நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 26, 2020

அன்பின் ஆரமுது

இன்று ஆனி மகம்..

உதயத்திலிருந்து நண்பகல் வரை
மக நட்சத்திரம்..


ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான்
தில்லைத் திருச்சிற்றம்பலத்தில்
ஜோதியாய்க் கலந்த நாள்..

பெருமானைக் குறித்து
விரிவாக மனம் சிந்தித்தாலும்
இணையப் பிரச்னையின் காரணமாக
எழுத்துருவில் கொணர்வதற்கு
இயலவில்லை...
***

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கும்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே 
யானுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
எங்கெழுந்து அருளுவது இனியே!...


நாடெல்லாம் நலங்கொண்டு
வாழ்தல் வேண்டி 
அதற்கென உழைத்து 
பற்பல இன்னல்களையும்
தாங்கிக் கொண்டு
பொன்னெனப் பொலிந்த
உத்தமர்..

மதுரை மா மண்டலத்தின்
முதலமைச்சராக வீற்றிருந்தும்
எளிய துறவு வாழ்க்கை வாழ்ந்த
மகா ஞானி..

அதனாலேயே அவர் பொருட்டு
எம்பெருமான் கூலியாளாய் ந்து 
கோமகனின் கோலால் அடிபட்டதாக
திருவிளையாடல் நிகழ்த்தினான்..

மாணிக்கவாசகர் காட்டிய
அற வாழ்க்கையை மேற்கொண்டு
இறைவனின் பேரருளுக்கு
ஆட்படுவோம்...

மாணிக்கவாசகப் பெருமானால்
கட்டிக் காக்கப்பட்ட
நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..

மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

21 கருத்துகள்:

  1. நமச்சிவாயம் நம்மைக் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      நம சிவாயம் நம்மைக் காக்கட்டும்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நமச்சிவாய வாழ்க.... நாதன் தாள் வாழ்க....

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய வெள்ளிக்கிழமை காலைக்கான வணக்கங்கள்.
      மனத்திலிருத்தி இறைவனத் துதிக்க வேண்டிய நாட்கள் கோவில் பக்கம் போக முடியவில்லையே.
      அதுதான் அவரே இங்கே வந்து விட்டார்.
      ஈசனையும் அம்மையையும் துதித்த மாணிக்க வாசகப்
      பெருமான் உருகிய அளவு முடியாவிட்டாலும்
      சிறிதாவது பக்தி நம் இதயத்தில் தேங்கட்டும்.

      நீக்கு
    2. அன்பின் வெங்கட்...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
    3. அன்புன் வல்லியம்மா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஓம் நமசிவாய...
    உலகை காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
      சிவாய நம ஓம்..

      நீக்கு
  4. மாணிக்கவாசகர் குருபூஜை சிறப்பு பதிவு அருமை.
    நேற்று திருவாசகம் முற்றோதல் செய்தோம் .

    ஊரும் உலகமும், நாடும் வீடும் நலம் பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      திருக்கோயில்களில் திருவாசக முற்றோதல் வழக்கம் போல நிகழ்ந்ததா என்று தெரிய வில்லை...

      தங்கள் பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சிக்கெனப் பிடித்தேன்.........இதற்கு இணையாக வேறு எந்த ஒரு சொல்லையாவது கூறமுடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வினாவிற்கு விடையேதும் இல்லை..
      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. சிதம்பரத்தில் இன்று கோலாகலமாக இருக்கும். மாணிக்கவாசகர் எல்லாத் திருவிழாக்களிலும் அங்கே இடம் பெறுவார். அவருடைய திருவாசகத்துக்குப் பின்னரே பெரிய தீப ஆராதனை நடைபெறும். நாங்க திருவாதிரை சமயம் பார்த்திருக்கோம். தருமை ஆதீனத்து ஓதுவார்கள் திருவாசகம் முதல் பஞ்சப் புராணங்களும் ஓதுவார்கள். தினமுமே பஞ்சப்புராணங்களும் ஓதப்படும். ஒவ்வொரு கால பூஜையிலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் மேலதிக செய்திகளுக்கும் மகிழ்ச்சி..

      தில்லை தரிசனம் செய்திருக்கிறேன்... நன்றியக்கா..

      நீக்கு
  7. மாணிக்கவாசகரைப் பற்றிய தகவல்கள் அருமை.

    நலமே விளைந்திடட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஓ நமசிவாய என்று சொல்லி உலகம் முழுவதும் தொற்று நீங்கி எல்லோரும் நலமுடன் இருந்திட பிரார்த்திப்போம். மாணிக்காவாசர் குருபூஜை பதிவு சிறப்பாக இருக்கிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      கருத்துரைக்கு நன்றி துளசிதரன்...

      நீக்கு
  9. "அன்பினில் விளைந்த ஆரமுதே"., என்னே ஒரு expression and simile used here! Good to read.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களுக்கு நல்வரவு...
      தங்களது முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..