நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 19, 2021

தென்னாங்கூர் தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***

புரட்டாசி மாதத்தின்
முதல் சனிக்கிழமை ஆகிய
நேற்று
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசிக்கு அருகிலுள்ள
தென்னாங்கூர் க்ஷேத்திரம்
ஸ்ரீ ரகுமாயி உடனாகிய
ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோயிலில்
நிகழ்ந்த திவ்ய தரிசனம்..

Fb வழியே
காலையில் தரிசிக்கக்
கிடைத்தது...

நான் பெற்ற இன்பம்
பெறுக இவ் வையகம் -
என்று, இக்காணொளி
இன்றைய பதிவில்!.…

 பெருமாள் தரிசனத்தை
Fb ல் வலையேற்றிய
நல்ல உள்ளங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***

கீழுள்ள படங்கள்
இணையத்திலிருந்து
பெறப்பட்டவை..
அனைத்தும் நம்மை
ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் ஆழ்த்துபவை..

ஸ்ரீ பாண்டுரங்க தரிசனத்தைப் பற்றி
பதிவில் எழுதும்போது
மனதில் எழுந்த
சில வரிகள்..


விண்தாங்கு புகழ் கொண்ட
வைகுந்தன் பேர் பாடி
மண்தாங்கு உயிர்களும்
மடியேந்தி நின்றன..
கண்தாங்கு கருணையில்
கரியவன் மனங் கொண்டு
பண்தாங்கு  தென்தமிழ்
நாங்கூரில் வந்து நின்றான்!..


ஆண்டு கொள் எமை யென்று
அடியவர் ஏத்திடவும்
பாண்டு ரங்கன் என வந்த
வடிவனே வளர்சோதி நிலவனே!.
பூண்டு கொள் தமிழ் மாலை
என்றவர் புகழ் சாற்ற
வேண்டுவார் விழிகளில்
ஒளியான உத்தமன் வாழ்க வாழ்க!..


வருமாயை தனை தீர்க்க
ரகுமாயி வந்தனள் போற்றி
 தனமகள் தன்னோடு
முகிலான ரங்கனே போற்றி..
திருவாகி விளைவாகி பொருளாகி நின்றனை போற்றி..
அருளாகி தென்னாங்கூர் தனையாளும் மன்னனே போற்றி!..


மருளாகித் தவிக்கின்ற
மனதினில் ஒளியாகி
இருளானவை தீர்க்கும்
தென்னனே போற்றி போற்றி..
கருவான உயிர்கட்கு கருணையே அருள்கின்ற
திருவான மூர்த்தியே
போற்றி.. போற்றி!..
***
சர்வம்
ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்..
 ஃஃஃ

12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்களுக்கு நல்வரவு..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. தரிசனத்துடன் உங்களின் அழகான தமிழில் அருமையான வரிகள் துரை அண்ணா. உங்கள் வரிகளை மிகவும் ரசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோ.
   தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அருமையான போற்றி மாலை. தரிசனத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்.
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி.

   நீக்கு
 4. அருமையான தரிசனம். இந்த கோயிலுக்கு போய் இருக்கிறோம்.
  மிகவும் அழகாய் இருக்கும். நாங்கள் போன போது காதில் மகரகுண்டலம் போட்டுக் கொண்டு இடுப்பில் கை வைத்துக் கொண்டு இருக்கும் ராஜ அலங்காரம்.
  உங்கள் கவிதை பூமாலை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகைக்கு
   மகிழ்ச்சி..

   ஊருக்குத் திரும்பியதும் சென்று தரிசிக்க ஆவல்..

   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி..
   வாழ்க வையகம்..

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. பாண்டுரங்கனின் படங்கள், தென்னாங்கூர் பெருமாளின் திவ்ய தரிசன காணோளி அனைத்தும் அருமை.பாண்டு ரங்கனுக்கு சாற்றிய தங்களின் பாமாலை வரிகள் வழக்கம் போல் மிக அருமை பக்தியுடன் பாடி மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்த வருகையும் தங்கள் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. தென்னாங்கூருக்கும் போனோம். அருமையான தரிசனம் கிடைத்தது. இங்கேயும் அருமையான தரிசனங்கள். மிக்க நன்றி பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..