நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 25, 2021

கோவிந்த தரிசனம் 2

  

நாடும் வீடும் நலம்
பெற வேண்டும்
பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி மாதத்தின்
இரண்டாம் சனிக்கிழமை..

இன்றைய பதிவில்
ஸ்ரீ பூதத்தாழ்வார்
அருளிச் செய்த
இரண்டாம் திருவந்தாதியின்
திருப்பாசுரங்களுடன்
திரு அல்லிக்கேணி
ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள்
திவ்ய தரிசனம்
***

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை யிடுதிரியா நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.. 2182

அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய் படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அறிந்து?.. 2186


பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை புல்லுயிரும் காவலனே ஏத்திய
நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
காவடியேன் பட்ட கடை.. 2191


கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,
ஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது - உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,
வான்கடந்தான் செய்த வழக்கு.. 2199


தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன்.. 2204


மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான் முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன்.. 2209


அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்
அமுதன்று கொண்டுகந்தான் என்றும் அமுதன்ன
சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,
நன்மாலை யேத்தி நவின்று.. 2266
***
கீழுள்ள காணொளியில்
ஸ்ரீ ஹரி பரந்தாமன்
அரவணையில் 
பெரிய பெருமாளாகக்
கிடந்தருளும்
திவ்ய தேசம் எது என்று
தெரியவில்லை..


ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

10 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. புரட்டாசி மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையான இன்று திருஅல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளின் தரிசனம் பெற்றுக் கொண்டேன். பக்தி பாசுரங்களுடன் பெருமாளின் படங்கள் அனைத்தும் கண்ணுக்கும், மனதுக்கும் விருந்து. காணொளியிலும் அனந்த சயன பெருமாளை கற்பூர ஒளியில் கண்ணாற கண்டு தரிசனம் செய்து கொண்டேன். நாராயணன் அனைவரையும் நலமுடன் காத்தருள மனமுருக பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ஓம் நமோ நாராயணாய நமஃ

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்திற்கு நன்றி..

   ஓம் நமோ நாராயணாய..

   நீக்கு
 2. புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை பதிவு அருமை.  இன்று எனக்கிருக்கும் மனக்குழப்பத்துக்கு அந்தப் பெருமாள்தான் வழிகாட்ட வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   கோவிந்தன் இருக்கக் குறைகள் ஏது?..

   நாரணன் அருளால் அனைத்தும் நலமாகும்...

   ஹரி ஓம்...

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை பதிவு அருமை.
  பெருமாளின் தரிசனம், பூஜை பார்த்து மகிழ்ந்தேன்.
  ஸ்ரீராம் அவர்களின் மனக்குழப்பத்தை பெருமாள் போக்க வேண்டும்.

  எல்லோரும் நலமாக வாழ பெருமாள் அருள்புரியவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்திற்கு நன்றி..

   வாழ்க வையகம்..
   ஓம் நமோ நாராயணாய..

   நீக்கு
 5. அல்லிக்கேணி பெருமாள், மற்றும் அனந்த சயன பெருமாள் தரிசனம் அற்புதம்! திருமயம் பெருமாளோ?

  பதிலளிநீக்கு
 6. இந்தப் பதிவைப் பார்க்கவில்லை. அருமையான தரிசனத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..