நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 13, 2021

தேவி தரிசனம் 4

  

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி மாதத்தின்
நான்காவது வெள்ளிக்கிழமை..

பதினாறு பேறுகளையும்
தந்தருளும்
அம்பிகையின் திருவடிகளைச்
சிந்தித்திருப்போம்..


தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ் அடிமை 
செய்திட்ட பிழை இருந்தால் சினம் கொண்டு அது ஓர் 
கணக்காக வையாது நின் திரு உளம் இரங்கி மிகவும்
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து
இன்னல் படாது நல் வரம்அளித்துப்  பாதுகாத்து அருள் செய்ய 
வேண்டும் அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி!
புரந்தரன் போதன் மாதவன் ஆகியோர்கள் துதி புரியும் 
பதாம்புய மலர்ப் புங்கவி புராந்தகி புரந்தரி புராதனி
புராணி திரி புவனேசுவரி
மருந்தினும் நயந்த சொல் பைங் கிளி  வராகி எழில் 
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே!..
(அபிராமி திருப்பதிகம்)


புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.. 41

தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள் அபிராமி கடைக்கண்களே.. (6


தாமம் கடம்பு படை பஞ்ச பாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே.. (73)
-:  ஸ்ரீ அபிராம பட்டர் :-கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பிஎன் னுள்ளே நயந்துவைத் தேனே..(14)
(நான்காம் தந்திரம் - சக்தி பேதம்)
-: திருமூலர் :-

அம்பிகையைச் சரணடைந்தால்
அதிக வரம் பெறலாம்..
-: மகாகவி பாரதியார் :-

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

10 கருத்துகள்:

 1. சக்தி ஓம்....   அதற்குள் ஆடி வெள்ளி நான்காவது வாரம் வந்து விட்டது.  இன்று கருட பஞ்சமி.  சகோதரி அளிக்கப்போகும் அன்புப்பரிசை ஏற்கும் நாள்! 

  பதிலளிநீக்கு
 2. ஆடி வெள்ளிக்கு அப்பிகையின் பாடலக்ளை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 3. ஓம் சக்தி ஓம்...

  ஆடி வெள்ளியில் அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  ஆடி வெள்ளி நான்காம் வார பதிவு அருமை. அம்பிகையின் அழகான படங்கள் மனதிற்கு மகிழ்வூட்டுகின்றன. அபிராமி அந்தாதி பாடி,அம்மனருள் இப்பூலகில் வாழும் அனைவருக்கும் சிறப்புடன் கிடைத்திட வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொண்டேன்.

  தாங்கள் என் தளம் வந்து நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றிகள். நேற்று கருடபஞ்சமி, அதற்கு முன் தினம் நாக சதுர்த்தி விரத பூஜைகளில் நேரம் சரியாக இருந்தது. (அதனால் இருதினங்களாக வலைத்தளம் வர இயலவில்லை.) இன்று என் பதிவில் தங்களுக்கு பதில் தந்து விட்டு சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்கள் பதிவில் சென்று முதலில் வரும் இன்றைய வாசகத்தை படித்ததும் மிகவும் மகிழ்வெய்தி விட்டேன். அவர் பதிவில் முதலில் அவர் பகிரும் வாசகங்கள் சிறப்பானவை. எப்போதுமே விரும்பி படிப்பேன்.அவருக்கும் நன்றி. உங்கள் ஆடி வெள்ளி பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட? நீங்களும் கருட பஞ்சமி, நாக சதுர்த்தி செய்வீங்களா? இங்கே எதிரே ஒரு மாத்வ மாமி பண்ணிக் கொண்டிருந்தார். இப்போக் காலி பண்ணிப் போயிட்டார்.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   நலமா? எப்படி உள்ளீர்கள்? கால் வலி கொஞ்சமாவது குறைந்துள்ளதா? நீங்கள் வழக்கம் போல் கலகலப்பாக வலைத் தளங்களுக்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

   ஆமாம். எங்களுக்கும் இந்த நோன்புகள் உண்டு. நாக சதுர்த்தி நம் குழந்தைகளுக்காக விரதம் இருப்பது. கருட பஞ்சமி உடன் பிறந்த அண்ணன் தம்பிகளுக்காக விரதம் இருப்பது என இந்த விரதங்கள் எங்களுக்கு இருந்து வருகின்றன. நான் இப்பொழுதுதான் உங்கள் கருத்தை இங்கு வந்து பார்க்கிறேன். விசாரித்தமைக்கு நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 5. தேவி தரிசனத்திற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு