நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 13, 2021

துயர் தீர்கவே

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தஞ்சை
ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்தில்
ஸ்ரீ மஹா சிவராத்திரியன்று
மூன்றாம் காலத்தில்
அம்மையும் அப்பனும்
ரிஷப வாகனத்தில்
எழுந்தருளிய திருக்காட்சி..


அபிஷேக ஆராதனை - என,
நான்கு காலங்களிலும்
சிறப்புடன் நிகழ்ந்த
வழிபாடுகளின் போது
ஒரு லட்சம் பக்தர்கள்
தரிசனம் செய்ததாக
செய்தி..





இவ்வேளையில்
அம்மையப்பனைத் தரிசித்து
நாடெங்கும்
நலமும் நல்லறமும் தழைப்பதற்கு
வேண்டிக் கொள்வோம்..
***
கீழுள்ள படம்
பெரிய கோயிலை அடுத்துள்ள 
சிவகங்கைக் குளத்தின்
நடுத்திட்டில் அமைந்திருக்கும்
சிறு கோயிலில் விளங்கும்
சிவமூர்த்தி..


இது தான்
அப்பர் பெருமான் பாடியருளிய தஞ்சைத் தளிக்குளத்தார்
திருக்கோயில் என்று
தற்போது சொல்கின்றனர்..

இத்திருக்கோயிலில் இருந்து
தட்சிண மேருவின்
தரிசனம்..


தஞ்சை வெட்டாற்றின்
கரையிலுள்ள நெடார்
திருக்கோயிலில்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்
ஸ்ரீ மங்களாம்பிகை
தரிசனம்..




உவரி
ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி
திருக்கோயிலில்
ஸ்ரீ சந்திரசேகரர்
ஸ்ரீ மனோன்மணி அம்மை
திருக்காட்சி..



திரு ஐயாறு
ஸ்ரீ செம்பொற்சோதி
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
தரிசனம்..





வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!..
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

8 கருத்துகள்:

  1. நேற்று தஞ்சை கோவில் மஹா சிவராத்திரி காணொளி பார்த்தேன்.
    இன்று உங்கள் தளத்தில் அருமையான தரிசனம் கிடைத்தது.
    அம்மை அப்பன் அலங்கார திருக்காட்சிகள் மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது.
    நன்றி.

    ஓம் நமசிவாய

    பதிலளிநீக்கு
  2. தரிசனம் நன்று வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  3. சிவராத்திரி காணொளிகள் இந்த வருடம் அதிகம் வரலை. கிடைத்தவரை பார்த்தேன். தஞ்சைத் தளிக்குளத்தார் கோயிலை இடித்துவிட்டு அங்கே பெரிய கோயில் கட்டிய செய்தியைக் "காலச்சக்கரம் நரசிம்மா" விவரித்திருக்கிறார். ஆனால் சிவகங்கைக்குளத்தில் நடுவில் ஈசன் இருப்பதும் அது தான் தளிக்குளத்தார் கோயில் என்பதும் புதிய செய்தி. அடுத்த முறை போனால் தேடிப் பிடித்துப் பார்க்கணும். மற்றப் படங்களும் சிறப்பு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான தரிசனம். தொகுத்துத் தந்தமைக்கு நன்றி.
    தஞ்சைத் தளிக்குளம் தளிக்குளநாதர் கோயில் என்ற தலைப்பில் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையில், அக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்ற நாளின் (10 நவம்பர் 2019), அடுத்த நாளான 11 நவம்பர் 2019 அன்று சென்று புகைப்படங்களை எடுத்து இணைத்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது நண்பர்களை, அக்கட்டுரையைக் காண வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அழகிய புகைப்படங்கள்! சிவகங்கை குளத்தின் நடுவே இருக்கும் ஆலயம் தான் தனிக்குளத்தார் ஆலயம் என்பது புதிய செய்தி! ஆனால் அந்தக்கோவிலுக்கு இப்போது படகுகள் செல்வதில்லையல்லவா?

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..