நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 05, 2021

ஜெய் ஹிந்த்


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

நவீன தொழில் நட்பங்களைப் பயன்படுத்தி முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து, உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போர் கப்பலான விக்ராந்த் தனது சோதனை ஓட்டத்தை நேற்று (4/8) அரபிக் கடலில் தொடங்கியுள்ளது. 


இந்திய கடற்படைக்காக இப்போர் கப்பல், கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 25.6 மீட்டர் உயரம் கொண்ட இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர் கப்பல் என்ற சிறப்பம்சத்தினைப் பெற்றுள்ளது. 

கப்பலின் வடிவமைப்புப் பணிகள் 1999-ல் தொடங்கியது. 2009-ல் கப்பலின் அடித்தளம் அமைக்கப் பட்டது. படிப்படியாக பணிகள் நிறைவடைந்து 2020 டிசம்பரில் அடிப்படை சோதனைகள் முடிவடைந்த நிலையில் நேற்று (ஆக., 04) தனது முதல் சோதனை ஓட்டத்தை அரபிக் கடலில் விக்ராந்த் துவங்கியது. 

பிரம்மாண்ட கப்பலின் சோதனைப் பயணம் நான்கு நாட்கள் நடைபெறும்.


இச்செய்தியைப் பகிர்ந்துள்ள கடற்படை செய்தித் தொடர்பாளர் -

“ இதன் முன்னோடி விக்ராந்த், 1971 போர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஐம்பதாம் ஆண்டில், அதன் மறுபிறப்பான இன்றைய விக்ராந்த் தனது முதல் சோதனை கடல் பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறது. இந்தியாவிற்கு பெருமை மிகுந்த மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நாள். இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான போர்க்கப்பல்.. ” - எனக் குறிப்பிட்டுள்ளார்...

நன்றி : தினமலர் செய்தி தளம்..


வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல் முழுதும்
கப்பல் விடுவோம்..

பள்ளித் தலமனைத்தும்
கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று 
தோள் கொட்டுவோம்!..
-: மகாகவி பாரதியார் :-

வாழ்க பாரதம்
வெல்க பாரதம்
ஜெய் ஹிந்த்
  ஃஃஃ

6 கருத்துகள்:

 1. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது, உருவாக்கப்பட்டது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.  போற்றுவோம்.

  பதிலளிநீக்கு
 2. பெருமைக்குறிய விடயம் வாழ்க பாரதம்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  நல்ல செய்தி. நல்ல விஷயத்தை தெரிவுபடுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்க பாரதம். என்றும் இதுபோல் தழைத்து வளர்க. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. பெருமை கொள்வோம் எங்கள் பாரத தேசம் என்று .

  வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே!

  பதிலளிநீக்கு