உற்சாகப்படுத்திய அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

கைப்பேசியில் இருந்து கொண்டு எபியின் பதிவுகள் அனைத்திற்கும் இணைப்பு தருவதற்கு இயலவில்லை..

இந்நிலையில் கிழ்வுடன் இப்பதிவினை வழங்குகின்றேன்..

-: 2020 :-

26 ஆலமரத்துப் பிள்ளையார் (7/ 1/ 2020)

27 தென்னம்பாளை (21/ 1/ 20)

28 சந்தோஷத் தோரணங்கள்.. (3/ 3/ 20)

29 செவ்வந்தி (17/ 3/ 20)

30 பூந்தூறல் (31/ 3/ 20)

31 ரயில் பயணங்களில் (14/ 4 / 20)

32 கல்யாண காலம் 12/ 5/ 20

33 ரேடியோ பெட்டி (26/ 5 / 20)

34 புது வீடு (9/ 6/ 20)

35 அப்பனும் அம்மையும் (23/ 6/ 20)

36 அம்மா The Great  (7/ 7/ 20)

37 பாரம் (29/ 9/ 20)

38 ஓவியம் (13/ 10/ 20)

39 குறிமேடை  (17/ 11/ 20)

40 கொலுசு -1 (8/ 12/ 20)

      கொலுசு - 2 (15/ 12/ 2020)


-: 2021 :-

41 அன்பின் வழியது (5/ 1/ 2021)

42 கதாநாயகி (19/ 1/ 21)

43 காற்றொடு காற்றாய் (2/ 2 /21)

44 பால் கொழுக்கட்டை (9/ 3 /21)

45 பொன்னுமணி (13/ 4 /21)

46 செல்லக்கிளி (11/ 5 /21)

47 அந்தக் காலத்துல (8/ 6 /21)

48 யாராவது சொல்லுங்க.. (13/ 7 /21)

49 அன்னபூரணி (3/ 8 /21)

50 தாயிற் சிறந்த கோயில் (7/ 9 /21)

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

மீண்டும் தங்களுடன் எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதுடன் -

விரைவில் கதையொன்றைத் தருவதற்கு முயற்சிக்கின்றேன்..

வாழ்க வளமுடன்... வாழ்கநலமுடன்...

***

8 கருத்துகள்:

 1. வாழ்த்துகளும், பாராட்டுகளும் துரை செல்வராஜூ ஸார்..   எழுதி அனுப்பாமல் வைத்திருக்கும் அந்தக் கதையையும் எங்களுக்கு அனுப்புங்கள்.  ப்ளஸ் மேலும் இரண்டு சிறுகதைகளாவது..  இந்த வருடம் முழுவதும் எல்லா மாதமும் உங்கள் கதை இடம்பெற்றது என்று ஆகும்.

  பதிலளிநீக்கு
 2. தேதியுடன் அழகாகத் தொகுத்து சொல்லி இருக்கிறீர்கள்.  அபப்டியே அததற்கு லிங்க்கும் கொடுத்திருந்தால் படிப்பவர்கள் ஏதாவது விட்டுப் போயிருந்தால் அப்படியே அங்கு சென்று படிப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள். பாராட்டுகள் துரை. அழகான தொகுப்பு. விரைவில் உங்களுக்குக் கணினியில் கதை எழுதி/கருத்துகள் சொல்லி/பதிவுகள் போட்டு என அமைய வேண்டும். கைபேசியில் எல்லாம் எனக்கு எழுதவே முடியாது. கை வலிக்கும் என்பதோடு தமிழுக்கு மாறினால் சில/பல பிரச்னைகள் இருக்கு. ஆகையால் மொபைலில் ஆங்கிலம் தான். வேறே வழியில்லை.

  பதிலளிநீக்கு
 4. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
 5. கதைகள் எழுத உங்களுக்கு வசதி, வாய்ப்பு அமைய வாழ்த்துக்கள்.

  கதை தொகுப்புக்கு நன்றி.

  50 ஆவது படைப்புக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 6. ஐம்பதாவது கதை - மகிழ்ச்சி ஐயா. மேலும் பல சிறப்பான கதைகளை எழுதி வெளியிட வாழ்த்துகள்.

  தொடரட்டும் உங்கள் கதைகள்.

  பதிலளிநீக்கு
 7. இந்தக் கதைகளை எல்லாம் தொகுத்து ஒரு நூலாக, மின்னூலாகவேனும் வெளியிட வேண்டும் ஐயா. மின்னூலாகத் தொகுக்க உதவி தேவை என்றால் சொல்லுங்கள். வெளியிட்டு விடலாம்.

  பதிலளிநீக்கு
 8. மகிழ்ச்சி. மனம் நிறைந்த வாழ்த்துகள். பல்வேறு கருப்பொருளில் அமைந்துள்ள உங்களின் கதைகளை ரசிப்பவர்களில் நானும் ஒருவன். வாசகர்களுக்கு வசதியாக வரிசையாகத் தந்தவிதம் சிறப்பு. திரு வெங்கட் நாகராஜ் கூறுவது போல தொகுப்பாக நீங்கள் கொணர முயற்சிக்க வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..