நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 24, 2021

கல்யாண தரிசனம்

              

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று (23.3.21)
திருமழபாடி
ஸ்ரீ சுந்தராம்பிகை உடனாகிய
ஸ்ரீ வைத்யநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற
ஸ்ரீ நந்திகேஸ்வரர் திருக்கல்யாண
வைபவத் திருக்காட்சிகள்..

வலை தளத்தில்
திருக்கல்யாண வைபவங்களைப்
பதிவேற்றம் செய்த
தருமபுர ஆதீனத்தார் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
**
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..

ஸ்ரீ நந்திகேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஸ்ரீ சுயம்பிரகாஷிணி திருவடிகள் போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ


16 கருத்துகள்:

 1. மகனுக்கு பெண் தேடிக்கொண்டிருக்கிறேன்.  நல்லபடியாய் அமைய நந்தீஸ்வரர் அருளவேண்டும்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு... எல்லாம் நல்ல விதமாக நடந்தேறுவதற்கு நானும் வேண்டிக் கொள்கிறேன்...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. நேத்திக்குத் தொலைக்காட்சிகளில் இதைக் காட்டினதாய்த் தெரியலை. இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி. அழகான காட்சிகளைக் கண் நிறையக் கண்டு மகிழ்ந்தாயிற்று. ஸ்ரீராமின் மகனுக்கு நந்தீஸ்வரர் அருளால் விரைவில் பெண் கிடைக்கவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
   அனைவரது வாழ்விலும் நலமும் வளமும் நிறைந்திட எம்பெருமான் நல்லருள் புரிவாராக.. நந்தீசன் துணை...

   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

   நீக்கு
 3. ஒரு முறை நேரில் இந்நிகழ்வினைக் கண்டுள்ளேன். நம் இல்லத்தில் நடைபெறும் திருமணத்தைப் போலவே இருக்கும். அப்பப்பா..இது போன்ற விழாக்களைக் காணவும், கேட்கவும் நாம் அதிகம் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   தாங்கள் சொல்வது போல இத்திரு விழாக்களைக் காண்பதற்குப் பெரும் புண்ணியம் செய்திருக்கத்தான் வேண்டும்.

   சோழ மண்டலத்தில் தொன்றுதொட்டு நடந்து வரும் திருநாளாகும் இது..

   தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. நல்லதொரு தரிசனம். இது போன்ற நிகழ்வுகள் அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்பவை.

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. அன்பின் ஜி..

  தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  நல்ல தரிசனம். அழகான நந்தியம் பெருமானின் கல்யாண அபிஷேகப் படங்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றன. இன்று தங்கள் பதிவில் நந்திஸ்வரரின் அனைத்து கல்யாண திருப்படங்களை கண்டு மகிழ்வுடன் வழிபட்டு கொண்டேன். எவ்வளவு கூட்டம்... அனைவருக்கும் அவரருள் பரிபூரணமாக கிடைத்திட வேண்டிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   நேற்று இவ்வைபவத்தை என் மனைவியும் என் மகனும் தரிசித்து வந்திருக்கின்றனர்.

   கோயிலுக்குள் செல்வதற்கு இயலாதபடிக்கு பெருங்கூட்டமாம் அங்கு...

   அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. எனக்கும் என் உறவினர் அனுப்பி வைத்தார் தரிசனம் செய்தேன்.
  இன்று உங்கள் தளத்திலும் கண்டு மகிழ்ந்தேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. அபிஷேக காட்சிகள் அவர்கள் அனுப்பவில்லை, திருமணவிழா அனுப்பினார்கள்.
  உங்கள் தளத்தில் அபிஷேக காட்சிகளும் பார்த்து மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..